ஸ்டார் வார்ஸ் – விமர்சனம் (Star Wars The Force Awakens – Review) – 71 மார்க்

star wars force awakens poster

விமர்சனம் – Star Wars : The Force Awakens

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் சூப்பர் ஸ்டாரை போல், ஸ்டார் வார்ஸ் இந்தியாவில் ஒரு வாரம் தாமதமாக ரிலீஸ் என்றாலும் அதிரிபுதிரியான வெற்றி பெற்றுள்ளது. தமிழ் படங்களின் கலெக்‌ஷனை எல்லாம் தடுமாற வைத்திருக்கும் ஸ்டார் வார்ஸ்: த ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தில் என்னதான் இருக்கிறது என்பதற்கான மேலோட்ட விமர்சனம் இதோ

ஏற்கெனவே ஸ்டார் வார்ஸ் ஆறு பாகங்கள் வந்திருந்தாலும், அவற்றை பார்க்காத ரசிகர்களும் ரசிக்கும்படி ஆக்‌ஷன் கலந்த சயின்டிஃபிக் ஃபான்டஸியாக படம் தயாராகியுள்ளது. இந்த ஸ்டார் வார்ஸ் கதை நடைபெறும் இடம்,  நமது சூரிய காலக்ஸியைத் தாண்டிய வேறு ஒரு காலக்ஸி என்பதும், தீய கும்பலை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  கடைசி ஜெடாய் வீரன் லூக் ஸ்கைவாக்கர் (மார்க் ஹாமில்காணாமல் போய்விட்டான் என்பதை மட்டும் தெரிந்திருந்தால் போதும், கதைக்குள் star wars force awakens 33நுழைந்து ரசிக்கத் தொடங்கலாம். 30 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லூக் எங்கே இருக்கிறான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் படம் ஆரம்பமாகிறது.

லூக் இருக்கும் இடம் பற்றிய தகவல் பைலட்டாக இருக்கும் போ டேமரோனுக்கு (ஆஸ்கர் ஐசக்கிடைக்கிறதுஉடனே அழைப்பு வந்த இடத்துக்குச் செல்கிறான் போ. லூக் இருக்கும் இடத்தின் மேப் கிடைப்பதற்கும் வில்லன் கும்பலின் தலைவனான ஸ்னோக் (ஆண்டி சர்கிஸ்) தன் அதிரடிப்படையான star wars force awakens 5ஸ்டார்ம்ட்ரூப் ஆட்களை தன் சிஸ்யன் கைலோ ரென் (ஆடம் ட்ரைவர்) தலமையில் வந்துசேரவும் சரியாக இருக்கிறது. அதனால் அந்த ரகசிய மேப்பை பிபி-8 எனப்படும் ரோபோவின் கையில் கொடுத்து சரியான நபரிடம் சேர்க்கச் சொல்கிறான். வில்லன் ஆட்கள் போவை star wars force awakens 1கைது செய்து, தமிழ் படத்தைப் போலவே டார்ச்சர் செய்கிறார்கள். லூக்கை கண்டுபிடித்து கொன்றால்தான் பிரச்னையின்றி ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று நினைக்கிறான் ஸ்னோக்.  அதனால் லூக் இருக்கும் இடத்தின் மேப்பை எப்படியாவது கைப்பற்ற நினைக்கிறான்.


இந்த
நேரத்தில் வில்லன் கும்பலில் ஸ்டார்ம்ட்ரூப் ஆட்களிள் ஒருவனாக இருக்கும்  எஃப்.என்.2187 (ஜான் பொயேகாஎன்ற படை வீரனுக்கு திடீரென star wars force awakens 32ஞானோதயம்(?) கிடைக்கிறது. அதாவது இதுவரை வில்லனுக்காக பணி புரிகிறோம்மக்களை அழிக்கிறோம் என்பதை உணர்ந்து மனமாற்றம் அடைகிறான்அதனால் போவுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு, இருவரும் அங்கே இருந்து தப்புகிறார்கள். தன்னுடன் தப்பிவரும் படைவீரனுக்கு ஃபின் என்று பெயர் சூட்டுகிறான் போ. இருவரையும் தேடி வந்து தாக்குகிறது ஸ்டார்ட்ரூப் படை. அந்த கொடிய தாக்குதலில் சிக்கி ஜக்கு எனப்படும் பாலைவன கிரகத்துக்கு வந்து star wars force awakens 13விழுகிறார்கள். போ காணாமல் போய்விட, ஃபின் தப்பிக்கிறான், போ இறந்துவிட்டதாக நினைத்து ஒரு கிராமத்திற்க்கு வந்து சேர்கிறான்.

அங்குதான்  இருக்கிறாள் கதையின் நாயகி ரே (டேய்சி ரிட்லி). தான் யார் என்று தெரியாமல் வளரும் ரே, உடைந்துபோன விண்வெளிக் கலங்களின் பாகக்களை விற்பனை செய்து வயிற்றைக் கழுவுகிறாள். அவளிடம் அடைக்கலம் தேடி வருகிறது பிபி8. அதில் லூக் பற்றிய தகவல் இருக்கிறது என்று தெரியாமல் அடைக்கலம் கொடுக்கிறாள். அதேநேரம் ஃபின்னும் அங்கே வந்து சேர்கிறான்போவையும் ஃபின்னையும் சுட்டு வீழ்த்திய டார்க் சைடு ஆட்கள், அதாவது வில்லனின்
star wars force awakens 26ஆட்கள் 
அந்த கிராமத்தை நாசம் செய்கிறார்கள். ரேவும் ஃபின்னும் பிபி8 உடன் ஒரு பழைய வின்வெளிக் கப்பலை திருடி அதில் தப்புகிறார்கள். ஒரு பயங்கற அதிவேக விமான சண்டைக் காட்சி நம்மை பிரம்மிக்கவைக்கிறது.  

ரேவும் ஃபின்னும் விண்வெளியில் தப்பிவிட்டோம் என்று நினைக்கும் போது, யாரோ விண்வெளிக் கப்பலை star wars force awakens 14முழுதாக பிடிக்க, வில்லன்னிடம்தான் சிக்கிக்கொன்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் சிக்கியது அந்த விண்வெளிக் கப்பலின் உன்மையான சொந்தக்காரரான ஹான் சோலோ-விடம் (ஹாரிசன் ஃபோர்டு). லூக் ஸ்கைவாக்கர்ரும் ஹான் சோலோவும் பழைய நண்பர்கள் என்பதாலும், லூக்கின் தங்கை லெயாவை ஹான் திருமனம்  செய்திருப்பதாலும், லூக்கை கண்டுபிடிக்க உதவ முன்வருகிறான் ஹான் சோலோ. 

star wars force awakens 30ஹான் அனைவரையும் வேறு ஒரு கிரகத்திற்க்கு அழைத்துச் செல்கிறான். அங்கு ஆயிரம் வருடம் வயதான மாஸ் கனாடா (லுபிடா) என்னும் பாட்டியை சந்தித்து பிபி8-யை எப்படி சரியான இடத்தில் சேர்ப்பது என்று ஆலோசனை கேட்கிறார்கள். இவர்கலுடன் சென்றால் வில்லன் கைலோ ரென்னிடம் மாட்டிக்கொள்வோம் என்று என்னி ஃபின் அங்கிருந்து பிரிகிறான். அப்போது எதிர்பாராமல் ரேவுக்கு ஒரு லைட்சேபர் ஆயுதம் கிடைக்கிறது. அதாவது நம்மூர் கத்தி சண்டை மாதிரி, விண்வெளி வீரர்கள் சண்டை போடுவதற்கான லேசர் லைட் அது. அந்த லேசர் லைட் கிடைத்தபிறகு ரேவுக்கு பல்வேறு விஷயங்கள் ஒரு star wars force awakens 21கனவாக தெரியவருகிறது. மேலும் அந்த லைட்சேபர் ஆயுதம் லூக் பயன்படித்தியது என்று மாஸ் கனாடா சொல்ல, இதைக் கண்டு பயந்து அங்கிருந்து காட்டுக்குள் ஓடிவிடுகிறாள், பிபி8 அவளைப் பின்தொடர்கிறது. அந்த ஆயுதத்தை ஃபின்-னிடம் கொடுக்கிறாள் மாஸ் கனாடா. இங்கேயும் கைலோ ரென் ஸ்டார்ம்ட்ரூப் ஆட்களுடன் வந்துவிட, ஃபின், ஹான் சோலோ மாட்டிக்கொள்ள, வில்லன் கும்பலை எதிர்த்து போராடி வரும் லட்சியப்பெண்ணும், காணாமல் போன லூக்கின் சகோதரியுமான லியா (கேரி ஃபிஸர்) அவரது படையோடு வந்து அவர்களைக் காப்பாற்றுகிறாள். ஆனாள், ரே-வை கைலோ ரென் தூக்கிச் சென்று விடுகிறான்.  

star wars force awakens 31ரே மூளைக்குள் இருக்கும் மேப் பற்றிய தகவலை அறிந்துகொள்ள முயற்சிக்கிறான் கைலோ. ஆனால் தன்னுடைய மூளையை கைலோ படித்துவிடாதபடி தடுக்கிறாள் ரே. அவள் முயற்சி வெற்றி அடைகிறது. தன்னுடைய திறமை ரேயிடம் செல்லுபடியாகவில்லை என்ற அதிர்ச்சியில் அங்கிருந்து செல்கிறான் கைலோ. அப்போதுதான் தன்னிடமும் சரக்கு இருக்கிறது என்பதை உணர்கிறாள் ரே. உடனே காவலர்களின் மூளையைப் படித்து… தனக்கு ஆதரவாக அவர்களை மாற்றி அந்த அறையில் இருந்து தப்பிச் செல்கிறாள். 

இந்த நேரத்தில் வில்லன் கும்பலின் தலைவனான ஈவு-இரக்கமில்லாத ஸ்னோக் ஸ்டார்-கில்லர் என்னும் ஒரு புரட்சிகரமான ஆயுதத்தை பயன்படுத்துகிறான். அதாவது ஒரு கிரகத்தை  ஓட்டை போட்டு, அதற்குள் சூரிய சக்தியை இழுத்து, அணு ஆயுதம் போல் இலக்கு நோக்கி அனுப்பினால், அந்த இலக்கு வேறு ஒரு கிரகம் என்றாலும் பஸ்பமாகிவிடும். கணவன் மனைவியான லியா-வும் ஹான் சோலோ-வும் பல நாட்க்களுக்குப் பிறகு star wars force awakens 17சந்திக்கிறார்கள். அவர்களின் பிரிவுக்குக் காரணம், அவர்களிடம் இருத்து பிரிந்து சென்று எதிரியான ஸ்னோக்கிடம் சேர்ந்துவிட்ட தங்களின் மகன் பென்-தான். 

ஸ்டார்-கில்லர் ஆயுதத்தை அழிக்கவும், ரே-வை காப்பாற்றவும், பென்-னை திரும்பி அழைத்துவர ஹான் சோலோ, ஃபின், லியா-வின் படையோடு கிளம்புகிறார்கள். போ உயிருடன் இருப்பதை ஃபின் அப்பொழுது பார்க்கிறான். போ ஒரு சிறந்த விமான கேப்டன் என்பதால் அவனும் போருக்கு வருகிறான்.

*இறுதிப்போரில் என்ன நடக்கிறது ?

*பென் எதிரி படையில் எங்கு இருக்கிறான் ?

*லூக் எதற்காக மறைந்து வாழ்கிறான் ? அவனைக் கண்டுபிடித்தார்களா ?

*எதற்காக ரே அனாதையாக வாழ்கிறாள் ? – இதுபோன்ற  ஏராளமான கேள்விகளுக்கான விடைகளை தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விறு-விறு என்று ஆக்‌ஷன் காட்சிகளுடன் கதை நகர்வதால் நேரம் போவதே தெரியாது. மறக்காம குழந்தை, குட்டிகளையும் கூட்டிட்டுப் போங்க. 3டி யிலோ, ஐமேக்ஸ் 3டி யிலோ பார்க்க முடிந்தால் கட்டாயம் பாருங்கள்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்:

கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்:

பின்குறிப்பு :

*200 மில்லியன் கொட்டி எடுக்கப்பட்ட ஸ்டார் வார்ஸ், அமெரிக்காவின் வசூல் சாதனையில் முதல் இடத்தில் இருந்த ஜுராசிக் வோர்ல்ட் (விமர்சனம் இங்கே படிக்கவும்) ரிகார்டுகளை அடித்து நொறுக்கியிருக்கிறது.

*2009-ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் படம் இயக்கிய ஜெ.ஜெ.ஆப்ரம்ஸ், ஸ்டார் வார்ஸ் படத்தின் இயக்குனராக பனியாற்றியிருக்கிறார்.

*முதல் மூன்று பாகங்களில் நடித்த ஹாரிசன் ஃபோர்டு உட்பட மார்க் ஹாமில்கேரி ஃபிஸர் இந்தப் படத்திற்காக மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

*இந்தக்காலப்படம் என்றாலும், 1977-1983-யின் இடையே வந்த  மூன்று பாகங்களை போலவே முடிந்த அலவு நிஜ லொக்கெஸன்கலும், செட்கலும் பயன்படுத்திக்கொண்டு, கம்ப்யுடர் க்ராபிக்ஸ்-ஐ தேவயான இடங்கலில் மடும் பயன்படித்தி உல்லார் இயக்குனர் ஜெ.ஜெ.ஆப்ரம்ஸ்.

*போ-வாக நடித்துல்ல ஆஸ்கர் ஐசக் இதற்க்கு முன் எக்ஸ் மெஷினா (விமர்சனம் இங்கே படிக்கவும்) என்ற படத்தில் பெயர் பெற்றவர்.

*இந்தப் படம் ரிலீசாவதற்கு முன்னரே 50 மில்லியன் டாலர் அட்வான்ஸ் புக்கிங் மூலம் சம்பாதித்துவிட்டது. இது வேறு எந்தப் படத்திற்கும் கிடைத்திராத வெற்றி.

ஸ்டார் வார்ஸ் ரசிகர்களுக்கு :  71 மதிப்பெண்கள்

மற்ற ரசிகர்களுக்கு                      : 62 மதிப்பெண்கள்

Star Wars: The Force Awakens is a 2015 American epic space opera film directed, co-produced, and co-written by J. J. Abrams. The seventh installment in the main Star Wars film series, it stars Harrison Ford,Mark Hamill, Carrie Fisher, Adam Driver, Daisy Ridley, John Boyega, Oscar Isaac, Lupita Nyong’o, Andy Serkis, Domhnall Gleeson, Anthony Daniels, Peter Mayhew, and Max von Sydow. Produced by Lucasfilm and Abrams’ Bad Robot Productions and distributed worldwide by Walt Disney Studios Motion Pictures, The Force Awakens is set approximately 30 years after Return of the Jedi (1983), and follows Rey, Finn, and Poe Dameron‘s fight with the Resistance, led by veterans of the Rebel Alliance, against Kylo Ren and the First Order, descended from the Galactic Empire. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood, Star Wars Review in Tamil

(Visited 689 times, 84 visits today)

Related posts

5 thoughts on “ஸ்டார் வார்ஸ் – விமர்சனம் (Star Wars The Force Awakens – Review) – 71 மார்க்

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>