சாண்ட்ராவை தேர்வு செய்தாரா நீதிபதி குமாரசாமி?

Sandra Bullock, best actress nominee for her role in "Gravity," arrives at the 86th Academy Awards in Hollywood, California, in this file photo taken March 2, 2014.  REUTERS/Lucas Jackson/Files

50 வயது இளைஞர்களின் கனவுக்கன்னி(?) சாண்ட்ரா புல்லக்கை 2015-ம் ஆண்டின் மிகச்சிறந்த உலக அழகி என்று பீப்பிள் பத்திரிகை தேர்வு செய்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும், கிண்டல் செய்வதாக நினைத்து வாய்விட்டு சிரித்திருக்கிறார் சாண்ட்ரா. ‘என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலியே’ என்று வடிவேலு பாணியில் கேட்டிருக்கிறார். அட, இதுதான் உண்மை என்று தெரியவந்ததும் அடக்கமாகவும் பெருந்தன்மையாகவும் அழகுப் பெருமையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். அதோடு நிற்காமல் அழகுக்கு இலக்கணமும் சொல்லியிருக்கிறார்.

sandra
சாண்ட்ரா புல்லக்

‘அழகு பெறுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதுதான் உண்மையான அழகு. நான் இப்போது இயற்கை உணவு சாப்பிட்டு அமைதியான முறையில் வாழ்க்கை நடத்துகிறேன். அதுதான் என் அழகுக்குக் காரணமாக இருக்கலாம்’ என்றும் அறிவுரை சொல்லியிருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்டு கொதித்துப்போயிருக்கிறார் அமெரிக்காவின் அழகு தேவதை ஜிஜி ஹாதித். 19 வயதே ஆன இந்த அழகுப் புயல்தான், 2015-ன் அழகியாக வருவார் என்று அத்தனை பேரும் பந்தயமே கட்டியிருக்க, பாட்டிக்கு கிரீடம் சூட்டிவிட்டார்கள். இதைக் கேட்டு, ‘அழகிப் போட்டியில் நான் தோற்று இருந்தால்தான் வருத்தப்பட வேண்டும். அந்தப் பத்திரிகை நடத்தியது பாட்டிகளுக்கான போட்டிதானே…’ என்று பொங்கிப்பொங்கி குமுறியிருக்கிறார்.

gigi-hadid-people mag
ஜிஜி ஹாதித்

’அழகிப்போட்டியில இதெல்லாம் சகஜமப்பா’ என்று அசட்டையாக இருக்கமுடியவில்லை. ஏனென்றால் ஏற்கெனவே இரண்டு முறை சாண்ட்ராவை, பீப்பிள் பத்திரிகை அழகியாக தேர்வு செய்துள்ளது.

இதில் ஏதாவது உள்குத்து இருக்குமா என்று மண்டை குடைச்சலாக இருக்க, அவ்வப்போது அறிவுப்பிரசங்கம் செய்யும் அய்யாச்சாமியிடம் சந்தேகம் கேட்டோம். ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தவர், ‘வயசுக் கணக்குல ஏதோ குளறுபடின்னு நினைக்கிறேன். அதனால சாண்ட்ராவை நம்ம நீதிபதி குமாரசாமி தேர்வு செய்திருப்பாரோ? ஏன்னா அவர் கணக்குல வீக்குன்னு பேசிக்கிறாங்களே’ என்று சொன்னார்.

kumarasamy- judge

அடபாவி மனுஷா, அவர் எவ்ளோ பெரிய நீதிபதி, எம்மாம் பெரிய கேஸை எல்லாம் லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்றவர், அவரைப் போய் இந்த வம்புக்குள்ள எல்லாம் இழுக்காதே. இது நம்ம ஊர் போட்டியே இல்லை, அழகிப் போட்டிக்கு இவரைப் போல பெரிய ஜட்ஜ் எல்லாம் போகமாட்டாங்கன்னு சொல்லி, அய்யாச்சாமியிடம் இருந்து தப்பிச்சு வந்ததே பெரிய பாடாப் போச்சு.

ம்… அடுத்த தடவையாவது நம்ம ஜிஜி உலக அழகியா வர்றதுக்கு இப்பவே பிரே பண்ணுவோம்!

(Visited 59 times, 10 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>