தல v தளபதி = பேட்மேன் v சூப்பர்மேன் (Batman V Superman) – விமர்சனம் – 44 மார்க்

Batman V Superman

கும்முகும்முன்னு கும்முறாங்க – பேட்மேன் சூப்பர்மேன் – 44 மார்க்:

ரெண்டு பேரும் நல்லவஞ்சதான். ஆனா, ஒருத்தரை ஒருத்தர் தப்பா நினைச்சு மல்லுக்கட்டுறாங்க. உண்மை தெரிஞ்சதும் பொது எதிரியை தீர்த்துக்கட்டும் அரதப்பழசான கதைக்கு மசால் தடவி ஆலிவ் ஆயிலில் பொரித்துக் கொடுத்திருக்கும் மசாலா படம் பேட்மென்  vs சூப்பர்மென் டான் ஆஃப் ஜஸ்டிஸ். நம்ம ஊர் தல, தளபதியை ஒண்ணா நடிக்கவைச்சா, எப்படியிருக்குமோ, அப்படியொரு அலப்பறை. கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுவாரஸ்யமான படமாக மாறியிருக்கலாம்.

Batman-V-Superman-Batman V Superman Dawn of Justiceவேற்றுக்கிரகவாசி ஒருவனை சூப்பர்மேன் மோதி அழிக்கிறான். இந்த அதிரடி போராட்டத்தில், பேட்மேன் வசிக்கும் கோதம் சிட்டி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தன்னை கடவுளாக மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக சூப்பர்மேன் அதீதமாக செயல்படுவதாக பேட்மேன் ஆக வரும் புரூஸ் வைன் நினைக்கிறான். அதேநேரம் பத்திரிகையாளர் கிளர்க் கெண்ட் ஆக வரும் சூப்பர்மேனுக்கு பேட்மேன் நடவடிக்கையில் சந்தேகம் வருகிறது. இருவரும் சண்டை போடவேண்டும் என்பதற்காகவே ஒருவர் மீது ஒருவர், தேவையில்லாத வன்மத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்.

Ben-Affleck-Batman V Superman Dawn of Justiceசூப்பர் மேனை  க்ரிப்டோனைட் ஆயுதம் மூலம் மட்டுமே சாய்க்கமுடியும் என்பதை தெரிந்துகொண்ட பேட்மேன், அதற்கான ஆயுதம் தயாரிக்கும் வேலையில் இறங்குகிறான். உண்மையான வில்லனான லெக்ஸ் லூதர் கையில் இருக்கும் க்ரிப்டோனைட்டை பறித்துக்கொள்கிறான் பேட்மேன். அதனால் ஆத்திரமுறும் லெக்ஸ் லூதர் இருவருக்கும் மோதல் உருவாக்குகிறான்.

Jesse-Eisenberg-Lex-Luthor-Batman V Superman Dawn of Justiceசூப்பர்மேனுக்கும் பேட்மேனுக்கும் சண்டை மூட்டுவதற்காக, வில்லன் லெக்ஸ் லூதர் கண்டுபிடிக்கும் ஒரு டெக்னிக், இதுவரை உலக சினிமா வரலாற்றில் யாருமே செய்யாத ஒரு புதிய முயற்சி. ஆம், சூப்பர்மேன்னின் அம்மாவை கடத்தி வைக்கிறான் லெக்ஸ் லூதர். அம்மா உயிருடன் வேண்டும் என்றால் பேட்மேன் தலையைக் கொண்டுவா என்கிறான். உடனே பதறிப்போகும்(?) சூப்பர்மேன், பேட்மேனுடன் மோதுகிறான். இருவருக்குமான மோதலில் தோல்வியின் விளிம்புக்குச் செல்லும் சூப்பர்மேன், அப்போதுதான் அம்மா பற்றிய தகவலை சொல்கிறான். உடனே இருவரும் ஒன்றுசேர்ந்து பொது எதிரியான லெக்ஸ் லூதரை அழிக்கக் கிளம்புகிறார்கள்.

Batman V Superman Dawn of Justice Gal-Gadot-Wonder-Womanஇருவரும் ஒன்றுசேர்ந்ததும் லெக்ஸ்லூதர், வேற்றுக்கிரகவாசிக்கு உயிர் கொடுத்து, இவர்களுடன் மோதவிடுகிறான். சூப்பர்மேன், பேட்மேன் மட்டும் ராட்சச எதிரியுடன் மோதுவது போதாதென்று வொண்டர் வுமனும் திடீரென சேர்ந்துகொள்கிறான். அதிரடி ஆக்‌ஷன் நபர்கள் மூன்று பேரும் சேர்ந்துகொண்டு கும்முகும்மு என்று கும்முகிறார்கள்.

Batman V Superman Dawn of Justice doomsday-largeசூப்பர்மேனாக வரும் ஹென்றி காவில் அளவுக்கு பேட்மென் ஆக வரும் பென் ஆஃப்லெக் நடிப்பு  எடுபடவில்லை என்றாலும் ஆவேச மோதலில் இருவரும் முட்டிமோதும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. தனியொரு சூப்பர்ஹீரோவிற்கு மார்கெட் மவுசு குறைந்துவிட்டதால், இரண்டு பேரை மோதவிட்டு காசு பார்த்திருக்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.

சூப்பர்மேன், பேட் மேன் ரசிகர்களுக்கு  – 44 மார்க்

பொதுவான ஆங்கிலப்பட ரசிகர்களுக்கு – 41 மார்க்

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

* சூப்பர்மேனுடன் மோதுவது நம்பும்படி இருக்கவேண்டும் என்பதற்காக தன்னுடைய உடம்பை கணிசமான அளவுக்கு ஏற்றியிருக்கிறார் பென் ஆஃப்லெக்.

* ஜெஃப்ரி டீன் மோர்கனை பேட்மென் ஆக நடிக்கவைக்க நினைத்தார்கள். அதன்பின் பேட்மேன் அப்பாவாக மட்டும் நடிக்கவைத்து விட்டார்கள்.

* அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த விஞ்ஞான படங்கள் எடுப்பதில் வல்லவரான ’300’ பட புகழ்பெற்ற ஸாக் ஷ்னைடர் இயக்கத்தில் படம் விறுவிறுவென நகர்ந்தாலும் கொஞ்சம் நீநீநீளம்.

Batman v Superman: Dawn of Justice is a 2016 3D American fantasy superhero film featuring the DC Comics characters Batmanand Superman, distributed by Warner Bros. Pictures. It is a follow-up to 2013’s Man of Steel and the second installment in the DC Extended Universe. The film is directed by Zack Snyder, with a screenplay written by Chris Terrio and David S. Goyer, and starsBen Affleck, Henry Cavill, Amy Adams, Jesse Eisenberg, Diane Lane, Laurence Fishburne, Jeremy Irons, Holly Hunter and Gal Gadot. Batman v Superman: Dawn of Justice is the first live-action film to feature both Batman and Superman, as well as the first theatrical film to feature live-action portrayals of Wonder Woman, Aquaman, Cyborg and the Flash. In the film, criminal genius Lex Luthor manipulates Batman into preemptively battling Superman. BvS Review, Batman v Superman: Dawn of Justice Review, Dawn of Justice Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 542 times, 53 visits today)

Related posts

One thought on “தல v தளபதி = பேட்மேன் v சூப்பர்மேன் (Batman V Superman) – விமர்சனம் – 44 மார்க்

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>