காதல் ராட்சஷி – ஹெவன்லி ஃபாரஸ்ட் (Heavenly Forest)

Heavenly Forest poster

பாக்காம விட்றாதீங்க  – ஹெவன்லி ஃபாரஸ்ட்:

சாக்லேட்டை எந்தப் பக்கம் கடித்தாலும் இனிக்கும் என்பதுபோல் காதலை எந்த மொழியில் பார்த்தாலும் ரசிக்கலாம் என்பதற்கு உதாரணம் ஹெவன்லி ஃபாரஸ்ட் என்ற ஜப்பானிய மொழிப் படம். கதையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் உலகத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திராத வித்தியாசமான காட்சியமைப்பு கொண்ட படம் என்று உறுதியாக சொல்லலாம். வாருங்கள் காதல் வனத்திற்குள் நுழையலாம்.

Heavenly Forest 10கல்லூரிக்கு முதல் நாளே தாமதமாக வருகிறான் நாயகன் மெகோடா. அதனால் வகுப்புக்குள் நுழைவதற்கு விருப்பமின்றி கல்லூரியை சுற்றி வருகிறான். அப்போது பரபரப்பாக கார்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாலையை கடப்பதற்காக கையைக் காட்டியபடி நிற்கிறாள் சிறுமியாகத் தெரியும் சிஷரு. ஷீப்ரா கிராசிங் அருகே மட்டுமே வாகனங்கள் நிற்கும், அங்கே ரோட்டை கிராஸ் செய்யலாம் என்று அழைக்கிறான் மெகோடா. ஆனால் சிஷருவோ, நான் ரோட்டை கிராஸ் செய்வதற்காக நிற்கவில்லை, யாராவது நிற்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ளவே கைகாட்டினேன்… யாராவது நிற்பார்கள் என்று நம்பிக்கையுடன் நிற்கிறாள். புகைப்படக் கலையை நேசிக்கும் மெகோடா, அவளை அற்புதமாக ஒரு படம் எடுத்துக்கொள்கிறான்.

Heavenly Forest 1அங்கிருந்து விலகி கல்லூரியை ஒட்டிய யாருமற்ற கானகத்திற்குள் நுழைகிறான் மெகோடா. அங்கே ஒரு குட்டியூண்டு உடலும் நாலு அடிக்கு வாலும் உள்ள அழகான பறவையைக் காண்கிறான். அதை போட்டோ எடுக்க முயலும்போது பறக்கிறது. அதை பின்னே நின்று பார்க்கும் சிஷரு, நான் அந்தப் பறவையை கண்டுபிடிக்கிறேன் என்று வேகமாக ஓடிப்போய் அந்தப் பறவை நிற்கும் இடத்தை காட்டுகிறாள். அந்தப் பறவையை பிடிக்கமுயல, அது மீண்டும் பறக்கிறது. அந்தப் பறவையை வரவழைக்க என்னிடம் ஒரு வழி இருக்கிறது என்று அவள் பையில் இருந்து டோனட் எடுக்கிறாள். அதனை மரம் முழுவதும் செருகி வைக்கிறாள்.

Heavenly Forest 2மூக்கை உறிஞ்சியபடி, பெரிய சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு, ஒரு பெரிய ஸ்வட்டர் போட்டபடி நிற்கும் ஷீப்ராவும் கல்லூரி முதல் ஆண்டு மாணவி. கல்லூரிக்குத் தாமதமானதால் போகவில்லை என்கிறாள். சாதாரண மனிதர்களின் வாசனை சக்தியில் எனக்கு நூற்றில் ஒரு பங்குதான் இருக்கிறது என்று ஷீப்ரா சொன்னதும் சந்தோஷமாகிறான் மெகோடா. ஏனென்றால் அவனுக்கு இடுப்பு பகுதியில் ஒரு பெரிய படை இருக்கிறது. அதற்காக போடும் மருந்தின் வாசம் அக்கம்பக்கம் எல்லாம் வீசும். மருந்து போடவில்லை என்றால் கன்னாபின்னாவென்று அரிப்பெடுக்கும். அதனால் மருந்து போட்டுக்கொண்டு யாருடனும் நின்று பேசுவதற்கு கூச்சப்பட்டு தனிமை விரும்பியாக இருக்கிறான். ஷீப்ராவிடம் வாசனை பற்றிய கவலை இல்லை என்றதும் ச்கஜமாகப் பழகுகிறான்.

Heavenly Forest 3தினமும் மூன்று வேளையும் டோனட் தவிர வேறு எதையும் சிஷரு சாப்பிடுவதே இல்லை. இன்னமும் அவளுக்கு பால் பற்கள்கூட விழவே இல்லை. இதெல்லாம் என்னுடைய ஜீன் குறைபாடு என்கிறாள். போட்டோகிராபி கற்றுத்தரச் சொல்கிறாள். தனக்குப் பிடித்த கலையை அன்புடன் சொல்லித்தருகிறான் மெகோடா. இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருக்கிறார்கள். அதனால் சிஷருக்குள் காதல் வருகிறது. டோனட் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த சிஷரு, எல்லாவற்றையும் சாப்பிடுகிறாள். பால் பற்கள் உடைந்து புதிய பற்கள் முளைக்கிறது. உடல் எடை கூடி வளர்ந்த பெண் போல் மாறத்துடிக்கிறாள்.

Heavenly Forest 6இந்த நேரத்தில் கல்லூரி வகுப்பில் அழகு தேவதை போன்று மியூகியை பார்க்கிறான் மெகோடா. அவன் பார்வையில் தெரியும் காதலை புரிந்துகொண்டு தானே நெருங்கிவந்து பழகுகிறாள் மியூகி. மேட் ஃபார் ஈச் அதர் ஜோடியாகத் திகழும் மெகோடா – மியூகியைப் பார்த்து பொறாமைப் படுகிறாள் சிஷரு. ஆனால் மியூகியிடம் பழகியதும், அவளது நல்ல குணத்தைக் கண்டு சந்தோஷமாகிறாள். மெகோடோவும் மியூகியும் சேர்வதுதான் சரி என்று, அவர்களை சேர்த்துவைக்க முயற்சி செய்கிறாள்.

Heavenly Forest 5தன் மீது நிறைய அன்பு செலுத்தும் சிஷருக்கு பிறந்த நாள் அன்று என்ன பரிசு வேண்டும் என்று கேட்கிறான் மெகோடா. கொஞ்சமும் யோசிக்காமல், ஒரே ஒரு முத்தம் வேண்டும். அதை நான் செல்ஃப் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறாள். கொஞ்சம் தயங்கினாலும் முத்தம் தருவதற்கு ஒப்புக்கொள்கிறான் மெகோடா. யாருமற்ற காட்டுக்குள் கேமராவை செட் செய்துவிட்டு, முத்தத்திற்கு காத்து நிற்கிறாள் சிஷரு. கண்ணாடியை கழட்டியதும் தேவதை போல் தெரியும் சிஷருக்கு முத்தம் கொடுக்கிறான் மெகோடா.

Heavenly Forest 9அன்று இரவு திடீரென காணாமல் போகிறாள் சிஷரு. அதன் பிறகுதான் மெகோடாவுக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. உடல் வளர்ச்சி அடைந்தால் சிஷரு உயிருக்கு ஆபத்து. அதனால்தான் ஹார்மோன் தூண்டப்படாமல், உடல் வளராமல் இருப்பதற்காக டோனட் சாப்பிட்டு வந்திருக்கிறாள். ஆனால் மெகோடாவை காதலிக்கத் தொடங்கியதும் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நிறைய சாப்பிட்டு ஒரு பெண்ணாக தெரிய நினைத்திருக்கிறாள். மெகோடாவுடன் வாழ்வது முடியாது என்பதால் ஒரு முத்தத்துடன் காணாமல் போய்விட்டாள் சிஷரு.

Heavenly Forest 7இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து சிஷருவின் கடிதம் வருகிறது. ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்த இருப்பதாகவும், அதற்கு வரவேண்டும் என்றும் அழைப்பு இருக்கிறது. உடனே கிளம்புகிறான் மெகோடா. இந்த பயணத்தில்தான் படம் தொடங்குகிறது.

Heavenly Forest 8அமெரிக்காவில் சிஷருவை பார்க்கச்சென்ற மெகோடா, அங்கே மியூகியை பார்க்கிறான். அப்படியென்றால் சிஷரு என்ன ஆனாள் என்பதை படம் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

புகைப்படக் கண்காட்சியில் முத்தப் போட்டோவைக் கண்டு கண்ணீர் வழிய மெகோடா நிற்கும் காட்சி கவிதையைப் போன்று படமாக்கப்பட்டுள்ளது. பச்சைப்பசேல் காட்டுக்குள் மெகோடாவும் சிஷருவும் பழகும் காட்சிகளில் ஒளிப்பதிவு உச்சத்தை தொட்டிருக்கிறது. இருவ்ரும் ஒன்றாக தங்க நேரும்போது, தன் கற்பை குழந்தைத்தனமாக தர நினைக்கும் ஷீப்ராவின் செயல்களும் காதலின் ஒரு அம்சமே.

கூட்ஸ் வண்டி போல் மெதுவாக நகர்ந்தாலும் காதலை விரும்பும் ஒவ்வொரு ரசிகனும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

*இது காலேஜ் ஆஃப் அவர் லைஃப் என்ற நாவலை தழுவி 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜப்பான் மொழி படம்.

*ஜப்பான் மொழியில் இந்தப் படத்திற்கு ஐ லவ் யூ ஒன்லி என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

*ஷீப்ராவாக வரும் எவ் மியாசாகியின் நடிப்புக்கு பத்து ஆஸ்கர் விருது நிச்சயம் கொடுக்கலாம் என்று விமர்சகர்கள் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களைவிட இந்தப் படம் ஆண்களுக்கு ரொம்பவும் பிடித்திருந்ததும் ஆச்சர்யமான விஷயம்.

Heavenly Forest (ただ、君を愛してる Tada, Kimi o Aishiteru?, lit: I Love You, Only) is a 2006 Japanese romance and drama film based on the novel Renai Shashin: Mō Hitotsu no Monogatari (恋愛寫眞 もうひとつの物語?, Collage of Our Life – Another Story)written by Takuji Ichikawa. It was also released as a manga. The film was directed by Takehiko Shinjo, and focuses on the relationship that evolves between a photographer named Makoto, and two of his female university classmates, Shizuru and Miyuki. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Heavenly Forest Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood, world cinema, Japanese movie

(Visited 214 times, 25 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>