கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

theri poster TH

ஜஸ்ட் வாட்ச் – தெறி:

ஏசி பார், விதவிதமான சைடீஸ், காஸ்ட்லி சரக்கு, கம்பெனிக்கு நாலு ஃப்ர்ண்ட்ஸ் – இத்தனை இருந்தும் அடிக்க அடிக்க போதையே ஏறலைன்னா எப்படியிருக்கும் – தெறி படம் மாதிரி இருக்கும். அதிரடிக்கு விஜய், நைனிகா, கிளுகிளுப்புக்கு சமந்தா, எமி ஜாக்சன், சென்டிமென்ட்டுக்கு ராதிகா, பிரபு, அசத்தலுக்கு ஜி.வி.பிரகாஷ் என எத்தனையோ இருந்தும் கதையும் திரைக்கதையும் தொங்குதேப்பா…

Theri 1கொஞ்சம் சத்ரியன், கொஞ்சம் பாட்ஷா, கொஞ்சம் மதுர என மூன்று படங்களிலும் இம்ப்ரஸ்(?) ஆகி மூன்று விஜய்க்கு வேலை கொடுத்திருக்கிறார்கள்.

சினிமா இலக்கணப்படி அம்மா இல்லாத நைனிகாவை (நடிகை மீனாவின் மகள்) கண்ணுக்குள் வைத்து வளர்க்கிறார் ஜோசப் (விஜய்). பொண்டாட்டி இல்லாமல் ஒரு வாலிபன் இந்த உலகத்தில் தனியே இருக்க முடியுமா என்ன? நைனிகா படிக்கும் ஸ்கூலில் டீச்சராக இருக்கும் ஏமி ஜாக்சன், விஜயை கணக்குபண்ண நினைக்கிறார். தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று Theri 8சாந்த சொரூபியாக இருக்கும் விஜயுடன் டூயட் பாடுகிறார். அப்போதுதான் ஜோசப் (விஜய்) சாதாரண ஆள் இல்லை, தலைமறைவாக வாழும் ஐ.பி.எஸ். அதிகாரி விஜய் என்பது தெரியவருகிறது.

Theri 9இப்போதே கதை என்னவென்று தெரிந்திருக்கும். போலீஸ் வேலை என்றாலே பிடிக்காத சமந்தாவை விஜய் காதலிக்கிறார். விஜய்க்கு அம்மா மட்டும்தான். சமந்தாவுக்கு அப்பா மட்டும்தான். அதனால் இரண்டு குடும்பமும் சண்டை போட்டு சமாதானமாகிறார்கள். விஜய், சம்ந்தா திருமணம் முடித்து குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

Theri 10ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு புதரில் இருந்து உயிருக்கு போராடும் நிலையில் கிடைக்க, என்ன நடந்தது என்று விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி விஜய். அந்த பெண் இறந்துவிட, விஷயம் பெரிதாக, தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர் என்று கருதப்படும் மகேந்திரன் கதாப்பாத்திரத்தின் மகன்தான் அந்த கொலையை செய்தவன் என்று தெரியவருகிறது. இப்படியொரு கொடூரத்தை செய்தவனை விஜய் சும்மா விடுவாரா? மகேந்திரனின் மகனை பிணமாக தொங்கவிடுகிறார்.

theri 12இது போதாதா வில்லனுக்கு… வழக்கம்போல் விஜயின் அம்மா (ராதிகா), சமந்தாவை கொன்று விடுகிறார்கள். குழந்தையுடன் தப்பிக்கும் விஜய் யாருக்கும் தெரியாமல் மகளுடன் கேரளாவில் அமைதியாக வாழ்ந்துவருகிறார். இந்தக் கதை ஏமிக்கு தெரியும்போது வில்லனுக்குத் தெரியாமல் போகுமா என்ன?

theri 11சும்மா இருப்பாரா வில்லன்? விஜய் மகளை கடத்துகிறார்கள். இப்படியொரு திடுக் சவாலை எதிர்பார்க்காமல் ஆவேசமாகும் விஜய் பாய்ந்துபாய்ந்து சண்டை போட்டு, சண்டை போட்டு… க்ளைமாக்ஸ் காட்சியை விமர்சனத்தில் சொல்லக்கூடாதாம். அதனால் முடிவு என்னவாகும் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறோம்.

இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் எந்தெந்தப் பாடல்களின் உல்டா என்பது ஏற்கெனவே இணையத்தில் உலவுகிறது என்றாலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சுகமாகவே இருக்கிறது. திரைக்கதை கொஞ்ஜம் வழ-வழா. படம் முழுக்க தேடிப்பார்த்தாலும் ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லியை கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஆமா, நல்லதா எதுவுமே இல்லையா? நைனிகா நடிப்பு க்யுட், கேமரா ஆக்‌ஷன் போன்ற டெக்னிகல் சமாசாரம் நன்று… அட… தியேட்டர்ல பார்க்கும்போது கொஞ்சமாவது சந்தோஷம் வேண்டாமா… நாலு நாளைக்குள்ள போய் படத்தைப் பாருங்கப்பா.

விஜய் ரசிகர்களுக்கு  – 41 மார்க்

சினிமா ரசிகர்களுக்கு – 38 மார்க்

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

Theri (English: Spark) is an Indian Tamil-language action film written and directed by Atlee and produced by Kalaipuli S. Thanu. The film features Vijay, Samantha and Amy Jackson in the lead roles, whilePrabhu and Raadhika Sarathkumar amongst others form an ensemble cast. Featuring music composed by G. V. Prakash Kumar and cinematography handled by George C. Williams, Theri will have a theatrical release in 2016. The film will be dubbed into Telugu and released as Policeodu. Theri Movie Review, தெறி திரைப்பட விமர்சனம், Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 678 times, 41 visits today)

Related posts

2 thoughts on “கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

  1. GANESH BOOPALAN

    Good review mr.
    Ennoda parvaiyil enna ninaitheno athai apadiye pathivu sei thulileer . Naan yaarukum fan kidayathu so expectation ulla padathai paarpavan. Once again. Good. Review keep it up…..

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>