ஜீனியஸ் இல்லே, அதுக்கும் மேல – குட் வில் ஹன்டிங் (Good Will Hunting)

Good Will Hunting poster

பாக்காம விட்றாதீங்க – குட் வில் ஹன்டிங்:

தான் ஒரு ஜீனியஸ் என்பது தெரிந்தும், அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், இயல்பான வாழ்க்கை வாழ விரும்புபவன் மட்டுமே நிஜமான ஜீனியஸ் என்பதை நறுக்கென்று சொல்லியிருப்பதால், குட் வில் ஹன்டிங் பாக்கவேண்டிய படமாக மாறிவிட்டது.  தற்கொலை செய்து செத்துப்போன ராபின் வில்லியம்ஸின் அற்புதமான நடிப்பும் போனசாக கிடைப்பதால்,  டபுள் சந்தோஷத்துடன் படத்தைப் பார்க்கலாம்.

Good Will Hunting 12புத்தகத்தை மேலோட்டமாக படித்தாலே சட்டென்று பத்திக்கொள்ளும் கற்பூர புத்தி படைத்தவன் நாயகன் வில் ஹன்டிங்காக வரும் மேட் டாமன் (எங்கள் பாக்கவே பாக்காதீங்க பக்கத்தில் இடம்பெற்ற எலிசியம் பட நாயகனேதான்). உலகப்புகழ் பெற்ற எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் டாமன், மற்ற நேரங்களில் அடாவடி செய்கிறான். சந்தோஷமாக வாழ்வதற்காக மனம் போன போக்கில் நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிக்கிறான். எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் தன்னால் தப்பிக்கமுடியும் என்ற மமதை இருப்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் யாருடனும் மல்லுக்கட்டுகிறான். ஏனென்றால் அவனைப் பொறுத்தவரை இதுதான் சந்தோஷம்.

Good Will Hunting  3எம்.ஐ.டி-யில் கணித மேதையான பேராசிரியர் ஜெரால்ட் (ஸ்டெலன் ஸ்கார்கார்டு) பணியாற்றுகிறார். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் கொண்டவர். ஒரு கடினமான கணக்கை போர்டில் எழுதிப்போட்டு, முடிந்தால் ஒரு வாரத்துக்குள் பதில் கொடுங்கள் என்று மாணவர்களிடம் சவால் விடுகிறார். அன்று இரவு சுத்தம் செய்வதற்கு வரும் வில் ஹன்டிங், அந்தக் கணக்கை அனாயசமாக போட்டு முடிக்கிறான். யாராலும் போட முடியாத கணக்கை இத்தனை எளிதில் தீர்த்துவைத்தது யார் என்று ஆச்சர்யமாகிறார் ஹெரால்ட்.

Good Will Hunting 5அடுத்தபடியாக இன்னும் சிரமமான கணக்கை போர்டில் போட்டுவைக்கிறார். அதனையும் எளிதில் தீர்க்கிறான் டாமன். அப்போது அவனை கண்டுபிடிக்கிறார் ஹெரால்ட். ஒரு சாதாரண தொழிலாளியிடம் இத்தனை பெரிய திறமை ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்து ஆச்சர்யமாகிறார். அவனை எப்படியாவது தன்னுடைய வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், யாருக்கும் சிக்காத சுதந்திர பறவையாக திரிகிறான் டாமன். சில மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கிறார் ஹெரால்ட். தனக்கு அறிவுறுத்தவரும் மனநல மருத்துவர்களுக்கு எல்லாம் அல்வா கொடுத்து தப்பிக்கிறான் டாமன். அதனால் வேறு வழியே இல்லாமல் தன்னுடைய முந்தைய கால தோழன் ஷான் மேகயரை (ராபின் வில்லியம்ஸ்) சந்தித்துப் பேசுகிறான்.

Good Will Hunting 8இந்தியாவில் பிறந்த கணிதமேதை ராமானுஜர் போன்று பிறவியிலேயே மேதையான டாமனை, எப்படியாவது சரியான பாதையில் திருப்ப வேண்டும். கணித உலகில் அவன் சாதனை படைக்க வேண்டும் என்று சொல்கிறார் ஜெரால்ட்.

ராபின் வில்லியம்ஸுடன் டாமனுக்கு ஏற்படும் முதல் சந்திப்பு அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என்றாலும், தொடர்ந்து டாமன் மீது கவனம் செலுத்துகிறார். இந்த சூழலில் எம்.ஐ.டி-யில் Good Will Hunting 7படிக்கும் ஸ்கைலர் (மின்னி ட்ரைவர்) மீது காதல் வசப்படுகிறான் டாமன். இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றுகிறார்கள். இந்த காதலை வைத்து பேசத் தொடங்குகிறார் ராபின்.

மற்றவர்களை விரட்டியதுபோல், ராபினையும் விரட்டுவதற்காக அபாண்டமாக பேசுகிறான் டாமன். ஆனால் அவனை ஒரு முரட்டுக் குழந்தையாகவே பார்க்கிறார் ராபின். இந்த உலகத்தின் மீது அவன் கொண்டிருக்கும் பார்வையும் கோபமும் தேவையற்றது என்பதை புரியவைக்கிறார்.

Good Will Hunting 11படிப்பு முடிந்து கலிஃபோர்னியா செல்வதற்கு தயாராகிறாள் ஸ்கைலர். தன்னுடன் வந்துவிடும்படி டாமனை அழைக்கிறாள். அதைக் கேட்டு கோபமாகிறான் டாமன். தன்னுடைய நண்பர்கள்தான் என்னுடைய உலகம். என்னை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள், நான் எங்கேயும் வரமாட்டேன் என்று அவளுடைய  காதலுக்கு குட்பை சொல்கிறான் டாமன்.

Good Will Hunting 6தன்னுடைய காதல் முறிந்துபோனது குறித்து ராபினுடன் பேசும்போது, ராபின் இன்னமும் மறைந்துபோன மனைவியின் காதலுடன் வாழ்வதைப் பார்க்கிறான். இன்னொரு மனைவி கட்டிக்கொள்ள முடியும், இன்னொரு புதிய வாழ்க்கை வாழமுடியும், பெரிய மேதை போல் புகழ்பெற முடியும் என்றெல்லாம் தெரிந்தாலும் தன் மனைவியின் நினைவுடன் எளிய வாழ்க்கை வாழ்வதுதான் பிடித்திருக்கிறது என்கிறார். சிந்திக்கத் தொடங்குகிறான் டாமன்.

Good Will Hunting 4ஒரு மாபெரும் கணித மேதையாக டாமனை மாற்றியே தீரவேண்டும் என்று ராபினிடம் சண்டை போடுகிறார் ஜெரால்ட். தனக்கு என்ன வேண்டும் என்பதை டாமன் மட்டுமே சொல்லவேண்டும் என்கிறார் ராபின். இருவருக்குமான போராட்டத்தைப் பார்க்கிறான் டாமன்.

தன்னிடம் வரும்படி அழைக்கும் காதலி, மனதுக்குப்பிடித்த வேலையை
செய்யச்சொல்லும் ராபின், கணித மேதையாக மாறினால், நோபல் பரிசு பெறும் அளவுக்கு வசதியும் புகழும் கிடைக்கும் என்று அழைக்கும் ஜெரால்ட்.
இந்த சூழலில் நண்பர்களிடம் ஆலோசனை கேட்கிறான் டாமன், ஆனால்
Good Will Hunting 13அவர்கள் சொல்லும் பதில், எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கிறது. அதனால் டாமன் என்ன முடிவு எடுத்தான் என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பான க்ளைமாக்ஸ். அதனை படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

ஜீனியஸ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வட்டத்தை மீறியதால், படம் அதுக்கும் மேலே இருக்கிறது.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* இந்தப் படத்தின் மூலக்கதைக்கு டாமனும் ஒரு சொந்தக்காரர். பல வருடங்களாக இந்தக் கதையை தூக்கிக்கொண்டு அலைந்திருக்கிறார் டாமன்.

* ஏற்கெனவே இரண்டு முறை ஆஸ்கர் விருதுக்கு ராபின் வில்லியம்ஸ் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஆனால், இந்தப் படத்துக்குத்தான், சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

* ஏராளமான குறும்படங்களும், மியூசிக் ஆல்பங்களும் வெளியிட்டிருக்கும் கஸ் வான் சான்ட், இந்தப் படத்தை 1997-ம் ஆண்டு இயக்கி வெளியிட்டு மெகா சக்ஸஸ் பெற்றார்.

Good Will Hunting is a 1997 American drama film directed by Gus Van Sant, and stars Matt Damon, Robin Williams, Ben Affleck, Minnie Driver and Stellan Skarsgård. Written by Affleck and Damon, and with Damon in the title role, the film follows 20-year-old South Boston laborer Will Hunting, an unrecognized genius who, as part of a deferred prosecution agreement after assaulting a police officer, becomes a patient of a therapist (Williams) and studies advanced mathematics with a renowned professor (Skarsgård). Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 861 times, 281 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>