கஞ்சா புகைக்கும் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்

kristen-stewart american ultra

இயக்குனர் பாலா இயக்கிய, ‘பிதாமகன்’ படத்தில் அறிமுகமான கஞ்சா கருப்பு ஒரு பேட்டியில், ‘நான் உண்மையில் கஞ்சாவை சுவைத்ததே இல்லை. அது கருப்பா, வெள்ளையா என்பதும் தெரியாது. கேரக்டருக்காக கஞ்சா பார்ட்டி போல் நடித்தேன்’ என்று சத்தியம் செய்திருந்தார்.

இதையே உல்டாவாக சொல்கிறார் அமெரிக்க நடிகை கிறிஸ்டன் ஸ்டுவர்ட். கிறிஸ்டனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தொடர்ச்சியாக ‘ட்விலைட்’ படங்களில் நடித்து ஹாலிவுட் நட்சத்திரப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர். இப்போது அவர் நடித்துவரும், ‘அமெரிக்கன் அல்ட்ரா’ படத்துக்காக தினமும் எக்கச்சக்கமாக கஞ்சா புகைக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.

Kristen Stewart Smoking1

கதைப்படி அவர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரப் பறவை. எந்த நேரமும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக கஞ்சா புகைப்பதற்கு அடிமை ஆகிறார். கஞ்சா போதை அவரை கனவுலகிற்கு இழுத்துச் செல்வதுடன், எப்போதும் சந்தோஷ மனநிலையிலும் வைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் இவரைப் போலவே ஆனந்த மனநிலை கொண்ட நாயகனின் அறிமுகம் கிடைக்கிறது. அவனும் கிறிஸ்டனைப் போலவே எப்போதும் கஞ்சா புகையில் விழுந்துகிடைக்க நினைப்பவன். அதனால் இருவரும், ’பகலிலும் ஆட்டம் இரவிலும் ஆட்டம்’ என்று சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள்.  இவர்களை திருத்த நினைக்கும் குடும்பத்தினரும், ‘இனிமேல் இவர்களை மாற்றவே முடியாது’ என்று தண்ணீர் தெளித்து விரட்டுகிறார்கள்.

தட்டிக்கேட்க யாருமே இல்லை என்று காதலர்கள் தங்களை மறந்து புகைத்துத்தள்ளும் நேரத்தில், ஒரு அதிரடி கும்பல் நாயகனை விரட்டுகிறது. ஏனென்று தெரியாமல் இருவரும் ஓடத் தொடங்குகிறார்கள். வில்லன்கள் ஏன் நாயகனைத் துரத்துகிறார்கள், அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். நமக்குத் தெரியவேண்டியது கஞ்சாவும்  கிறிஸ்டனும்.

இப்படி ஒரு கதை என்று சொன்னதும் எந்தக் கேள்வியும் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கிறிஸ்டன். ஏனென்றால் நிஜ வாழ்க்கையில் 18 வயது முதல் கஞ்சா புகைக்கும் பழக்கம் கொண்டவர். ‘இதை யாருக்காகவும் எப்போதும் மறைக்க நினைத்தது இல்லை. ஆனால், நான் செலிபிரிட்டி ஆனதும் பொது இடங்களில் கஞ்சா புகைக்க முடிவதே இல்லை. இந்தப் படத்துக்காக நிறைய டேக் வாங்கப்போகிறேன். நிறைய நிறைய கஞ்சா புகைத்து இன்புறப் போகிறேன்’ என்கிறேன் கிறிஸ்டன்.

மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் கிறிஸ்டனுக்கு ஜே..ஜே…

(Visited 101 times, 16 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>