கடவுளைவிட காதல் மேலானது – பாஜிராவ் மஸ்தானி

Bajirao Mastani Poster

பாக்காம விட்றாதீங்க – பாஜிராவ் மஸ்தானி:

காதல் என்பது அமிர்தமும் அமிலமும் கலந்த மழை. எப்போது, எப்படி, யார் மீது பொழியும் என்று தெரியாது. ஆனால் காதல் மழையில் சிக்கியவர்கள் மீண்டதாக சரித்திரம் இல்லை. அப்படித்தான் திருமணம் முடிந்து மனைவியின் மீது மகாபிரியமுடன் இருக்கும் ஒரு போராளிக்கு திடீரென Bajirao Mastani 6காதல் வருகிறது. அதன்பிறகு அவன் என்னவாகிறான் என்பதுதான் பாஜிராவ் மஸ்தானி என்ற வரலாற்று கதை.

இப்போது வித்தியாசமான திரைக்கதையும் பிரமாண்டமும் மட்டுமே சினிமாவாக ரசிக்கப்படுகிறது. அதனால் காலத்திற்கேற்ப மிகவும் எளிமையான ஒரு கதையை, பிரமாண்ட படைப்பாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதையைத் தொடங்கி, க்ளைமாக்ஸ் மட்டும் தன்னுடைய கற்பனைக்கு படமாக்கியிருக்கிறார் பன்சாலி.

சத்ரபதி ஷாஹூBajirao Mastani 5வின் அரண்மனையில் அடுத்த பீஷ்வா யார் என்ற விவாதம் நடக்கிறது. தந்தைக்குப் பிறகு அந்தப் பதவி தனக்குத்தான் வரவேண்டும் என்கிறான் பாஜிராவ் வேடத்தில் வரும் ரன்வீர் சிங். வீரத்தளபதி பதவியை பரம்பரைக்கு தாரை வார்க்க முடியாது, தகுதி வேண்டும் என்று போட்டி நடத்தப்படுகிறது. புத்திசாலித்தனத்துடன் அந்தப் போட்டியில் வென்று பீஷ்வா பட்டத்தை வெல்கிறான் பாஜிராவ். கிட்டத்தட்ட இன்றைய பிரதமமந்திரிக்கு இணையான பீஷ்வா பட்டத்துடன் வரும் கணவனைக் கண்டு பூரித்துப்போகிறாள் காஷிபாயாக வரும் பிரியங்கா சோப்ரா. கண்களில் கண்ணீர் மல்க, கணவனைப் பார்த்து பழிக்கும் அழகில் அவர்களது நெருக்கம் புரிகிறது.

பத்து ஆண்டுகள் இடைவிடாத போர்புரிந்து, அனைத்து போர்களிலும் வெற்றிவாகை சூடுகிறான் பாஜிராவ்.  திடீரென அவனது கூடாரத்தில் ஒரு Bajirao Mastani 1தாக்குதல் நடக்கிறது. கணநொடியில் எதிரியை வீழ்த்தும் பாஜிராவ், அடுத்த நொடியில் அசந்துபோகிறான். ஆம், சினிமா இலக்கணப்படி அது மஸ்தானியாக வரும் தீபிகா படுகோன். தன்னுடைய நாட்டை சுற்றி எதிரிகள் நிற்கிறார்கள், நீங்கள் படையுடன் வந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். வரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டவும் செய்கிறாள். மஸ்தானியின் தைரியத்தை பாராட்டி, அவளுக்கு உதவி செய்ய ஒப்புக்கொள்கிறான்.

பாஜிராவ் படைகள் மஸ்தானியின் நாட்டுக்குச் செல்கிறது. ஒரு சூறாவளி போன்று சுழன்றடித்து எதிரிகளை பந்தாடுகிறான் பாஜிராவ். அந்த அழகை Bajirao Mastani 4பார்த்தபடி கத்தி வீசுகிறாள் மஸ்தானி. எதிரியை வீழ்த்துகிறான் பாஜிராவ். வெற்றிப் புன்னகையுடன் அசட்டையாக இருக்கும் பாஜிராவை கொல்லவருகிறான் ஒரு எதிரி. அவனைக் கொன்று பாஜிராவை காப்பாற்றுகிறாள் மஸ்தானி. அவள் வீரத்தைக் கண்டு தன்னை இழக்கிறான் பாஜிராவ், அவளுக்கு தன்னுடைய குறுவாளை கொடுக்கிறான். ராஜபுத்திர வழக்கப்படி குறுவாளை ஒரு பெண்ணுக்குக் கொடுத்துவிட்டால் திருமணம் முடிந்ததாக அர்த்தம். அதனால் பாஜிராவை கணவனாக ஏற்றுக்கொள்கிறாள் மஸ்தானி.

பாஜிராவ் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறான். அவனுக்கு மஸ்தானியின் நாட்டில் இருந்து ஏராளமான அன்பளிப்புகள் கொடுக்கப்படுகிறது. அந்த Bajirao Mastani 7அன்பளிப்புகளுடன் தானும் ஒரு அன்பளிப்பாக செல்கிறாள் மஸ்தானி. பாஜிராவின் அம்மா ராதாபாயை சந்தித்து குறுவாளை காட்டி தன் காதலை சொல்கிறாள் மஸ்தானி. முஸ்லீம் தாய்க்கும் இந்து அரசனுக்கும் பிறந்தவள்தான் மஸ்தானி என்பதால், அவளை அந்தப்புர அழகிகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பிவைக்கிறாள் ராதாபாய். பாஜிராவை சந்திக்கவிடாமல் சதி செய்கிறாள்.

Bajirao Mastani 14 Tanvi Azmiஒரு கேவலமான நாட்டியக்காரியாக மஸ்தானியை சந்தித்தால், தன் மகன் மனம் மாறிவிடும் என்று நினைக்கிறாள் ராதாபாய். ஆனால் தன்னைத்தேடி, தன்னுடைய காதலுக்காக இத்தனை தூரம் வந்துவிட்ட மஸ்தானியை நினைத்து பெருமிதப்படுகிறான் பாஜிராவ். எனக்கு நீ முதல் மனைவியாக இருக்கமுடியாது என்றாலும் நீதான் எனக்கு பிடித்தமானவள் என்று கட்டிக்கொள்கிறான். ஆக்ரோஷமாக சண்டை போடும் காட்சிகளைவிட, கண்களில் காதலை ஜொலிக்கச் செய்யும் காட்சிகளில் பிரமிக்கவைக்கிறார் தீபிகா படுகோன். மஸ்தானிக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை புரிந்துகொள்ளும் பாஜிராவ்,  அவளுக்கென மஸ்தானி மஹால் கட்டுகிறான்.

நாடுகளுக்கு இடையே நடந்த போர் இப்போது குடும்பத்தில் நடக்கிறது. முதல் மனைவி காஷிபாய், அம்மா ராதாபாய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மஸ்தானிக்கு எதிராக செயல்படுகிறார்கள். எத்தனை Bajirao Mastani 11கொடுமைகள் நடந்தாலும் காதலுக்காக தாங்கிக்கொள்கிறாள் மஸ்தானி. எதிர்க்கும்போது வலிமையடையும் தன்மை காதலுக்கு உண்டு என்பதால் முன்பைவிட அதிகமாக மஸ்தானியை காதலிக்கிறான் பாஜிராவ். மஸ்தானி கர்ப்பம் அடைகிறாள். அதேநேரம் காஷிபாயும் கர்ப்பம் அடைகிறாள். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறக்க இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறான் பாஜிராவ். ஆனால் எதிரிகள் இதை மிகவும் மோசமாக எதிர்க்கிறார்கள். மஸ்தானிக்கு பிறக்கும் குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்ட விரும்புகிறான் பாஜிராவ். முஸ்லீம் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு கிருஷ்ணா என்ற பெயர் சூட்டமுடியாது என்று பண்டிதர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, ஷம்சீர் பகதூர் என்று பெயர் சூட்டுகிறான். மகனைவிட மதம் முக்கியம் என்று கடைசிவரை பிடிவாதமாக இருக்கிறாள் ராதாபாய்.

Bajirao Mastani 10ஒரு கட்டத்தில் மஸ்தானியின் காதலுக்கு முன்பு தான் தோற்றுவிட்டதை உணர்கிறாள் காஷிபாய். கிருஷ்ணன் மீது ருக்மணி எத்தனை நேசத்துடன் இருந்தாலும், அவனுடைய காதல் முழுவதும் ராதா மீதுதான் இருக்கிறது என்று பாஜிராவிடம் சொல்கிறாள் காஷிபாய். குற்ற உணர்வு கொள்கிறான் பாஜிராவ். இருவரையும் ஒன்றாக வாழவைக்க நினைக்கிறான்.

அதனால் மஸ்தானியை ஏற்கவில்லை என்றால் பீஷ்வா பதவியை துறந்துவிடுவேன் என்று சொல்கிறான் பாஜிராவ். ஆனாலும் ராதாபாய் மனம் மாறாமல் இரும்புபோல் இருக்கிறாள். இந்த நேரத்தில் எதிரிநாட்டுப் படை போருக்கு வரும் தகவல் தெரிகிறது.

காதலைவிட நாடு முக்கியம் என்று போருக்குக் கிளம்புகிறான் பாஜிராவ். மகன் இல்லாத சூழலை சாதகமாக பயன்படுத்தும் ராதாபாய், மஸ்தானியை சிறைபிடிக்கிறாள். போருக்கான உத்தியை வகுக்கும் பாஜிராவுக்கு மஸ்தானி Bajirao Mastani 12கைது செய்யப்பட்ட தகவல் கிடைக்கிறது. பெரும் கோபத்துக்கு ஆளாகிறான். தன்னுடைய கோபத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒற்றை புயல்போல் போருக்குக் கிளம்புகிறான். எதிரணியை அடித்து துவம்சம் செய்கிறான்.

போரில் வெற்றி பெற்றாலும் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் என்று சட்டென துவழ்ந்துவிடுகிறான். அம்பு பட்ட காயமும் மன வேதனையும் சேர்ந்துகொள்ள கடுமையான காய்ச்சலுக்கு ஆளாகிறான். காஷிபாய்க்கும் ராதாபாய்க்கும் தகவல் தெரியவருகிறது. விஷக்காய்ச்சலில் புலம்பும்போதும் மஸ்தானியின் பெயரையே சொல்கிறான்.

Bajirao Mastani 8மஸ்தானி வந்தால் மட்டுமே கணவனை மரணத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிகிறது. மஸ்தானியை விடுதலை செய்து கணவனை காப்பாறினாளா என்பதை திரையில் பாருங்கள்.

வரலாற்றுப்படி விஷக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவுகிறான் பாஜிராவ். அவனது மரணம் தெரியவந்ததும் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள் மஸ்தானி.

இந்த முடிவை தன்னுடைய கற்பனைக்கேற்ப மாற்றி எடுத்திருக்கிறார் பன்சாலி. ஆனால் நாடகத்தனமான முடிவு படத்திற்கு பெரும் பின்னடைவாக இருப்பதுதான் உண்மை. காட்சியமைப்பு கவிதை நயமாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் படத்திற்கு திருஷ்டி பரிகாரம்தான்.

40க்கும் மேற்பட்ட போர்களில் வெற்றிவாகை சூடிய பாஜிராவ், காதல் போரில் தோற்றுப்போய் காவியமாக மாறிவிடுகிறான் என்பதை ரசிக்கும்படி சொன்னதற்காக பன்சாலிக்கு ஒரு ஜே போடலாம்.

கொஞ்சம் ரசிக்க :

பின்குறிப்பு :

  • மராத்தி எழுத்தாளர் இனாம்தார் என்பவர் எழுதிய ராவ் என்ற நாவலின் அடிப்படையிலே இந்த சினிமா எடுக்கப்பட்டுள்ளது.
  • மஸ்தானி மஹால், மஸ்தானி கல்லறை போன்றவை இன்னமும் வரலாற்று சின்னங்களாக இருக்கின்றன.
  • ஏற்கெனவே பிளாக், தேவதாஸ் போன்ற படங்களுக்காக தேசிய விருது பெற்ற சஞ்சய் லீலா பன்சாலி, மூன்றாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பாஜிராவ் மஸ்தானிக்காக பெற்றுள்ளார்.

Bajirao Mastani is a 2015 Indian epic historical romance film directed by Sanjay Leela Bhansali, who also composed the music of the film. It is jointly produced by Bhansali and Eros International. The film stars Ranveer Singh as Bajirao I and Deepika Padukoneas Mastani, with Priyanka Chopra playing Bajirao’s first wife Kashibai. Tanvi Azmi, Aditya Pancholi, Vaibbhav Tatwawdi and Milind Soman appear in supporting roles. Based on the Marathi novel Raau by Nagnath S. Inamdar, the film narrates the story of the Maratha Peshwa Bajirao (1700-1740 AD) and his second wife Mastani. Bajirao Mastani Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 640 times, 138 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>