ஒரு முத்தத்தின் கதை – மேலிஃபிசன்ட்

49102.jpg

பாக்காம விட்றாதீங்க  – மேலிஃபிசன்ட்:

பாப்கார்ன் மீது மிளகாய் பொடி தூவுவது போன்று, குழந்தைகளை குதூகலப்படுத்தும் சினிமாக்களில் நீதி போதனையும் இணைந்தே இருப்பது சகஜம். அளவு சட்டத்தை தாண்டிவிடாமல் பாசத்தின் மகிமையை குழந்தைகளுக்கு எடுத்துச்சொன்ன வகையில் முக்கியத்துவம் பெறுகிறது மேலிஃபிசன்ட் திரைப்படம். இப்படியொரு படத்தில் நடித்ததற்காக உதட்டழகி ஏஞ்சலினா ஜோலிக்கு முத்தம் கொடுக்க நம்மால் முடியாது என்றாலும் ஜோராக கைதட்டி பாராட்டு தெரிவிக்கலாம்.

Maleficent 1வினோத உயிரினங்களும் வித்தியாசமான தேவதைகளும் நிரம்பிய ஒரு நாட்டில் வசிக்கிறாள் மேலிஃபிசன்ட்டாக வரும் ஏஞ்சலினா. வித்தியாசமான கொம்பு, வலிமையான இறக்கைகளுடன் விசித்திரமாக காட்சிதரும் தேவதையான ஏஞ்சலினா, மூர்ஸ் நாட்டிற்கு தலைவி இல்லை என்றாலும், அவள் அன்புக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். இறக்கையை சுழற்றிக்கொண்டு ஜிவ்வென்று வானைத் தொடுவதும் அடுத்தநொடி சட்டென்று சருகி பூமியில் ஸ்டைலாக நிற்பதுமான உடல் மொழியில் அசத்துகிறாள் ஏஞ்சலினா. அவளுக்கு மட்டுமின்றி அத்தனை உயிரினங்களுக்கும் ஏராளமான சக்திகள் இருக்கின்றன.

maleficent 8இந்த நாட்டிற்கு பக்கத்தில் மனிதர்கள் வசிக்கும் நாடு இருக்கிறது. தேவதைகள் புழங்கும் நாட்டை கைப்பற்றி, அங்கேயிருக்கும் செல்வங்களை அடைவதற்கு மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள். ஒரு கொடூர வில்லன் அல்லது மாபெரும் ஹீரோ ஒருவன் வரும்போது, இரண்டு நாடுகளும் இணையும் என்பது எழுதப்படாத விதி. அந்த ஹீரோவுக்காக ஏஞ்சலினா காத்திருக்க… வழி தவறி தேவதைகள் நாட்டிற்குள் நுழைகிறான் ஸ்டீபன்.

Maleficent 9புதிதாக ஒரு மனிதனைப் பார்த்ததும் ஆச்சர்யமாகிறாள் ஏஞ்சலினா. அவனை பத்திரமாக வழியனுப்பி வைக்கிறாள். கை குலுக்கும்போது, ஸ்டீபனின் மோதிரம் விரலில் பட்டதும் வலியில் துடிக்கிறாள் ஏஞ்சலினா. தேவதைகளுக்கு உலோகங்கள் என்றால் அலர்ஜி என்பது தெரியவர, மோதிரத்தை தூக்கி எறிந்து நாடு திரும்புகிறான் ஸ்டீபன். அதன் பிறகு ஸ்டீபனின் நினைவாகவே இருக்கிறாள் ஏஞ்சலினா. ஸ்டீபனே இரண்டு நாடுகளும் இணைவதற்கான ஹீரோ என  நினைக்கிறாள். அந்த நேரத்தில் பக்கத்து நாட்டைச் சேர்ந்த அரசன் ஹென்றி  திடுமென ஏஞ்சலினா நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். எளிதில் விசித்திர உயிரினங்களை வென்றுவிடலாம் என்று நினைக்கிறான்.

Maleficent 10ஆயிரக்கணக்கான மனிதப் படைகளுக்கு முன்பு தன்னந்தனியாக வானில் இருந்து சட்டென்று குதிக்கிறாள் ஏஞ்சலினா. அவளை தாக்குவதற்கு முயற்சிக்கும்போது, அங்கே சுற்றியிருக்கும் அத்தனை மரங்களும் உயிர்பெற்று மனிதர்களை வேட்டையாடுகின்றன. விசித்திரமான கரடிகள், ஓநாய்கள், தவளைகள் மனிதர்களை பந்தாடுகின்றன. மிக குறுகிய நேரத்தில் அவமானப்பட்டு, அடிபட்டு மனிதர்கள் புறமுதுகிட்டு ஓடுகிறார்கள். அதனால் மிகவும் அவமானமாக உணர்கிறான் ஹென்றி. கவலையில் படுத்த படுக்கையாக மாறுகிறான்.

Maleficent 4எவன் ஒருவன் ஏஞ்சலினாவை கொன்று வருகிறானோ, அவனுக்கு என்னுடைய மகள் லைலாவை திருமணம் செய்வித்து நாட்டை பரிசளிப்பேன் என்று அறிவிக்கிறான். இதைக் கேட்டதும் ஸ்டீபன்  மனதில் பேராசை உதயமாகிறது. யாருக்கும் தெரியாமல் ஏஞ்சலினாவை பார்க்கச் செல்கிறான். எங்கள் நாட்டு அரசர் உன்னை கொல்வதற்கு திட்டம் தீட்டுகிறார் என்று எச்சரிக்கை செய்கிறான். காதல் மயக்கத்தில் அவன் சொல்வதை முழுமையாக நம்புகிறாள். அவனுடன் சுற்றி பொழுது போக்குகிறாள். அவளுக்கு தண்ணீர் தருகிறான் ஸ்டீபன். அதைக் குடித்த ஏஞ்சலினா மயக்கத்தில் விழுகிறாள். உடனே அவளை கொல்வதற்குப் பதிலாக, அவளுடைய சக்திப் பெட்டகமான இறக்கைகளை வெட்டி எடுத்துக்கொண்டு நாடு திரும்புகிறான். லைலாவை மணந்துகொண்டு ராஜாவாக மாறுகிறான் ஸ்டீபன்.

maleficent 11காதலனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அழுகிறாள் ஏஞ்சலினா. அவமானப்படுகிறாள். இனிமையும் சந்தோஷமுமாக இருந்த ஏஞ்சலினா மனதில் கோபமும் ஆத்திரமும் எழுகிறது. தன்னுடைய எஞ்சிய சக்திகளை எல்லாம் பிரயோகித்து, அந்த நாட்டின் ராணியாக சிம்மாசனத்தில் அமர்கிறாள். ஒரு காகத்தை காப்பாற்றி, தன்னுடைய மெய்க்காப்பாளன் டியாவல்லாக நியமித்துக்கொள்கிறாள்.

ஸ்டீபனுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த தருணத்திற்காக காத்திருந்தது போல் அவன் அரணமனைக்குள் பிரவேசம் செய்கிறாள் ஏஞ்சலினா. உன்னுடைய குழந்தைக்கு சரியாக 16 Maleficent 6வயது நிரம்பும்போது நூல் நூற்கும் இயந்திர ஊசியில் குத்தி கையில் ரத்தம் வழியும். அதன்பிறகு அவள் தூக்கத்திற்கு போய்விடுவாள். அந்தத் தூக்கத்தில் இருந்து யாராலும் அவளை எழுப்பவே முடியாது என்று சாபம் கொடுக்கிறாள். தன்னுடைய மகளுக்கு சிக்கல் என்று தெரிந்ததும் ஏஞ்சலினாவிடம் பணிந்து மன்னிப்பு கேட்கிறான். அதனால் குழந்தையின் சாபத்திற்கு ஒரு தீர்வு சொல்கிறாள். அதாவது உண்மையான காதலுடன் முத்தம் கொடுத்தால் அவள் விழித்துவிடுவாள் என்று சொல்லிவிட்டு செல்கிறாள். உண்மையான காதல் இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்பதுதான் ஏஞ்சலினாவின் எண்ணம்.

Disney's MALEFICENT L to R: Knotgrass (Imelda Staunton) and Flittle (Lesley Manville) Photo Credit: Film Frame ©Disney 2014

குழந்தை அரோரா நாட்டில் இருந்தால் எந்த நேரமும் ஏஞ்சலினாவால் பாதிப்பு வரலாம் என்று பயப்படுகிறான் ஸ்டீபன்னதனால் அவளை குட்டித் தேவதைகளிடம் ஒப்படைத்து காட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் வளர்க்கச் சொல்கிறான். நூல் நூற்கும் இயந்திரங்களை எல்லாம் பறிமுதல் செய்து அரண்மனையின்  தனியறைக்குள் அடைத்துப்போடுகிறான்.

Disney's MALEFICENT  L to R: Maleficent (Angelina Jolie) and Young Aurora (Vivienne Jolie-Pitt)  Ph: Frank Connor  ©Disney Enterprises, Inc.  All Rights Reserved.

காட்டுக்குள் வளரும் அரோராவை 24 மணி நேரமும் கண்காணிக்கிறாள் ஏஞ்சலினா. குட்டித் தேவதைகள் வளர்க்கத் தெரியாமல் தடுமாறுகின்றன. யாருக்கும் தெரியாமல் அரோராவுக்கு உணவு கொடுத்து பாராட்டி சீராட்டி வளர்க்கிறாள் ஏஞ்சலினா. அவள் வளர்ச்சியை கண் நிறைய கண்டு களிக்கிறாள். ஒரு கட்டத்தில் சின்னக் குழந்தைக்கு தெரியாமல் பெரிய தண்டனை கொடுத்துவிட்டதை உணர்ந்து, சாபத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறாள் ஏஞ்சலினா. ஆனால் கொடுத்த சாபத்தை யாராலும் மாற்றமுடியாது என்பது புரிகிறது.

Maleficent 13ஒரு கட்டத்தில் அரோரா ஏஞ்சலினாவை சந்தித்துவிடுகிறாள். நீங்கள் என்னுடைய காட்மதர் என்று சொல்லி பயமில்லாமல் பழகுகிறாள். 16 வயது நெருங்கும் நேரத்தில் ஒரு இளவரசனை காட்டுக்குள் சந்திக்கிறாள் அரோரா. இளவரசன் கொடுக்கும் முத்தத்தால் சாபம் தீர்ந்துவிடும் என்று நம்புகிறாள் ஏஞ்சலினா. எப்போதும் கானகத்தில் ஏஞ்சலினாவுடன் தங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள் அரோரா.

Maleficent 12ஆனால் ஏஞ்சலினாதான் சாபம்  கொடுத்தவள் என்ற உண்மை தெரிந்ததும் அதிர்கிறாள் அரோரா. ஏஞ்சலினாவை சந்திக்க விருப்பமின்றி அரண்மனைக்குப் போகிறாள். 16 வயது நிரம்பும்முன்பு வந்துவிட்ட மகளுக்கு ஆபத்து நேரக்கூடாது என்று அவளை தனியறைக்குள் அடைக்கிறான் அரசன். அந்த அறையில் இருந்து தப்பிக்கும் அரோரா, மிகச்சரியாக நூல் நூற்கும் இயந்திரங்கள் இருக்கும் அறைக்குள் போய்விட, கையில் ஊசி குத்தி ரத்தம் வருகிறது. அங்கேயே மயங்கி சரிகிறாள். நிரந்தர உறக்கத்திற்கு போகிறாள்.

Maleficent 5எப்படியும் அரோராவை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கும் ஏஞ்சலினா, காட்டுக்குள் சந்தித்த இளவரசனை தன்னுடைய சக்தியினால் இழுத்து வருகிறாள். உறங்கிக் கொண்டிருக்கும் அரோராவுக்கு முத்தம் கொடுக்கச் செய்கிறாள். ஆனால் உறக்கத்தில் இருந்து அரோரா விழிக்கவில்லை. இனி அரோராவை யாராலும் காப்பாற்ற முடியாது என நினைக்கிறாள் ஏஞ்சலினா.

இந்த உலகில் உண்மையான காதல் யாரிடமும் இல்லை, நான் அரோராவுக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டேன் என்று அழுகிறாள். இந்த நேரத்தில் தன்னுடைய அரண்மனைக்குள் ஏஞ்சலினா வந்துவிட்டதை அறிந்துகொண்ட அரசன், அவளை சிறைபிடித்து கொல்வதற்கு ஏற்பாடுகள் செய்கிறான்.

யாருடைய முத்தத்தால் கண் விழிக்கிறாள் அரோரா? ஏஞ்சலினாவை சிறைப்பிடித்து கொல்ல முடிந்ததா? இரண்டு நாடும் இணைந்ததா என்பதை எல்லாம் குழந்தை குட்டிகளுடன் திரையில் கண்டுகளியுங்கள்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

  • கடவுளுக்கே சவால் விடும் வகையில் விதவிதமான உயிரினங்களை படைத்திருக்கிறார்கள் கிராபிக்ஸ் நிபுணர்கள்.
  • தலையில் கொம்பு, இறக்கை, ஒட்டிப்பிடித்து தைக்கப்பட்ட காதுகளைத் தாண்டியும் தேவதையாக ஜொலிக்கும் ஏஞ்சலினா இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும்கூட.
  • 1959-ம் ஆண்டு டிஸ்னி தயாரிப்பில் வெளியான ஸ்லீப்பிங் பியூட்டியைத்தான் மேலிஃபிசன்ட் ஆக உருவாக்கியிருக்கிறது டிஸ்னி நிறுவனம்.
  • இதே போன்று முத்தத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பொம்மைப்படமான  ஃபுரோசன், 2013-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது.
  • இயக்குனர் ராபர்ட் ஸ்ட்ராம்பெர்க்கிற்கு இந்தப் படம் கன்னி முயற்சி. ஜேம்ஸ் காம்ரூனின் அவ்தார், டிம் பர்டனின் அலைஸ் இன் ஒன்டர்லேன்ட் ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார் ராபர்ட்.

Maleficent (/məˈlɛfɪsənt/ or /məˈlɪfɪsənt/) is a 2014 American epic dark fantasy film directed by Robert Stromberg from a screenplay by Linda Woolverton and starring Angelina Jolie, Sharlto Copley, Elle Fanning, Sam Riley, Brenton Thwaites, Hannah New, Kenneth Cranham, Imelda Staunton, Juno Temple, and Lesley Manville. The film is a live-action re-imagining of Walt Disney‘s 1959 animated film Sleeping Beauty, portraying the story from the perspective of the antagonist, Maleficent. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, The Da Vinci Code Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 270 times, 39 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>