தனுசுக்கு ஆஸ்காரு – The Fakir 2017

The Extraordinary Journey of the Fakir poster
MARJANE-SATRAPI & DHANUSH
நடிகர் தனுஷ் & இயக்குனர் மார்ஜான் சட்ராப்பி

ஆஸ்கார் நாயகன் என்று நம்மூரு கமல்ஹாசனை கூப்பிட்டுவந்த, அவரது ரசிகர்கள் களைத்துப்போய் உலக நாயகனுக்கு மாறிவிட்டார்கள். இப்போது அந்த இடத்தை தனுஷ்க்கு தருவதற்கு முடிவெடுத்திருக்கிறார் மார்ஜான் சட்ராப்பி (Marjane Satrapi).

ஈரானில் பிறந்து பிரான்ஸில் எழுத்தாளராக, ஓவியராக, இயக்குனராக இருக்கும் மார்ஜான், இந்தியாவிலேயே பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரே நடிகர் தனுஷ். அதனால்தான் தனுஷை த எக்ஸ்ட்ராடினர்ரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்துக்கு நாயகனாக்கி இருக்கிறேன் என்கிறார்.

இந்தப் படத்தின் கதை The Extraordinary Journey Of A Fakir Who Got Trapped In An Ikea Wardrobe என்ற பெயரில் வெளியான பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த நாவல் கிட்டத்தட்ட 35 மொழியில் வெளியாகி சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Alexandra Daddario in The Extraordinary Journey of the Fakir
அலெக்சாண்ரா

ராஜஸ்தானில் ஒரு பரதேசி சாமியாராக திரியும் தனுஷ், பாரீஸ் போய் ஆணிப்படுக்கை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். ராஜஸ்தானில் இருந்து பாரீஸ் போகும் தனுஷ், பாஸ்போர்ட் சிக்கலில் மாட்டிக்கொண்டு ஆப்பிரிக்கர்களுடன் சேர்ந்து நாடு கடந்துசெல்லும் சூழல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில்தான் பாழாய்போன காதலில் சிக்கிக்கொள்கிறார். அதுக்கடுத்து என்ன நடக்கிறது என்பதை திரையில் பார்க்கலாம்.

Gemma Arterton in The Extraordinary Journey of the Fakir
ஜெம்மா

தனுஷுடன் மூத்த முத்த நாயகி உமா தர்மன் (Uma Thurman) நடிக்க, ஜோடியாக அழகுப் பதுமைகள் அலெக்சாண்ட்ரா டடாட்ரியோ (Alexandra Daddario), ஜெம்மா அர்டர்டன் (Gemma Arterton) இருவரும் போட்டி போடுகிறார்கள். இவர்களுடன் நம்மூரு சீமா பிஸ்வாஸும் முக்கிய வேடத்தில் நடக்கிறார். 2017ம் ஆண்டு வெளிவர இருக்கும் படத்தின் மூலம் தமிழ் நடிகருக்கு ஆஸ்கார் நிச்சயம் என்று இப்போதே காத்திருப்போம்.

(Visited 385 times, 18 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>