கவர்ச்சி நடிகையின் மகன் –   பாவாட விமர்சனம் – 36 மார்க் – Paavada (Malayalam Movie)

Pavada (2016)  - Poster

பெற்ற தாயை கவர்ச்சி நடிகையாக பார்க்கும் மகனின் அவலத்தை சித்தரிக்கும் வகையில் பாவாட புத்தம்புது முயற்சி. ஆனால் காட்சிக்குக் காட்சி திரைக்கு வெளியேயும்  நாத்தமடிக்கும் அளவுக்கு குடிப்பதும்,  ஜவ்வு மிட்டாய் மாதிரி  தேவையில்லாமல காட்சிகளை திணித்திருப்பதும் பொறுமையை சோதிக்கின்றன.

prithvi_pavada_3_2694794gகுடிப்பதற்காக தலையைக்கூட அடகுவைக்கும் அளவுக்கு மொடா குடியன் ஜாய். சில்லறை வேலைகளை செய்து சம்பாதிக்கும் பணத்தை இரண்டு விஷயத்துக்காக மட்டும்தான் செலவழிக்கிறான். ஒன்று குடி. அடுத்ததும் குடி. இப்படிப்பட்ட சூழலில் நர்ஸாக இருக்கும் சினிமோல் மீது காதல் வசப்படுகிறான். சினிமா இலக்கணப்படி குடிகாரனாக இருந்தாலும்,  காதல் சீக்கிரமாக கனிந்து கல்யாணத்தில் முடிகிறது.

Pavada Actress Miya George Stills _1_ஜாய் பாத்திரத்திற்கு பிரித்விராஜும், சினிமோலுக்கு மியா ஜார்ஜும் கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். குடிகாரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல், கடவுளிடம் தனியே பேசும் மியாவிற்கு, யாருடனோ கள்ளத்தொடர்பு என்று சந்தேகப்படுகிறான் ஜாய். தன்னை கணவர் சந்தேகப்பட்டு திருட்டுத்தனமாக வேவு பார்ப்பது தெரிந்ததும் பிரித்வியை தவிக்கவிட்டு காணாமல் போகிறார் மியா. இத்தனை நாளும் ஆதர்ஷ குருவாக இருந்த பாதிரியார், மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் பிரித்வியை சேர்த்துவிடுகிறார்.

Anoop-Menon-in-Pavadaபிரித்வியைப் போலவே பக்கத்து கிராமத்தில் இன்னொரு மெகா குடிகாரர் இருக்கிறார். அவர், முன்னாள் ஆங்கிலப் பேராசிரியரான அனூப் மேனன். ஷேக்ஸ்பியர் மீது பெரும் காதல் கொண்ட அனூப், இப்போது மதுவுக்கு அடிமையாக இருப்பதற்குக் காரணம்தான் பாவாட. அற்புதமான கலைப்படத்திற்கு ஆசைப்பட்டு கடைசியில்  பாவாட என்ற கவர்ச்சிப்படம்தான் அவரால்  எடுக்க முடிந்தது. அதனால் அனூபை ஊரார் பாவாட என்று கிண்டல் செய்கிறார்கள். ஏகப்பட்ட சொத்து இருப்பதால் தினமும் குடித்துவிட்டு ஊரையே நாறடிக்கிறார். ஒரு கட்டத்தில் அனூப்பையும் ஏமாற்றி  மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார்கள்.

pavada-malayalam-movie-stills-10-largeமறுவாழ்வு மையத்தில் பிரித்வியும் அனூப்பும் ஒரே அறையில் தங்குகிறார்கள். இருவரது அலைவரிசையும் ஒத்துப்போவதால், இருவருக்கும் அளவுக்கு அதிகமான பிரியம் உண்டாகிறது. அதனால் அந்த மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து, அனூப்பின் சொந்த வீட்டுக்குப் போகிறார்கள். இத்தனை லொள்ளுகள் நடப்பதற்குள் கிட்டத்தட்ட இடைவேளை வந்துவிடுகிறது. இதற்குப் பிறகுதான் நிஜ கதை ஆரம்பமாகிறது.

15tvf_pavada_2_2694792gஅனூப் வீட்டில் ஒரு சினிமா பெட்டியை பார்க்கிறான் பிரித்வி. அது பாவாட படத்தின் ரீல். அதைப் பார்த்ததும் ஆவேசமாகி அனூப்பை கொல்ல முயல்கிறான். ஏனென்றால் அந்த கவர்ச்சிப்படத்தின் நாயகி ஆஷா சரத்தான் ஜாயின் அம்மா. இந்தப் படத்தில் நடித்த காரணத்தால்தான் குழந்தை, கணவனை பிரிந்துவிட்டார் ஆஷா. தான் அனாதையானதற்கு அனூப்தான் காரணம் என்று கோபமாகிறான்.

paavada-7121720 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை வெளிவருகிறது. நண்பன் முரளி கோபிக்காக ஒரு கலைப்படம் தயாரிக்க சம்மதிக்கிறான் அனூப். அந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒரு குழந்தை பெற்ற நாடக நடிகையான  ஆஷா சரத்தை ஒப்பந்தம் செய்கிறார்கள். திடீரென இயக்குனர் மரணம் அடைந்துவிடுகிறார். அதனால் புரடொக்‌ஷன் மேனேஜராக இருக்கும் கலாபவன் ஷாஜன் சொல்வதைக் கேட்டு, படத்தை எப்படியும் முடிக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள். கவர்ச்சியாக கதையை மாற்றியதும் நடிக்க மறுக்கிறார் ஆஷா சரத். ஆனால் வேறு ஒரு துணை நடிகையை டூப்பாக போட்டு கவர்ச்சி படத்தை எடுத்துவிடுகிறார்கள். கவர்ச்சியாக ஆஷா நடிக்கவில்லை என்றாலும், கவர்ச்சி நடிகை என்ற பெயர் ஆஷாவுக்கு கிடைத்துவிடுகிறது. இதுதான் பாவாட கதை.

paavada-70339இப்போது சினிமாவில் பெரிய மனிதனாக உலவும் கலாபவன் ஷாஜன், மீண்டும் பாவாட படத்தை வெளியிட்டு காசு பார்க்க முடிவு செய்கிறான். அந்தப் படம் வெளியே வரக்கூடாது என்று அனூப், ஜாய் இருவரும் விடாப்பிடியாக போராடுகிறார்கள். ஆனால்  படத்தை ஷாஜனுக்கு விற்ற அக்ரிமென்ட்டை காட்டி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறான் ஷாஜன்.

pavada-malayalam-movie-stills-4-largeஇந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டுவந்து படம் வெளியாவதைத் தடுக்கிறார்கள். மீண்டும் தன்னுடைய தாயை சந்தித்தானா ஜாய், பிரிந்துபோன மனைவி என்ன ஆனாள் என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடை  பாவாட படத்தில் ஒளிந்திருக்கிறது.

எதையாவது பார்த்தே தீரவேண்டும் என்ற சினிமா வெறியில்(?) இருப்பவர்கள் மட்டும் பாவாட படம்  பார்க்கலாம், மற்றவர்கள் கதையை மட்டும் கேட்டு ஒதுங்கிக்கொள்வது நல்லது.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* நெடுமுடிவேணு, ஜெயசூர்யா, சித்திக் போன்ற பிரபலங்கள் இருந்தாலும் காட்சிகளில் அழுத்தம் இல்லாததால்,  ஊசிப்போன வடை மாதிரி  படம் டல்லடிக்கிறது. இவர்கள் போதாது என்று க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் வந்து அலப்பறை கொடுக்கிறார் அழகி மஞ்சு வாரியர்.

* யாரும் குடிக்கக்கூடாது என்பதை சொல்வதற்காகத்தான் இத்தனை குடி காட்சிகள் வைத்ததாக இயக்குனர் சொல்வது அபத்தத்திலும் அபத்தம்.

* இந்தப் படத்தின் இயக்குனர் மார்த்தாண்டன் இதற்கு முன்பு இயக்கிய இரண்டு படங்களும் அட்டர் ஃபிளாப்.  இந்தப் படம் மட்டும்தான் ஹிட் அடித்திருக்கிறதாம்.  ஹிட் படமே இந்த லட்சணம்  என்றால், அந்த ஃப்ளாப் படங்கள்  எப்படியிருக்குமோ?

Paavada (English: Skirt), is a 2016 Malayalam film directed by G. Marthandan and written by Bipin Chandran, based on the story he co-wrote with Shibin Francis. It stars Prithviraj Sukumaran, Anoop Menon, Asha Sarath, Miya George, Nedumudi Venu and Maniyan Pilla Raju. The film was produced by Maniyan Pilla Raju for Maniyan Pilla Raju Productions. The music was composed by Aby Tom Cyriac. Paavada Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 721 times, 121 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>