தி காஞ்சரிங் 2 விமர்சனம் (THE CONJURING 2 REVIEW) – 54 மார்க்

Tamil Hollywood The-Conjuring-2-Poster

பயத்தில் கத்துவதைக் கேட்பதற்கு எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனால்தான் குழந்தைகளை பயமுறுத்துகிறேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறது ஒரு பேய். இதைத்தான் இயக்குனர் ஜேம்ஸ் வான்செய்திருக்கிறார். படம் பார்க்கும் ரசிகனை கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் இழுத்து… பேய் வரும்போது அலற வைப்பதில்தான் அமானுஷ்ய படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில் திக்திக் என திகில் கிளப்புவதால்,  தி காஞ்சரிங் 2 (The Conjuring 2) – நிச்சயம் பார்க்கவேண்டிய பேய்ப்பட பட்டியலில் சேர்கிறது.

Tamil Hollywood - The Conjuring 2 Review 4வேப்பிலை, திருநீறுடன் நம்மூரு மந்திரவாதிகள் பேய் விரட்டுவதை, கேமரா வைத்துக்கொண்டு விஞ்ஞான முறையில் சிலுவை துணையுடன் செய்கிறார்கள் பாட்ரிக் வில்சனும் அவனது காதல் மனைவி வேரா ஃபார்மிகாவும். ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே ஆவி இருக்கிறதா என்பதை தன்னுடைய உள்ளுணர்வால் உணரும் சக்தியுடன் இருக்கிறாள் வேரா. ஆவி எதற்காக அட்டகாசம் செய்கிறது என்பதை கண்டறிந்து விரட்டுவதுதான் இவர்களது வேலை.

ஒரு கன்னியாஸ்திரி ஆவி வேரா முன்பு தோன்றி, அவளது கணவன் வில்சன் உயிருக்கு ஆபத்து இருப்பதை எச்சரிக்கிறது. அதனால் பேய் விரட்டும் வேலையை விட்டுவிட முடிவெடுக்கிறாள் வேரா. இந்த நேரத்தில்தான் இங்கிலாந்தில் ஏழை அம்மாவுடன் வசிக்கும் நான்கு குழந்தைகள் ஆவியின் பிடியில் சிக்குகிறார்கள். குறிப்பாக சிறுமி ஜேனட் ஆவியின் மிரட்டலுக்கு ஆளாகிறாள்.

Tamil Hollywood - The Conjuring 2 Reviewஉண்மையில் ஆவியின் பிடியில் இருக்கிறாளா ஜேனட் என்பதை கண்டறியுமாறு எட் வாரனாக வரும் பாட்ரிக்கையும் லோரைன் வாரனாக வரும் வேரா ஃபார்மிகாவையும் இங்கிலாந்துக்கு அனுப்புகிறது சர்ச். அந்த வீட்டுக்குப் போனபிறகும் லோரைனுக்கு பேய் இருக்கும் உணர்வு எதுவும் ஏற்படவில்லை என்பதால், ஆவி இருக்கிறதா என்ற சந்தேகத்துக்கு ஆளாகிறாள். அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்தாலும், எல்லாமே திட்டமிட்டு செய்யப்படுவதாகவும் தெரிகிறது. ஜேனட் பேச்சில் பொய் இல்லை என்றாலும் நம்பும் காட்சிகள் எதுவும் ஆவியின் விளையாட்டாகத் தெரியவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதனால் அறைகுறை மனதுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.

தங்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்புவதற்காக யாரோ திட்டமிட்டு இப்படிப்பட்ட காட்சிகளை ஜோடிக்கிறார்களோ என்று பாட்ரிக் யோசிக்கத் தொடங்கியபிறகே, லோரைனுக்கு உள்ளுணர்வு தோன்றுகிறது. ஜேனட்டை மிரட்டும் கிழட்டுப் Tamil Hollywood - The Conjuring 2 Reviewபேயை சந்திக்கிறாள். தன்னுடைய குடும்பம் இந்த வீட்டில் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக வந்தேன். இப்போது நான் ஆவிகள் உலகத்திற்கு போக ஆசைப்படுகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை என்று சொல்கிறது. மேற்கொண்டு கிழட்டுப்பேய் எதுவும் பேசும்முன்பு, கொடூரமாக அவரை இழுத்துச்செல்கிறது கன்னியாஸ்திரி பேய்.

ஜேனட் மற்றும் குழந்தைகளின் உயிர்களை அடைவதற்காக கன்னியாஸ்திரி பேய் இத்தனை நாட்களும் கிழட்டுப் பேயை வைத்துக்கொண்டு நாடகம் ஆடியது தெரியவருகிறது. தன்னை தொடர்ந்துவந்தால் அல்லது விரட்ட முயற்சித்தால் பாட்ரிக் மரணம் அடைவான் என்று எச்சரிக்கை செய்கிறது.

Tamil Hollywood - The Conjuring 2 Reviewசாத்தானாக உருமாறியிருக்கும் கன்னியாஸ்திரி பேயின் உண்மை பெயரை அறிந்துகொண்டால், அந்தப் பேயை இந்த உலகில் இருந்து விரட்டிவிடலாம் என்று தெரிந்தாலும், பெயர் தெரியாமல் தவிக்கிறார்கள். அதற்குள் ஆவியின் அட்டகாசம் அதிகரிக்கிறது. கொடூரமாக ஜேனட்டை இழுத்துச்செல்கிறது, அவளை காப்பாற்றச் செல்லும் பாட்ரிக்குடன் சேர்த்து வீடு மூடிக்கொள்கிறது.

வெளியே இருந்து கணவனை காப்பாற்றத் துடிக்கிறாள் லோரைன். கணவன் எப்படி மரணம் அடைவான் என்று பேய் காட்டிய காட்சிகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடக்கின்றன. சாத்தானின் பெயரைக் கண்டுபிடித்து விரட்டினார்களா அல்லது பேய்ப்பட இலக்கணப்படி அனைவரும் செத்துப்போகிறார்களா என்பதுதான் மீதிப்படம்.

நம்பவே முடியாதவற்றையும் சில நேரம் நம்பத்தான் வேண்டும் என்ற லாஜிக் இந்தப் படத்தை செமத்தியாக தூக்கி நிறுத்துகிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தின் காட்சிகள் தொகுக்கப்பட்டிருப்பதாகவும், வாழ்ந்த நபர்களின் படங்களையும், காட்சிகளையும் காட்டுவதால் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. எதிர்பாராத நேரங்களில் மட்டும் பேயைக் காட்டி, இதயத்தை எகிற வைத்திருப்பதால் பார்க்கவேண்டிய படமாக மாறிவிட்டது.

பேய் பட ரசிகர்களுக்கு  : 54 மார்க்

பொதுவான ரசிகர்களுக்கு : 48 மார்க்

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

  • குலை நடுங்கவைத்த ஸா, இன்சிடியஸ், தி காஞ்சரிங் போன்ற படங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால், எந்தெந்த நேரங்களில் மட்டும் பேயைக் காட்ட வேண்டும் என்பது ஜேம்ஸ் வானுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
  • மலேசியாவில் பிறந்த ஜேம்ஸ் வான், அடுத்து தி காஞ்சரிங் 3 எடுக்க திட்டமிட்டு வருகிறார்.
  • con2-fp-010ஆர்பன், தி காஞ்சரிங் படங்களில் நடித்திருக்கும் வேரா ஃபார்மிகா இந்தப் படத்தில் குறைவாக நடித்து நிறைவாக ஸ்கோர் செய்கிறார்.
  • பயம்தான் நம்மைக் கண்டு பயப்படவேண்டும் என்று எந்த நேரமும் துணிச்சலாக களம் புகும் பாட்ரிக் நடிப்பும் மிரட்டவே செய்கிறது.
  • குட்டி தேவதைகளாக வரும் லாரன் எஸ்போசிடோ, மாடிசன் வோல்ப்க்காகவும் பார்க்கவேண்டிய திரைப்படம்.

The Conjuring 2 is a 2016 American supernatural horror film directed by James Wan and written by Carey Hayes, Chad Hayes, Wan and David Leslie Johnson. It is the sequel to the 2013 film The Conjuring and starsPatrick Wilson and Vera Farmiga as paranormal investigators Ed and Lorraine Warren. The movie follows the Warrens travelling to the United Kingdom to assist the Hodgson family, who are experiencing poltergeist activity at their Enfield council house in 1977. The Conjuring 2 Review, The Conjuring 2, The Conjuring 2 Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 554 times, 63 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>