லாஜிக் இல்லாத ஃபேன் – Fan Review – 36 மார்க்

Fan Poster TH

ஜஸ்ட் வாட்ச் – ஃபேன்:

வித்தியாசமான ஒரு வரிக் கதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் லாஜிக்கை பற்றி கவலைப்படாத திரைக்கதையும், முழுக்க முழுக்க ஷாருக் மட்டுமே திரையில் தெரிவதும், கதாநாயகி என்ற சந்தோஷம் இல்லை என்பதாலும்  –  நெய் ரோஸ்ட் போன்று மொறுமொறுவென்று வந்திருக்கவேண்டிய சினிமா, வயிற்றைப் பிரட்டும் செட் தோசை போல் எரிச்சலூட்டுகிறது.

Fan 1ஆர்யன் கன்னாவின் கட் அவுட்டிற்கு சூடம் ஏற்றி  பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்யும் அளவுக்கு வெறிபிடித்த ரசிகன்  கெளரவ். ஆர்யன் மீதான அபிமானத்தால் தன்னுடைய ஸ்டைல், உடை, பேச்சு எல்லாவற்றையும் ஆர்யன் போலவே மாற்றிக்கொள்கிறான் கெளரவ். டெல்லியில் நடைபெறும் விழா ஒன்றில் ஆர்யன் போலவே நடித்து முதல் பரிசு பெறுகிறான் கெளரவ். குடும்பத்தினரும் கெளரவ் நடவடிக்கைகளைப் பார்த்து ஆனந்தப்படுவதுடன் ஆதரவும்(?) தருகிறார்கள்.

Fan 3ரசிகன் இல்லையென்றால் நான் இல்லை என்று உருகும் சூப்பர்ஸ்டார் ஆர்யன் கன்னாவை நேரில் சந்திக்க விரும்புகிறான் கெளரவ்.  ஆர்யன் பிறந்தநாளன்று வீட்டுக்குச் செல்கிறான். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே ஆர்யனை பார்க்க முடிகிறது. எப்படியாவது ஆர்யனை சந்தித்துப பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறான். அப்போது ஒரு புதிய நடிகன் ஆர்யனை திட்டி பேட்டி கொடுக்கிறான்.

இதனை ஆர்யன் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் கெளரவ் கோபமாகிறான். அந்த நடிகரின் கேரவன் வேனுக்குள் புகுந்து அடித்து உதைத்து ஆர்யனிடம் fan 6மன்னிப்பு கேட்க வைக்கிறான். தன்னை  பாராட்டுவான் என்று நினைத்து, அந்த நடிகரை மிரட்டி பணியவைத்த வீடியோவை ஆர்யனுக்கு அனுப்பிவைக்கிறான். இதைப் பார்த்து எரிச்சலாகும் ஆர்யன், போலீஸில் புகார் கொடுத்து ரசிகனை மாட்டிவிடுகிறான். அப்போதும் ஐந்து நிமிடம் மட்டும் உங்களிடம் பேசவேண்டும் என்று கெஞ்சுகிறான் கெளரவ். உனக்காக என்னுடைய நேரத்தை செலவிட முடியாது, நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன், நீ உன்னுடைய வேலையை பார் என்று கறாராகப் பேசுகிறான் ஆர்யன்.

தன்னை மதிக்கவில்லை என்பதுடன் ரசிகர்கள் மீது அன்பு இருப்பதாக நடித்து Fan 2பொய்யாக ஏமாற்றுகிறான் என்று கோபமாகிறான் கெளரவ். இனி என்னை நீ தேடுவாய் என்று ஆர்யனை பழி வாங்கப் புறப்படுகிறான் கெளரவ்.

லண்டனில் ஆர்யன் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே செல்லும் கெளரவ்… மெழுகுச்சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்து ஆர்யனுக்கு அவமானத்தை  உண்டாக்குகிறான். அதேபோல் ஒரு கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் ஆடுவதற்குச் செல்லும் ஆர்யன் போல் நுழைந்து பெண்களிடம் சில்மிஷம் செய்து ஆர்யனுக்கு பிரச்னையை உண்டாக்குகிறான். இதுவெல்லாம் கெளரவ் செய்கிறான் என்று தெரிந்தாலும் தடுக்க முடியாமல் தடுமாறுகிறான் ஆர்யன்.

fan 7இதையும் தாண்டி ஆர்யன் வீட்டுக்குள் நுழைந்துவிடும் கெளரவ், அங்கே கன்னாபின்னாவென்று களேபரத்தை ஏற்படுத்துகிறான். இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வருகிறான் ஆர்யன். கெளரவ் பாணியில் அவனுக்குப் பதிலடி கொடுக்க முடிவெடுக்கிறான். அந்தக் காலத்து அண்ணன், தம்பி படம் போன்று – கெளரவ் வேடத்திற்கு மாறுகிறான் ஆர்யன். கெளரவ்  வீட்டுக்குச்  செல்கிறான் இதை அறிகிறான் கெளரவ். ரசிகனாக இருந்து வில்லனாக மாறி, சைக்கோ அளவுக்குப் போய்விடும் கெளரவ் அடுத்து என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

லோக்கல் டி.வி. நடிகர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கலாட்டா செய்தாலே முட்டிக்கு முட்டி தட்டிவிடுவார்கள். ஆனால் ஒரு சூப்பர்ஸ்டார் கலந்துகொள்ளும் விழா தொடங்கி, அவரது வீடு வரை டூப்ளிகேட் வெகுசாதாரணமாக போய்வருவது காதுல பூ. முதல் பாதியில் விறுப்பாக கதையாகத் தொடங்கி, இரண்டாம் பாகத்தில் வழக்கமான விரட்டல், மிரட்டல், உருட்டல் மசாலாவாக முடிகிறது. பொழுதே போகவில்லை என்றால் டிவிடியில் மட்டும் பார்க்கக்கூடிய படம்.

ஷாருக் ரசிகர்களுக்கு   :  38 மார்க்

சினிமா ரசிகர்களுக்கு  :   36 மார்க்

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

*படத்தில் பாட்டு இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். அதேநேரம் ஒரு கதாநாயகியும் இல்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம்.

*ஆரம்பக் காட்சி முதல் இறுதிக்காட்சி வரையிலும் ஒவ்வொரு பிரேமிலும் ஷாருக்கை மட்டுமே பார்க்கவேண்டி இருப்பது மகா எரிச்சல்.

*இரண்டு வேடம் என்றாலும் வித்தியாசம் காட்டியிருக்கும் வகையில் ஷாருக் நடிப்பு அற்புதம். அதற்காக நம்மூர் கமல்ஹாசன் பாணியில் படம் முழுவதும் காட்சியளித்து மிரட்டியிருக்க வேண்டாம்.

*இயக்குனர் மணிஷர்மா இந்தக் கதையை எட்டு வருடமாக செதுக்கியதாக சொல்லியிருக்கிறார். இன்னும் எட்டு வருடங்கள் செதுக்கியிருக்கலாம் மணி.

Fan is a 2016 Indian thriller film directed by Maneesh Sharma and featuring Shah Rukh Khan in the lead role. The film is produced by Aditya Chopra under the banner of Yash Raj Films, and tells the story of an obsessive fan of a star who looks just like the star. The soundtrack album and original score are composed by Vishal–Shekhar and Andrea Guerra respectively. Fan Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 147 times, 7 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>