மீண்டும் ஒரு த்ரிஷ்யம் – புதிய நியமம் – 39 மார்க் – Puthiya Niyamam

puthiya niyamam poster TH1

ஜஸ்ட் வாட்ச் – புதிய நியமம்:

பேய் பட ஃபார்முலாவை தமிழ் பட உலகம் தொங்கிக்கொண்டிருக்க, வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய த்ரிஷ்யம் ஸ்டைல் படங்கள் மலையாளத்தில் வரிசை கட்டுகின்றன. சமீபத்தில் ஹிட் அடித்திருக்கும் த்ரில்லர் படம் புதிய நியமம்.

puthiya niyamam 3தமிழ் அய்யர் பெண்  வாசுகியாக வரும் நயன்தாராவும் மலையாளி லூயிஸ் போத்தனாக வரும் மம்முட்டியும் காதலித்து திருமணம் செய்து, அதற்கு சாட்சியாக ஒரு பெண் பிள்ளையுடன் அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள்.

கதகளி ஆர்ட்டிஸ்ட் வாசுகி கையில் கட்டுடன் வீட்டு வேலை செய்வதில் படம் ஆரம்பமாகிறது. தொலைக்காட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராகவும் விவாகரத்து கேஸ் மட்டுமே எடுத்து வாதாடும் வழக்கறிஞராகவும் வரும் லூயிஸ் puthiya niyamam 5மிகவும் கூல் பெர்சனாலிட்டி. ஆனால் வாசுகி சிடுசிடு. அம்மாவின் நடவடிக்கையில்  மாற்றங்களை கண்டு எரிச்சலாகிறாள் மகள் சிந்த்தா.

எந்த நேரமும் விவாகரத்து, கள்ளக்காதல் பற்றி அப்பா போனில் பேசுவதைக் கேட்கும் சிந்த்தா – அம்மாவுக்கு ஏதோ ரகசிய காதலன் இருக்கிறான் என்று சொல்கிறாள். அதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறான் லூயிஸ். அதேநேரம் வாசுகி இறுகிப்போய் இருப்பதையும், எதையோ மறைப்பதையும் பார்க்கிறான்.

puthiya niyamam 6ஒரு வழியாக கை சரியானதும் கதகளி ஆடப்போகிறாள் வாசுகி. நிகழ்ச்சிக்கு வரும்  போலீஸ் அதிகாரி ஜீனா பாயை பார்த்ததும் வாசுகியிடம் நம்பிக்கை ஒளி வருகிறது. தன்னிடம் வேண்டுமென்றே அசடு வழியும் மீன்காரன், வம்பு செய்யும் காய்க்காரனை போலீஸில் மாட்டிவிடுகிறாள். ஜீனா பாயும் யாருக்கும் தெரியாமல் நடவடிக்கை எடுத்து வாசுகிக்கு உதவி செய்கிறாள். அதன்பிறகு… தன்னுடைய உண்மையான எதிரிகள் யார் என்பதை சொல்கிறாள்.

nayanthara-in-puthiya-niyamamதுணி எடுப்பதற்காக மொட்டை மாடிக்குப் போகும் வாசுகியை, அந்த ஃப்ளாட்டை சேர்ந்த மூன்று இளைஞர்கள் திடீரென பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்கள். நடவடிக்கைகளை வீடியோ எடுத்துவிடுவதால் அழுவது தவிர எதுவும் செய்யமுடியாமல் தவித்ததை சொல்கிறாள். அந்த மூன்று அயோக்கியர்களையும் தன்னுடைய கையாலே கொலை செய்யவேண்டும், அதற்கு உதவ வேண்டும் என்று ஜீனாபாயிடம் கேட்கிறாள் வாசுகி. சட்டப்படி தண்டனை வாங்கித்தருகிறேன் என்று  ஜீனாபாய் சொல்வதை ஏற்காமல், பிடிவாதம் பிடிக்கிறாள்.

puthiya niyamam 2வரிசையாக மூன்று பேரையும் கொலை செய்வதற்கு புதிது புதிதாக திட்டம் வகுத்துத் தருகிறாள் ஜீனாபாய். ஒவ்வொருவனின் மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய இறுக்கத்தில் இருந்து மீண்டு வருகிறாள் வாசுகி. மூவரையும் பழி வாங்கியதும் மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறாள்.

ஒரு சாதாரண குடும்பப் பெண்ணால் பழி வாங்க முடியுமா, கொலை செய்வதற்கு  ஒரு போலீஸ் அதிகாரி உதவி செய்வாரா என்றெல்லாம் சந்தேகம் வரலாம். ஆனால் அதுதான் எதிர்பாராத ட்விஸ்ட். த்ரிஷ்யம் அளவுக்கு திக்திக் இல்லையென்றாலும் நம்ம நயனுக்காக பார்க்கலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* ஒரு நொடியில் குடும்பப்பெண்ணின் வாழ்க்கை பறிபோவதை பதைபதைப்புடன் பிரமாதமாக காட்டியிருக்கிறார் நயன்தாரா. ஒவ்வொரு படத்திலும் நயன்தாராவின் அழகு மட்டுமல்ல, நடிப்புத்திறனும் கூடிக்கொண்டே போகிறது.

* ஏராளமான மலையாளப் படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கும் ஏ.கே.ஷாஜன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Puthiya Niyamam (English: New Law) is a 2016 Indian Malayalam thriller film written and directed by A. K. Sajan. The film stars Mammootty and Nayantara in the lead roles, along with Baby Ananya, Sheelu Abraham, Aju VargheseRachana Narayanankutty and S. N. Swamy in supporting roles. The film explores the drug fueled crimes and consumption of substances like marijuana and LSD by the youth. Puthiya Niyamam Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 531 times, 124 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>