கொலையும் செய்வான் தோழன் – மிஸ்டிக் ரிவர் (Mystic River)

Mystic River Poster

பாக்கவே பாக்காதீங்க – மிஸ்டிக் ரிவர்:

பிரமாதமான நடிகர், வித்தியாசமான இயக்குனர், அற்புதமான தயாரிப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என்றெல்லாம் பெயர்வாங்கிய கிளின்ட் ஈஸ்ட்வுட், பட்டியலில் ஒரு கருப்புப்புள்ளி இந்த மிஸ்டிக் ரிவர் என்று சொல்லலாம். இயல்பான கதையோட்டம், நிஜமான காட்சியமைப்பு, அற்புதமான நடிப்பு என்று மிஸ்டிக் ரிவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்திருந்தாலும், ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் அள்ளியிருந்தாலும்.. நெஞ்சைத் தொடும் காட்சிகள் இல்லாத காரணத்தால் பார்க்கத் தேவையில்லாத பட பட்டியலில் சேர்கிறது மிஸ்டிக் ரிவர்.

Mystic River 1சின்ன வயது  தோழர்கள், வளர்ந்தபிறகு எதிரிகளாக மாறுவதுதான் ஒரு வரி கதை. ஜிம்மி, ஷேன், டேவ் ஆகிய மூன்று சிறுவர்கள் தெருவில் விளையாடுகிறார்கள். அப்போது காரில் வரும் ஒருவன், டேவ்வை மிரட்டி காரில் ஏற்றி கொண்டுபோகிறான். போலீஸ் பிடித்துச்செல்கிறது என்று சிறுவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வக்கிரகுணம் படைத்தவன் டேவ்வை வேட்டையாடுகிறான். அங்கிருந்து எப்படியோ தப்பித்து நான்கு நாட்களுக்குப் பிறகு வீட்டை அடைகிறான் டேவ்.

Mystic River 2காலம் மாறுகிறது. ரவுடித் தொழிலை விட்டு இப்போது அமைதியாக ஒரு கடை வைத்து பிழைப்பை நடத்துகிறான் ஜிம்மி. டேவ் சாதாரண வேலையில் இருக்கிறான். ஷேன் துப்பறியும் போலீஸாக இருக்கிறான். மூவரும் ஒரே ஊரில் இருந்தாலும் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. அந்த அளவுக்கு சின்ன வயதில் நடந்த நிகழ்வு மூவரையும் பிரித்து வைத்திருக்கிறது.

Mystic River 5ஜிம்மியின் மகள் கேத்தி அப்பாவின் மீது திடீரென அளவுக்கு அதிகமான பாசத்தைப் பொழிகிறாள். இரவு பார்ட்டிக்குப் போவதாக சொல்லி கிளம்புகிறான். ஆனால், அவளுக்காக வெளியே காத்திருக்கிறான் காதலன் பிரண்டன். வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போக இருவரும் பிளான் போடுகிறார்கள். வேண்டுமென்றே ஒரு பாரில் சென்று அனைவரது கவனத்தையும் இழுக்கிறாள் கேத்தி. அப்போது அங்கே மது அருந்திக்கொண்டு இருக்கிறான் டேவ்.

இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் வருகிறது. காருக்குள் ஒரு பெண் துப்பாக்கி குண்டு பட்டு உயிருக்குப் போராடுவதாக சொல்கிறது. போலீஸ் அதனை தேடிப் போகிறது.

MYSTIC RIVER, Tim Robbins, Marcia Gay Harden, 2003, (c) Warner Brothers

இரவு 3 மணி சமயத்தில் வீடு திரும்புகிறான் டேவ். கவலையுடன் காத்திருக்கிறாள் மனைவி. சட்டையெல்லாம் ரத்தம் வழிந்திருப்பதையும் கையில் காயத்தையும் பார்த்து அதிர்கிறாள். ஒரு திருடனுடன் மோதியதாகவும், அவனை அடித்துப்போட்டு வந்துவிட்டேன் என்றும் சொல்கிறான். மனைவி பயப்படுகிறாள். ஆனால் டேவ் அமைதியாக இருக்கிறான். அடுத்த நாள் பேப்பரில் எந்த செய்தியும் இல்லை.

Mystic River 8இந்த நேரத்தில் குண்டு துளைக்கப்பட்ட கார் கண்டுபிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் தேடுதல் வேட்டையில் பக்கத்து பூங்காவில் அடிபட்டு செத்துக்கிடக்கிறாள் கேத்தி. தகவல் தெரிந்து கொதிக்கிறான் ஜிம்மி. தன்னுடைய மகளை கொன்றவனை உடனடியாக கொன்றுவிட துடிக்கிறான். தன்னுடைய கூட்டாளிகள் மூலம் தேடுதல் வேட்டை நடத்துகிறான்.

Mystic River 7போலீஸ் தன்னுடைய விசாரணையை தொடர்கிறது. ஷான் பார்வைக்கு டேவ் வருகிறான். அவன் கையில் இருக்கும் காயமும், அன்று இரவு பாரில் இருந்ததும் சந்தேகத்துக்கு உரியதாகிறது. அதனால் அடிக்கடி விசாரணைக்கு வருகிறார்கள். ஆனால் முன்பைவிட மிகவும் சந்தோஷமாக இருக்கிறான் டேவ். இதுகுறித்து மனைவி ரொம்பவும் கவலைப்படுகிறாள். எந்த சம்பவமும் பேப்பரில் வரவில்லை, என்னதான் நடந்தது என்று கேட்கிறாள். அப்படியென்றால் அன்றைய தினம் திருடனுக்கு பெரிய அடிபட்டிருக்காது என்று அலட்சியமாக சொல்கிறான்.

இந்த நேரத்தில் அனைத்து சந்தேகமும் பிரண்டன் மீது விழுகிறது. ஆனால் அவன் கேத்தியை உயிருக்கு உயிராக காதலித்தது தெரியவர, சந்தேகம் தீருகிறது.

Mystic River 10ஒரு வகையில் ஜிம்மிக்கு தூரத்து உறவினராக இருக்கிறாள் டேவ் மனைவி. அதனால் ஜிம்மியுடன்  அடிக்கடி பேச நேர்கிறது. மகள் இறந்த துக்கத்தில் இருக்கும் ஜிம்மியை ஆறுதல் படுத்துவதற்காக டேவ், அவன் மனைவி போய் வருகிறார்கள். அன்று பாரில் கேத்தியைப் பார்த்தேன் என்று சொல்லிவைக்கிறான்.

போலீஸ் பார்வை டேவ் மீது பட்டிருப்பதை ஜிம்மியின் கூட்டாளிகள் சொல்கிறார்கள். அதேநேரம் டேவ் மனைவியும் அன்று நடந்த சம்பவத்தை விவரிக்கிறாள். கேத்தியை டேவ் கொலை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறாள்.

தடவியல் ரிப்போர்ட் வருகிறது. பிரண்டனின் அப்பா பயன்படுத்திய துப்பாக்கியின் மூலம் கொலை நடந்திருக்கிறது என்று சொல்கிறது தடய அறிவியல். மீண்டும் பிரண்டனிம் விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் உருப்படியாக ஒன்றும் கிடைக்கவில்லை.

Mystic River 4இந்த விஷயம் எதுவும் தெரியாத ஜிம்மி ஆவேசத்தின் உச்சிக்குப் போகிறான். டேவ்வை இழுத்துவந்து கேத்தியை ஏன் கொன்றாய் என கேட்கிறான். அப்போதுதான் ஓர் உண்மையை சொல்கிறான் டேவ். சின்ன வயதில் என்னை கடத்திச்சென்று கொடூர சித்ரவதை செய்தவனை அன்று இரவு சந்தித்தேன். அங்கேயே கொன்றுவிட்டேன் என்று சொல்கிறான். ஆனால், தன்னிடம் இருந்து தப்புவதற்காக டேவ் பொய் சொல்வதாக நினைக்கிறான் ஜிம்மி. சித்ரவதை செய்து, கேத்தியை கொலை செய்ததை ஒப்புக்கொள், உயிர்ப்பிச்சை தருகிறேன் என்கிறான். அதை நம்பி ஒப்புக்கொள்கிறான் டேவ். உடனே டேவ்வை சுட்டுக்கொன்று ஆற்றில் தூக்கி வீசுகிறான்.

பிரண்டன் அப்பாவுக்கும் ஜிம்மிக்கும் உள்ள தொடர்பு என்ன?

கேத்தியை கொலை செய்தது யார்?

நண்பனை கொலைசெய்த ஜிம்மியை என்ன செய்கிறான் ஷேன் என்பதெல்லாம் உப்புச்சப்பில்லாத காட்சிகள்.  ஒரே ஒரு கொலையை வைத்துக்கொண்டு, ஜவ்வு மாதிரி கதையை நீட்டி முழக்கியிருக்கிறார் ஈஸ்ட்வுட். இதைத்தான் நிஜ கதைகளன் என்று நம்பி அவார்களும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். விறுவிறுப்பில்லாத அவார்டு படம் பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமே ஏற்ற படம் இது.

டிரைலர பாத்து ஏமாறாதீங்க:

பின்குறிப்பு :
*ஜிம்மியாக வரும் ஷான் பென் மற்றும் டேவ்வாக வரும் டிம் ராபின்ஸ் இருவரும் நடிப்பை பிழிந்திருக்கிறார்கள் என்பது நிஜம். அதனால்தான் ஆஸ்கர் அவார்டு கிடைத்திருக்கிறது.

*டென்னிஸ் லெகானே எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது இந்த மிஸ்டிக் ரிவர்.

Mystic River is a 2003 American mystery drama film directed and scored by Clint Eastwood. It stars Sean Penn, Tim Robbins,Kevin Bacon, Laurence Fishburne, Marcia Gay Harden, and Laura Linney. The screenplay by Brian Helgeland was based on thenovel of the same name by Dennis Lehane. The film was produced by Robert Lorenz, Judie G. Hoyt and Eastwood. It is the first film on which Eastwood was credited as composer of the score.

The film opened to widespread critical acclaim. It was nominated for Academy Awards for Best Picture, Best Director, Best Actor,Best Adapted Screenplay, Best Supporting Actress, and Best Supporting Actor. Sean Penn won Best Actor and Tim Robbins won Best Supporting Actor, making Mystic River the first film to win both awards since Ben-Hur in 1959.

(Visited 566 times, 127 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>