கல்யாணம் முடிக்காதீங்க – கான் கேர்ள் (Gone Girl)

gone girl cover-250x350

டோன்ட் வாட்ச் – கான் கேர்ள்:

அழகாகவும் அறிவாகவும் இருக்கும் பெண்ணைப் பார்த்து காதல் வசப்பட்டு திருமணம்முடிப்பதும், மடியில் நாகப்பாம்பை கட்டிக்கொள்வதும் ஒன்றுதான் என்பதை நச்சு கலந்து சொல்லும் படம் கான் கேர்ள்.

gone girl 1 Tamil Hollywoodவிதவிதமாக படம் எடுத்து வெற்றிகளை குவித்திருக்கும் டேவிட் ஃபின்ச்சர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர். பென் ஆஃலெக், ரோஸமன்ட் பைக் போன்ற அதிரடி பார்ட்டிகள் நடித்திருந்தாலும்………. சரி, வாங்க கதையைப் பார்க்கலாம்.

ஏமியாக வருகிறார் ரோஸ்மன்ட். பத்திரிகைகளில் கதை எழுதிவரும் ஏமியும் எழுத்தாளராக இருக்கும் நிக் டன்னும் தற்செயலாக சந்திக்கிறார்கள். இருவரது ரசனையும் ஒன்றுபோல் இருக்கவே காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்ட அத்தனை தம்பதியரும் சந்திக்கும் பிரச்னையை இவர்களும் எதிர்கொள்கிறார்கள். ஆம், திருமணத்துக்குப் பிறகு ஒருவர் மீது ஒருவருக்கு ஆர்வம் குறைகிறது. gone girl 5 Tamil Hollywoodகாதலிக்கும் வரை நல்ல முகமூடி போட்டுக்கொண்டு சுற்றியவர்கள்,
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இன்னொரு  இயல்பான முகத்தை வெளியே காட்டுகிறார்கள். ஏமியை அடிக்கும் அளவுக்கு கோபக்காரனாக மாறுகிறான் நிக். ஒரு சிறு பிரச்னையில் ஏமியை தள்ளிவிட்டு அடிப்பதற்கு கையை ஓங்கிவிடுகிறான். அதைக் கண்டு அதிர்கிறாள் ஏமி.

gone girl 2 Tamil Hollywoodஅடுத்த நாள் வீட்டுக்கு வரும் நிக், திடீரென வீடு கலைந்து கிடப்பதை பார்க்கிறான். மனைவி ஏமியை காணவில்லை. அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்காது என்றாலும், வீடு கலைந்துகிடப்பதால் போலீஸுக்குப் போகிறான். போலீஸ் முழுமையாக ஆய்வு செய்கிறது. ஏமியின் ரத்தம் தரையில் கொட்டப்பட்டு கழுவப்பட்டிருப்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறது. ஏமியை காணவில்லை என்றதும், அவளது பெற்றோர் வருகிறார்கள். ஏமியின் அப்பாவும் கதாசிரியரே. சிறுமி ஏமியை நாயகியாக வைத்து அமேசிங் ஏமி என்ற பெயரில்  நிறையவே கதைகள் எழுதியிருப்பவர். தங்கள் மகளை அனைவரும் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று மீடியாக்களிடம் கோரிக்கை வைக்கிறார். அங்கே வரும் நிக், தற்செயலாக சிரித்த முகத்துடன் ஒரு பெண்ணுடன் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி, அவனுக்கே சிக்கலாக மாறுகிறது.

Gone Girl Tamil Hollywood

மனைவி காணாமல் போன கவலை இல்லாமல், நிக் சுற்றிக்கொண்டு இருக்கிறான் என்று செய்தி வெளீயாகிறது. அதனால் மக்கள் கோபப் பார்வை முழுமையாக நிக் மீது படுகிறது. மனைவியை நிக் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸ் முடிவுக்கு வருகிறது. அவனை கைது செய்வதற்காக காத்திருக்கிறது. தன்னை வேண்டுமென்றே போலீஸிடம் சிக்கவைப்பதற்காக, ஏமி ஒரு நாடகம் நடத்துகிறாள் என்பதை புரிந்துகொள்கிறான் நிக். ஆனால், அதனை நிரூபிக்க முடியாமல் தடுமாறுகிறான்.

gone girl 7 Tamil Hollywoodஇதேநேரம், ஏமியின் பார்வையில் இதுவரை நடந்த நிகழ்வுகள் நான்லீனியர் திரைக்கதை ஸ்டைலில் காட்டப்படுகின்றன. தன்னை ஏமாற்றிய கணவனை பழிவாங்குவதற்காக திட்டம்போட்டு ஊரில் இருந்து தப்பியோடுகிறாள். போகும்போது போலீஸ் பார்வையில் படும்வகையில் சில க்ளூக்களையும் டைரியையும் விட்டுச் செல்கிறாள். அந்த குறிப்புகள் மூலம்  நிக் ஏமியை கொலைசெய்து தண்ணீருக்குள் வீசிவிட்டதாக போலீஸ் நினைக்கிறது. உடனடியாக நிக்கை கைது செய்கிறார்கள்.

gone girl 8 Tamil Hollywoodஇந்த சூழலில் காணாமல் போன ஏமிக்கு மக்களிடம் பெரும் அளவில் பாப்புலாரிட்டி அதிகரிக்கிறது. அவளை கொன்றுவிட்டதாக மக்கள் நிக்கை திட்டுகிறார்கள். ஜாமீன் கிடைத்து வெளியேவந்ததும், மீடியா முன்பு ஆஜராகிறான் நிக். புத்திசாலித்தனமாக பேசுகிறான். அதனால் கேவலமாக இருந்த நிக்கின் இமேஜ், சடாரென உயர்கிறது.

gone girl 9 Tamil Hollywoodநிக்கிடம் இருந்து தப்பித்து ஒடும் ஏமி, இப்போது வேறு சில சின்னஞ்சிறிய பிரச்னைகளில் மாட்டுகிறாள். தனக்கு அடைக்கலம் கொடுத்து அடைத்துவைக்கும் ஒருவனுக்கு கொடூரத்திலும் கொடூரமான தண்டனை கொடுக்கிறாள் ஏமி. அங்கேயிருந்து எப்படி தப்பிக்கிறாள், கணவனை கொலை குற்றத்தில் மாட்டிவிடுவதற்கு ஏமி ஏன் திட்டமிடுகிறாள் என்பதை எல்லாம் திரையில் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை.

gone girl 6 Tamil Hollywoodஆம், ஆதரவு கொடுத்தவன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, நேரடியாக கணவனை சந்திக்க வருகிறாள். அவள் கொலைகாரி என்று தெரிந்தாலும், வேறு வழியின்றி அவளை ஏற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலில் நிற்கிறான் நிக். தன்னிடம் படிக்கும் ஒரு மாணவியுடன் நிக் தகாத உறவு வைத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்வதாலே, ஏமி இப்படியெல்லாம் மாறுகிறாள் என்று சொல்கிறார் இயக்குனர்.

மனிதர்கள் எப்போதும் இயல்பாக வாழவேண்டும் என்பதை நேர்க்கோட்டில் சொல்லாமல் நெகட்டிவ் கோட்டில் நின்று ஆமை வேகத்தில் இயக்கியிருக்கிறார் டேவிட் பின்ச்சர். தன்னை கணவன் கவனிக்கவில்லை என்றால் கொலைகூட செய்யலாம்  என்று மனைவியும், வேறு ஒரு பெண் கிடைத்தால் மனைவியை ஏமாற்றலாம் என்று கணவனும் நடந்துகொள்வது சகஜம் என்பதுபோல் இயக்கியிருக்கிறார்.

வலையைக் கொண்டு மீன் பிடித்தால் நிச்சயம் ஏதாவது சிக்கும், வலையைக் கொண்டு தண்ணீர் பிடிக்க நினைத்தால் என்னவாகும்? அப்படித்தான் ஆயிரத்தெட்டு லாஜிக் ஓட்டைகளுடன் உருப்படாத படம் எடுத்திருக்கிறார் டேவிட் பின்ச்சர்.  அதனால் தள்ளிப்போ ஸாரே…

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

*ஜிலியன் ஃப்ளின் என்ற நாவலாசிரியை எழுதிய கதையின் திரைக்கதை வடிவம்தான் கான் கேர்ள். இந்த நாவல் வெளியானபோது, கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் நியூயார்க் பெஸ்ட் செல்லரில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது.

*செவன், க்யுசியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், கேர்ள் வித் அ டிராகன் டாட்டு, சோஷியல் நெட்வொர்க், ஏலியன் 3, ஃபைட் கிளப் என்று படத்துக்குப் படம் வித்தியாசமான கான்செப்ட் தொடுவது டேவிட் பின்ச்சர் ஸ்டைல்.

*பென் இந்தப் படத்தில் நடிப்பு என்பதே தெரியாமல் இயல்பாக குழப்பத்தில் திரிய, பின்னி பெடல் எடுத்திருக்கிறார் ரோஸமன்ட்.

*பரபரப்பைத் தேடும் மீடியா, ஒருவரது நிஜமான வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதையும், மீடியாவுக்கு எந்த தர்மமும் கிடையாது என்பதையும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது கான் கேர்ள்.

*ஏகப்பட்ட கசமுசா காட்சிகள் நிரம்பியிருப்பதால், குழந்தை குட்டிகளுடன் படத்தைப் பார்த்து வீட்டம்மாவிடம் அடி வாங்காதீர்கள்.

Gone Girl is a 2014 American psychological thriller film directed by David Fincher. The screenplay by Gillian Flynn was based on her 2012 novel of the same name. The film stars Ben Affleck and Rosamund Pike. Set in Southeast Missouri the story begins as a mystery that follows the events surrounding Nick Dunne (Affleck), who becomes the primary suspect in the sudden disappearance of his wife, Amy (Pike). Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Dont Watch, At Your Risk, Tamil Hollywood.

(Visited 543 times, 154 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>