இரும்பை தேடும் கண்ணாடி – அன்பிரேக்கபில் (Unbreakable) – Movie Review

Unbreakable poster Tamil Hollywood

பாக்காம விட்றாதீங்க – அன்பிரேக்கபிள்:

படிக்காத மக்கு பையனுக்கு புத்திசாலி பையனை பார்க்க பிரமிப்பாக இருக்கும். அதேபோல் இப்படியும் ஒரு  மக்கு எப்படி இருக்கும் என்று புத்திசாலியும் ஆச்சர்யபடுவான். ஏனென்றால் எதிரெதிர் திசைக்கு ஈர்ப்பு அதிகம். கண்ணாடியைப் போன்று எளிதில் உடைந்துவிடும் எலும்புகளுடன் பிறக்கும் ஒருவனும், எப்போதும் உடைந்துபோகாத இரும்பு போன்ற உடலுடன் ஒருவனும் சந்திக்க நேர்ந்தால் என்னவாகும் என்பதுதான் அன்பிரேக்கபிள். அங்கங்கே நைட் சியாமளனின் டச் இருப்பதால் பார்க்கவேண்டிய பட்டியலில் சேர்கிறது அன்பிரேக்கபிள்.

Unbreakable 1 Tamil Hollywoodஉடைந்த எலும்புகளுடன் பிறக்கிறான் எலிஜா. அவனுக்கு ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்டா என்ற எலும்புக் குறைபாடு என்பதால், ஜாக்கிரதையாக வளர்க்கவேண்டும்  என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அடிக்கடி எலும்புகள் உடையும் எலிஜாவை கண்ணாடி பையன் என்று அழைக்கிறார்கள். எலிஜா வளர்ந்து சாமுவேல் ஜாக்‌சனாக மாறுகிறான். காமிக்ஸ் புத்தகங்களுக்கு படங்கள் வரைகிறான். வாழ்க்கையில் அதிக அளவில் எலும்பு முறிவுகளை சந்தித்தவனாக இருக்கிறான் சாமுவேல்.

UNBREAKABLE, Bruce Willis, 2000

நியூயார்க் நகரில் இன்டர்வியூ முடித்துவிட்டு பிலடெல்பியாவுக்கு ரயிலில் திரும்புகிறான் டேவிட் டூன் ஆக வரும் புரூஸ் வில்லிஸ். ஃபுட்பால் வீரனாக இருந்த புரூஸ், ஒரு கார் விபத்துக்குப்பிறகு விளையாட்டை விட்டு செக்யூரிட்டி கார்டாக வேலை பார்க்கிறான். மனைவி ஆன்ட்ரேவுக்கு (ராபின் ரைட்) ஃபுட்பால் பிடிக்காது என்பதால், விளையாட்டுக்கு முழுமையாக  முழுக்கு போட்டுவிட்டு இயல்பாக வாழ்ந்து வருகிறான். அவன் திரும்பிவரும் ரயில் விபத்தில் சிக்குகிறது. அந்த ரயிலில் பயணம் செய்த 131 பயணிகளும் மரணத்தைத் தழுவ, புரூஸ் மட்டும் அந்த விபத்தில் இருந்து தப்புகிறான். விபத்தில்  தப்புவது மட்டுமின்றி, உடலில் எந்த காயமும் புரூஸுக்கு இல்லை.

Unbreakable 10 Tamil Hollywoodஇதனை அறிந்து புரூஸை சந்திக்கிறான் சாமுவேல். இதுவரை உனக்கு எப்போதாவது நோய் ஏற்பட்டிருக்கிறதா, விபத்தில் சிக்கியிருக்கிறாயா என்று புரூஸிடம் கேட்கிறான். அதுபற்றிய நினைவுகூட புரூஸ்க்கு இல்லை. நான் கண்ணாடியாக இருப்பதுபோல் நீ இரும்பாக இருக்க  வாய்ப்பு இருக்கிறது என்கிறான். அதற்கு வாய்ப்பு இல்லை, நான் சாதாரண மனிதன் என்று சொல்லி திரும்புகிறான் புரூஸ்.

Unbreakable 7 Tamil Hollywoodசாமுவேல் சொன்னதை புரூஸ் நம்புகிறானோ இல்லையோ புரூஸின் மகன் நம்புகிறான். தன்னுடைய தந்தை ஒரு சூப்பர்ஹூரோ என்று உறுதியாக நம்புவதால், பென்ச் பிரஸ் எடுக்கும்போது, புரூஸுக்குத் தெரியாமல் எடையை அதிகரிக்கிறான். வழக்கமாக 200 பவுன்ட்க்கும் குறைவாக பென்ச் பிரஸ் எடுக்கும் புரூஸ், அன்று 350 பவுன்ட்க்கும் மேலாக எடை தூக்குகிறான். தன்னுடைய உடல் பற்றிய ரகசியத்தை  மனைவிக்குக்கூட சொல்லாமல் மறைக்கிறான் புரூஸ்.

Unbreakable 4 Tamil Hollywoodமீண்டும் மீண்டும் புரூஸை சந்திக்கிறான் சாமுவேல். உனக்கு நிச்சயம் ஏதேனும் சக்தி இருக்கும் என்று சொல்கிறான். அப்போது ஸ்டேடியத்தில் ஒருவன் துப்பாக்கி வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறான் புரூஸ், ஆனால் அதை பரிசோதனை செய்து உறுதிபடுத்தாமல் அசட்டையாக இருக்கிறான். அந்த நபரை பின்தொடர்ந்து சென்று, அவனிடம் துப்பாக்கி இருப்பதை கண்டுகொள்கிறான் சாமுவேல். ஆனால், அந்த விரட்டலில் மேலும் 20 இடங்களில் காயம் உண்டாகிறது.

Unbreakable 6 Tamil Hollywoodசின்ன வயதில் புரூஸ் நீச்சல் குளத்தில் பயிற்சி செய்தபோது மூழ்கிப்போய், மிகுந்த சிரமத்துக்குப்பிறகு காப்பாற்றப்பட்டவன். அதனால் தண்ணீர் என்றாலே எனக்கு பயம், ஏற்கெனவே கார் விபத்தில் காயம் அடைந்து ஃபுட்பால் விளையாட்டை விட்டிருக்கிறேன், அதனால் நான் சாதாரண மனிதன் என்று மீண்டும் மீண்டும் சாமுவேலிடம் சொல்கிறான்.

Unbreakable 10 Tamil Hollywoodஉன்னிடம் இருக்கும் சக்திகளை பரிசோதித்துப் பார், நிச்சயம் நீ சூப்பர்ஹீரோ, ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் ஏதேனும் ஒரு பலவீனம் இருக்கும், அதுதான் உன்னைப் பொறுத்தவரை தண்ணீர் என்று அடித்துச்சொல்கிறான் சாமுவேல்.

Unbreakable 8 Tamil Hollywoodஅதனால் தனக்கு சக்தி இருக்கிறதா என்று  பரிசோதிக்க எண்ணுகிறான் புரூஸ். கண்களை மூடி, கைகளை வீசியபடி தன்னை கடந்து செல்பவர்களை பரிசோதிக்கிறான். ஒரு சிலர் அநியாயக்காரர்கள் என்று தெரியவருகிறது. அவர்களில் ஒருவனை  ரெயின் கோட் போட்டுக்கொண்டு பின்தொடர்கிறான். வீட்டில் இரண்டு சிறுமிகளையும், அம்மாவையும் தனித்தனி அறைகளில் கட்டிப்போட்டு அவன் கொடுமைப்படுத்துவது தெரிகிறது. அவர்களை அவிழ்த்து காப்பாற்றும்போது கொடூரன் வருகிறான். எதிர்பாராத நேரத்தில் மேலே இருந்து நீச்சல் குளத்திற்குள் புரூஸை தள்ளிவிடுகிறான். உயிருக்குத் தத்தளிக்கும் நேரத்தில், அவனால் விடுவிக்கப்பட்ட பெண்பிள்ளைகள் புரூஸை  காப்பாற்றுகிறான். மீண்டும் வீட்டுக்குள் சென்று எதிரியை கொன்று அம்மாவை காப்பாற்றுகிறான். ஆனால் அதற்குள் அம்மா மரணம் அடைந்துவிடுகிறாள். அங்கேயிருந்து எந்த தடமும் இல்லாமல் வெளியேறுகிறான் புரூஸ்.

Unbreakable 9 Tamil Hollywoodஅடுத்த நாள் காலையில் அடையாளம் தெரியாத சூப்பர்ஹீரோ ஒருவனால் இரண்டு பெண்கள் காப்பாற்றப்பட்டதாக பேப்பரில் செய்தி வருகிறது. மனைவிக்குத் தெரியாமல் மகனிடம் காட்டுகிறான்.

உண்மையில் கார் விபத்தில் புரூஸுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, மனைவிக்கு ஃபுட்பால் பிடிக்காது என்பதால் காயம் என்று பொய் சொல்லியிருக்கிறான் என்பதும் சாமுவேலுக்குத் தெரியவருகிறது. என்னைப் போல் கண்ணாடி போல் ஒருவன் இருக்கிறான் என்றால், உன்னைப் போல் இரும்பு மனிதன் ஒருவன் இருக்கமுடியும் என்று நம்பினேன். என் நம்பிக்கை பொய்யாகவில்லை. உன்னைத்தான் என் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டு இருந்தேன் என்கிறான்.

சாமுவேலுக்கு முதன்முதலாக கை கொடுக்கிறான் புரூஸ். அப்போது அவன் காணும் காட்சிகள்தான் நைட் சியாமளன் டச். ஆம், ஹீரோ என்று ஒருவன் இருந்தால், அங்கே நிச்சயம் வில்லன் இருக்க வேண்டும். சாமுவேல்தான் அந்த  வில்லன் என்பது தெரியவருகிறது. எப்படி அவன் வில்லனாக மாறினான் என்பதை திரையில் பார்த்து ரசிக்கலாம்.

சூப்பர்ஹீரோ திரில்லர் படம் என்றாலும் கூட்ஸ் டிரெயின் மாதிரி மிகவும் படம் மெதுவாக நகர்கிறது. ஆனாலும் கதையும் சொல்லும் விதமும் புதிது என்பதால் ரசித்துப் பார்க்கலாம்.

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

* நைட் சியாமளன் எடுத்த படங்களில் இதுதான் சூப்பர் என்று சொல்லும் விமர்சகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

* தன்னுடைய தந்தை சூப்பர்ஹீரோ என்று நம்பும் மகன், துப்பாக்கியை எடுத்து தந்தையை சுட்டுப்பார்க்க முயல்வது வித்தியாசமான காட்சியமைப்பு.

* படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு மிகப்புதிது. ஆம், நிஜமான வாழ்க்கை கதையைப் போல் இயல்பான ஒலிகள் மட்டுமே படத்தில் நிறைந்திருக்கிறது.

* புரூஸ் வில்லிஸ் சாகசத்துக்கு எந்த இடமும் இல்லை என்றாலும் அடக்கி வாசித்திருக்கிறார். சாமுவேல் ஜாக்சன் எப்படி நடிப்பார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Unbreakable is a 2000 American superhero thriller film written, produced, and directed by M. Night Shyamalan and starring Bruce Willis and Samuel L. Jackson. The Prestige Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood.

(Visited 517 times, 74 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>