கனவு நிஜமாகும் – கோல் (Goal !)

Goal poster

ஜஸ்ட் வாட்ச் – கோல்:

நம் இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உயிர் என்றால், வெள்ளைக்காரர்களுக்கு ஃபுட்பால். அந்த விளையாட்டை ஸ்டேடியத்திற்குச் சென்று பார்ப்பதை வாழ்க்கை லட்சியமாக நினைப்பவர்கள் உண்டு. ஃபுட்பால் ரசிகர்களை மயக்குவதற்கு எடுக்கப்பட்ட படம் கோல்.

லட்சியம் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தால், அதனை நிச்சயம் அடைந்துவிட முடியும் என்பதுதான் படத்தின் ஒற்றை வரிக் கதை. ஒவ்வொரு காட்சியிலும் என்ன நடக்கும் என்பது ஆரம்பம் முதல் முடிவு வரை தெரிகிறது என்றாலும், விளையாட்டு ரசிகர்களை வசீகரிக்கும் மந்திரசக்தி கோல் படத்துக்கு இருக்கிறது.

goal 3அகதியாக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் தப்பிச்செல்கிறான் சிறுவன் சான்டியாகோ முனிட்ஸ். அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே கையில் அனைவரும் எடுத்துச்செல்லும்போது, தன்னுடன் ஃபுட்பால் எடுத்துக்கொண்டு நகர்கிறான் சான்டியாகோ. ஃபுட்பால் என்றால் அவனுக்கு அத்தனை இஷ்டம்.

STEPHEN DILLANE ©GOAL LIMITED, A GUERNSEY COMPANY. ALL RIGHTS RESERVED.கனவு தேசமான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இளைஞனாக வளர்கிறான் சான்டியாகோ. தோட்ட பராமரிப்புடன் சைனிஸ் ஹோட்டலில் வேலையும் செய்யும் சான்டியாகோ, இன்னமும் ஃபுட்பால் கனவுடனே வாழ்கிறான். ஏரியா பையன்களுடன் அவன் ஃபுட்பால் விளையாடுவதை ஆச்சர்யமாகப் பார்க்கிறான் கிளென் ஃபோய். சான்டியாகோவுக்கு யார் ஃபுட்பால் விளையாட கற்றுக்கொடுத்தது என்று அங்கே இருக்கும் நபரிடம் கேட்க, கடவுளாகத்தான் இருக்கும் என்று பதிலாக கிடைக்கிறது. ஆம், அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் விளையாடுகிறான் சான்டியாகோ. விளையாடும் ஸ்டைல் தவறாகவும் பேலன்ஸ் இல்லாமலும் சான்டியாகோ ஆடுகிறான் என்றாலும்  அவனுக்குள் பெருநெருப்பு எரிவதை உணர்கிறான் கிளென். தன்னுடன் இங்கிலாந்து வந்தால் உலகப்புகழ் பெற்ற கிளப்பில் சேர்த்துவிடுவதாக சொல்கிறான் கிளென்.

goal 10கடினமாக உழைத்து பணத்தை யாருக்கும் தெரியாமல் சேர்த்துவைக்கிறான் சான்டியாகோ. ஆனால் இவனது ஃபுட்பால் மோகத்தை கண்டு எரிச்சலாகிறார் தந்தை. வாழ்க்கையில் ஒரு டிரக் வாங்கிவிட்டால், தோட்டப்பணி வேலை செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தேவையில்லாமல் விளையாட்டு மோகத்தில் வாழ்க்கையை இழக்காதே என்று எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கிறார். கிட்டத்தட்ட இங்கிலாந்து போவதற்கான முழு பணத்தையும் சேமித்து முடிக்கும் நேரத்தில், அந்தப் பணத்தை எடுத்து டிரக் வாங்கிவிடுகிறார் தந்தை.

என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறான் சான்டியாகோ. தன் வாழ்நாள்
முழுவதும் சேமித்துவைத்த பணத்தை எடுத்துக்கொடுக்கிறாள் பாட்டி. நீ உன் goal 4கனவை தேடிப் போ. உன் அப்பா வீட்டுக்கு வருவதற்கு முன்பு கிளம்பிவிடு என்று வழியனுப்புகிறாள்.

இங்கிலாந்துக்கு பயணமாகிறான். அங்கே கார் மெக்கானிக்காக பணிபுரியும் கிளென், சான்டியாகோவை வரவேற்று தன்னுடன் தங்கவைக்கிறான். புகழ்பெற்ற நியூகேஸில் யுனைடெட் கிளப்பில் ஒரே ஒரு நாள் விளையாடுவதற்கு சான்டியாகோவுக்கு அனுமதி வாங்கித் தருகிறான்.

goal 1ஏகப்பட்ட கனவுகளுடன் முதன்முறையாக களம் இறங்குகிறான் சான்டியாகோ. கொட்டும் மழையில், சகதியான களத்தில், நிஜமான விளையாட்டு வீரர்களுடன் விளையாடுகிறான். அதனை ஆட்டம் என்றே சொல்லமுடியாத அளவுக்கு சொதப்புகிறான். பந்து அவன் காலில் படவே இல்லை. அதைப் பார்த்து பரிதாபத்துடன் தனியே பந்தை உதைக்கச் சொல்கிறார்கள். வேகமாக வந்து சறுக்கி கீழே விழுகிறான். இவன் வேலைக்கு ஆகமாட்டான் என்று முத்திரை குத்துகிறார்கள்.

goal 8வலியும் வேதனையுமாக ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்கிறான் சான்டியாகோ. தான் லோக்கல் பசங்களுடன் விளையாடத்தான் லாயக்கு என்று நினைக்கிறான். ஆனால் அவன் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறான் கிளென். மீண்டும் கிளப்பில் பேசுகிறான். ஒரே ஒரு மாதம் மட்டும் அவனுக்கு டிரெயினிங் கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்கிறான். அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். உடலெங்கும் சந்தோஷ மின்சாரம் பாய, மீண்டும் மைதானத்தில் இறங்குகிறான்.

goal 9இந்த நேரத்தில் அவனுக்கு மெடிக்கல் செக்கப் நடக்கிறது. தன்னிடம் இருக்கும் ஆஸ்துமாவை வெளிப்படுத்தினால் சிக்கலாகிவிடும் என்று நினைத்து மறைத்துவிடுகிறான். நர்ஸாக வரும் ராஸ் ஹார்மிஸனுடன் நட்பாக பழகுகிறான். அதே நேரம் கிளப்பில் புதிதாக வரும் நட்சத்திர வீரர் கவின் ஹாரிஸுடனும் நட்பாக பழகுகிறான். ஒரு வழியாக மைதானத்தில் இறங்கும் நாள் வருகிறது. விளையாட்டுக்கு முன்பாக ஆஸ்துமா மருந்தை உபயோகிக்க முயல, அதனை கீழே போட்டு சகவீரன் மிதித்து விடுகிறான். அதனால் அந்தப் போட்டியிலும் சோபிக்க முடியாமல் வீணாகிறான். சாண்டியாகோ எதற்குமே லாயக்கு இல்லாதவன் என்று சொல்லி கிளப்பில் இருந்து வெளியேற்றுகிறார்கள்.

Goal 5சொந்த ஊருக்குத் திரும்புவதுதான் ஒரே வழி என்று நர்ஸ் ராஸிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான். அப்போது எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்கிறது. அந்த திருப்பத்தால் மீண்டும் கிளப்பில் விளையாடத் தயாராகிறான் சான்டியாகோ. அடுத்து என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும் என்றாலும், திரையில் பார்த்து ரசியுங்கள்.

அடிமட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும், லட்சியத்துக்காக விடாது பாடுபட்டால் நிச்சயம் அடைந்துவிட முடியும் என்பதை அழுத்தமாக சொல்கிறது கோல். ஃபுட்பால் சம்பந்தப்பட்ட படம் என்பதால் உண்மையான விளையாட்டு வீரர்களான ரொனால்டோ, பெக்கம் போன்ற வீரர்களும் தலைகாட்டிவிட்டு போகிறார்கள்.

விளையாட்டு ரசிகர்களுக்கு ரகளையான விருந்து.

கொஞ்சம் ரசிக்க :

பின்குறிப்பு :

* கோல் வெற்றியைத் தொடர்ந்து கோல் 2, கோல் 3 ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டது. கோல் 2 & 3 படத்திலும் சான்டியாகோவாக குனோ பெக்கர் நடித்திருக்கிறார்.

* படத்தின் இயக்குனர் டானி கேனன் நிஜமான ஃபுட்பால் வீரர். சில கிளப்களில் விளையாடியிருக்கிறார் என்பதால் உணர்வுபூர்வமாக படமாக்கியிருக்கிறார்.

* ஸ்ட்ரேஞ்சர்ஸ், ஜட்ஜ் ட்ரெட்ஐ ஸ்டில் நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் டானி கேனன்.

முழு படத்தையும் பார்க்க:

Goal! (also known as Goal! The Dream Begins in the United States) is a 2005 film directed by Danny Cannonand Produced by Mike Jefferies. It is the first installment of a trilogy also named Goal! This film was made with full co-operation from FIFA, which is one of the reasons actual teams and players are used throughout the film. The second installment, Goal II: Living the Dream, was released in February 2007. The third installment, Goal! III: Taking on the World, was released in June 2009. It starred Kuno Becker as Santiago Muñez, Alessandro Nivola as Gavin Harris, Stephen Dillane as Glen Foy, Marcel Iures as Erik Dornhelm, Anna Friel as Roz Harmison and Tony Plana as Santiago’s father.  Zinedine ZidaneDavid BeckhamRonaldo and Thierry Henry make appearances among other Football players while AC/DC singer Brian Johnson cameo’s as a Newcastle United fan. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just See, Just Watch, Tamil Hollywood

(Visited 136 times, 18 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>