மொக்க டயனோசர் – த குட் டயனோசர் – The Good Dinosaur – 19 மார்க்

The_Good_Dinosaur_UK_Poster

பாக்கவே பாக்காதீங்க:

பேர் நல்லாயிருக்கு, பெரிய கம்பெனி படம். அதனால டயனோசரும் ஒரு குட்டிப் பயலும் சேர்ந்து கலக்கப்போறாங்கன்னு படத்தைப் பார்க்க உட்கார்ந்தா… கடிகடின்னு கழுத்துல ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு துப்புறாங்கப்பா.  ஹாலிவுட்டை கேவலப்படுத்துற  படம் த குட் டயனோசர்.

டயனோசர்கள் உயிருடன் இருந்தால், மனிதகுலம் இத்தனை தூரம் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட லாஜிக் இல்லாத கதை.  ஒரு டயனோசர் ஜோடி நிலத்தை உழுது விவசாயம் செய்யுதாம்(?). அந்த ஜோடியோட மூணு முட்டையில இருந்தும் மூணு குட்டிகள் (குஞ்சுகளா?) வருகின்றன. மெகா சைஸ் முட்டையில் இருந்து குட்டியூண்டு டயனோசர் வருது. குறை பிரசவமோ என்னமோ, அந்த டயனோசர் எதைப் பார்த்தாலும் பயப்படுது.

good-dinosaurஆர்லோ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த டயனோசருடைய பயத்தை போக்குறதுக்காக அப்பா என்னென்னமோ முயற்சிகள் செய்றார். ஆனா, அது மேலும் மேலும் பயப்படுது. ஆர்லோவை வீரனா மாத்தப்போறேன்னு எங்கேயோ காட்டுக்குள்ள அப்பா கூட்டிட்டுப் போறார். திடீர்னு கடுமையான மழை. செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்ததுபோல தண்ணீர் மளமளன்னு வர, அப்பாவை ஒரேயடியா அடிச்சுட்டுப் போயிடுது. வெள்ளத்தில் சிக்கி எப்படியோ தப்பிப் பிழைக்கும் ஆர்லோ, எப்படி மீண்டும் தன்னுடைய குடும்பத்தை அடைகிறது என்பதுதான் கதை.

The-Good-Dinosaur-970x544டயனோசரின் பயணத்துக்கு ஒரு குட்டிப் பையன் உதவுகிறான். மனிதனைப் போன்று நடக்காமல், விலங்கு போன்று தவழ்ந்தபடி திரியும் ஸ்பாட் என்ற சிறுவன் டயனோசருக்கு உதவியாக இருக்கிறான். பயந்த சுபாவமுடைய ஆர்லோவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்படுகிறான். ஸ்பாட்டை குடும்பத்துடன் சேர்ப்பதற்காக காடு, மலைகளைக் கடந்து பல்வேறு கேவலமான சோதனைகளை தாண்டிச் செல்கிறார்கள்.

the-good-dinosaur 2போதை தரும் பழத்தை தின்றுவிட்டு இருவரும் தள்ளாடுகிறார்கள். அதாவது நமக்கு சிரிப்பு காட்டுகிறார்களாம். தற்செயலாக வேறு சில டயனோசர்களுக்காக சண்டை போடுவது போல்  சாகசம் காட்டுகிறார்களாம். காட்டு வழியில் என்னவெல்லாம் தென்படும் என்று விளக்கம் தருகிறார்களாம். ரெண்டு எருமைகளும் வீடு போய் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் என்ன என்று கடுப்பைக் காட்டும் அளவுக்கு ஆடி அசைந்து நடந்துகொண்டே இருக்கிறார்கள். வழக்கமான அனிமேசன் படங்களில் இருக்கும் விறுவிறுப்பு, நகைச்சுவை, கிண்டல், தத்துவம், நீதி போதனை எல்லாமே மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக எரிச்சல், கடுப்பு, மந்தம் போன்றவை மட்டுமே ஆஜர்.

The Good Dinosaur

இந்த அனிமேசன் படத்தில் கடைசியாக என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லாமல் மறைத்தால் பெரிய சஸ்பென்ஸ் இருப்பதாக நினைத்து, நீங்கள் படத்தை பார்த்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் ஆர்லோவும் ஸ்பாட்டும் அவரவர் குடும்பத்தோடு சேர்ந்து விடுகிறார்கள் என்ற உண்மையை சொல்லிவிடுகிறேன். அதனால் எந்தக் காரணம் கொண்டும், யாரும் ஆர்வத்தோடு படம் ஓடும் தியேட்டர் பக்கம்கூட போய்விட வேண்டாம்.

குழந்தைகளுடன் படம் பார்க்கச் சென்று பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதைவிட, ஒன்றாவது வகுப்பு பாட புத்தகத்தை எடுத்துவைத்து குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள். மனைவியிடம் அடி வாங்கினாலும் குழந்தை சிரிப்பதைப் பார்த்து ரசிக்கலாம்.

ஆனாலும் இந்தப் படத்திற்கு ஏன் 19 மார்க் என்று கேட்டால், அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. பிரமாதமான கதை என்று விளக்கமாக சொல்லி, இத்தனை பெரிய நிறுவனத்தை ஏமாற்றிய கதாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியருக்குத்தான் இந்த மதிப்பெண்.

அனிமேசன் பட ரசிகர்களுக்கான மதிப்பெண்  – 19

ஆங்கிலப்பட ரசிகர்களுக்கான மதிப்பெண் – 8

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :
*டாய் ஸ்டோரி, வால்-இ, கார்ஸ் போன்ற அட்டகாசமான படங்களைத் தயாரித்த வால்ட் டிஸ்னி, பிக்ஸார், போன்ற பெரிய நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து இந்தப் படத்தில் மண்ணை கவ்வியிருக்கிறார்கள்.

*பிக்ஸார் அனிமேசன் நிறுவனத்தில் பணிபுரிந்த பீட்டர் ஷான் இயக்கியிருக்கும் முதல் படம் இது.  கடைசி படமாகவும் இருந்தால் சினிமா ரசிகர்களுக்கு  நல்லது.

The Good Dinosaur is a 2015 American 3D computer-animated comedy-drama adventure film[7] produced by Pixar Animation Studios and released by Walt Disney Pictures. The film was directed by Peter Sohn from a screenplay by Meg LeFauve. Set in a world in which dinosaurs never went extinct, the film follows a young Apatosaurus named Arlo, who meets an unlikely human friend while traveling through a harsh and mysterious landscape. The film stars Raymond Ochoa, Jack Bright, Sam Elliott, Anna Paquin, A. J. Buckley, Jeffrey Wright, Frances McDormand and Steve Zahn. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Don’t Watch, At Your Risk, The Good Dinosaur Review, Tamil Hollywood.

(Visited 386 times, 85 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>