ஆங்கில பட பாணியில் ‘சங்குசக்கரம்'; Tamil movie Hollywood style – ‘Sanguchakkaram’

sanguchakkaram TH

ஆங்கில பட பாணியில் சங்குசக்கரம் – In continuation to the success of ‘Naduvula Konjam Pakkatha Kaanom‘ & ‘Idharkuthane Aasaipattai Balakumara‘ comes a brand new Tamil movie Hollywood style – ‘Sanguchakkaram’.

சினிமா பற்றி ஒவ்வொரு செய்தியாக கசியவிடும் ஹாலிவுட் பாணியில், சங்குசக்கரம் படத்திற்கு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில பட பாணியில் மிரட்டும் இந்த போஸ்டரை 24AM நிறுவனத்தை சேர்ந்த ட்யுனி ஜார்ஜ் (Tuney George) டிசைன் செய்திருக்கிறார். ஜில்லா, பிரேமம், மங்காத்தா, மெட்ராஸ், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு இந்த நிறுவனம்தான் டிசைன் செய்தார்கள். இப்போது விக்ரம் நடிக்கும் இருமுகன் மற்றும் சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களுக்கும் பட்டையை கிளப்புகிறார்கள். பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவும் அவரது தம்பியும் பிரபல நடிகருமான பிரேம்ஜி அமரனும் இந்த போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள். இதோ அந்த போஸ்டர் உங்களுக்காக.

சங்குசக்கரம் Sanguchakkaram

சங்குசக்கரம் படத்துக்கான எழுத்து வடிவமே, ஹைட் அண்ட் சீக் (Hide & Seek) விளையாட்டையும், தீபாவளி சங்கு சக்கரத்தையும் ஒருசேர குறிப்பதாக வடிவமைத்திருப்பது சிறப்பு. திகில் கிளப்பும்  மண்டை ஓட்டு மாளிகைக்கும் ஒன்பது சிறுவர்களுக்கும் இடையே நடக்கும் கதையை சொல்லும் விதமாக இருக்கிறது இந்த போஸ்டர். இதை சிறிதாக பார்க்கும் போது ஒரு மண்டை ஓடு போல் இருக்கிறது. பெரிதுபடுத்தினால் சிறுவர்களும் அவர்கள் பின்னால் போஸ்டரின் இரு புறமும் இரண்டு மர்ம நபர்கள் நிற்பதை காணலாம். இது வழக்கமான படம் இல்லை என்பதை போஸ்டர்கள் சொல்லிவிடுகின்றன. ஆபத்தான கானகம், அபாயமான மாளிகை, மிரட்சியுடன் சிறுவர்கள் என ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.

அரைச்ச மாவையே அரைக்காமல் புத்தம் புதிய திசையில் பயணித்து, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்திருக்கும் வி.எஸ்.ராஜ்குமாரின் லியோ விஷன் (Leo Vision) நிறுவனமும், கே.சதீஷின் சினிமாவாலா பிக்சர்ஸ் (Cinemawala Pictures) என்ற புதிய நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருப்பதால், எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்கிறது.

தமிழில் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக எந்தப் படங்களும் வெளிவருவதில்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் ஃபாண்டஸி (fantasy) உலகத்திற்கு குழந்தையை அழைத்துச்செல்லும் வகையில் நகைச்சுவை கொண்டாட்டமாகவும், திரில்லர் ரக பட்டாசாகவும் இந்தப் படம் இருக்கும் என்று சொல்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.சதீஷ்.

Sanguchakkaram Dhilip Subbarayanஇந்தப் படத்தை இயக்கியிருக்கும் மாரிசனுக்கு இது முதல் படம். இவர் சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் பி.வாசுவின் உதவியாளராக பணியாற்றியவர். ஜில் ஜங் ஜக் படத்திற்கு புதுமையாக இசையமைத்து பரபரப்பு கிளப்பிய விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். இவர் குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றப் போகிறாரா அல்லது அந்த ஆபத்தே இவர்தானா என்பதுதான் சஸ்பென்ஸ்.

படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருப்பதால், கோடை விடுமுறையில் படம் வெளியாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சட்டுப்புட்டுன்னு படத்தை வெளியிட்டு குழந்தைகளை குஷிப்படுத்துங்கப்பா…

(Visited 328 times, 25 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>