வர்றாண்டா டெட்பூல் – Deadpool Trailer

Deadpool_poster

டிரெய்லர் டயம்:

கேன்சரில் சாகப்போகும் வில்சனுக்கு விசித்திர சோதனை செய்வதற்கு முடிவெடுக்கிறார்கள். அந்த சோதனை செய்தால் கேன்சர் குணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று ஏமாற்றி சம்மதம் வாங்குகிறார்கள். வழக்கம்போல் அந்த சோதனை ஏடாகூடமாக மாறிவிட, வில்சனின் தோல் முழுவதும் புண்ணாகிவிடுகிறது. ஆனால் உடலின் உள் உறுப்புகள் அத்தனையும் பலம் பெற்றுவிடுகின்றன. சுருக்கமாக சொல்வது என்றால் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்று வில்சனும் டெட்பூல் எனப்படும் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறான்.

ஆனால் வில்சனின் மனம் அவ்வப்போது அலைபாயக்கூடியது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கத் துடிக்கிறான். அவர்கள் தமிழ் சினிமா இலக்கணப்படி  வில்சனின் காதலியை கடத்தி பிளாக்மெயில் செய்கிறார்கள். அவர்களீடம் இருந்து காதலியை காப்பாற்றி, நாட்டுக்கும் எப்படி நல்ல செய்யப்போகிறான் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்லவரும் ஆக்‌ஷன் படம் டெட்பூல்.

இந்தப் படத்தில் ஏகப்பட்ட ரத்தமும் முத்தமும் இருப்பதால் சிறுவர்களுக்கு உகந்தது அல்ல. அதனால் பெரியவர்கள் தியேட்டரிலும் சிறியவர்கள் ஐபோனிலும் பார்ப்பதற்கு ரெடியா…?

Deadpool is an upcoming American superhero film based on the Marvel Comics character of the same name. It is intended to be the eighth installment in the X-Men film series. The film is directed by Tim Miller, with a screenplay by Rhett Reese and Paul Wernick, and stars Ryan Reynolds, Morena Baccarin, Ed Skrein, T. J. Miller, Gina Carano, Brianna Hildebrand, Stefan Kapičić, andLeslie Uggams. The film follows Wade Wilson who, after being subjected to an experiment that leaves him with new abilities, hunts down the man who nearly destroyed his life. movie trailer, deadpool trailer, tamil trailer, Tamil Hollywood

(Visited 330 times, 22 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>