மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

Premam Poster

ஜஸ்ட் வாட்ச் – பிரேமம்:

அழுத்தமான கதைக்கு இலக்கணமாக மலையாள சினிமா இருந்த காலம் மலையேறிப் போயாச்சு. இன்றைய இளைஞர்களைக் கவர்வதற்கு அழகான புதுமுகப் பெண்களும், ஜாலியான திரைக்கதையும் இருந்தாலே போதும் என்று பிரேமம் படம் மூலம் சொல்லியடித்து ஜெயித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன். கதை என்று எதுவுமே இல்லை என்றாலும் அழகுப் புயல்களாக வலம் வரும் முன்று தேவதைகளுக்காக மட்டுமே பார்க்கலாம் பிரேமம். நம்ம சேரன் கைவண்ணத்தில் வெளியான ஆட்டோகிராப்பின் மலிவுப் பதிப்பு என்றும் பிரேமத்தை சொல்லலாம்.

கேரளாவை கலக்கிக்கொண்டிருந்த இளம் நடிகர்  பகத் பாசிலை (நஸ்ரியாவை தள்ளிக்கொண்டு போனவர்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, Premam 2வேகமாக முன்னேறிவரும் நிவின் பாலி நாயகனாக படம் முழுவதும் மூன்று கெட்டப்களில் வலம் வருகிறார்.

மீசை இல்லாத பள்ளி வயதில் குட்டிப் புயலாக வரும் அனுபமா பரமேஸ்வரன் அழகில் மயங்குகிறார். செல்ல நாய்க்குட்டி போல் அவள் செல்லும் இடம் எல்லாம் சென்று காதலை சொல்வதற்கு முயற்சி செய்கிறார். காதலை சொல்பவர்களை எல்லாம் அனுபமாவின் அப்பா விரட்டி விரட்டி அடிப்பதைப் பார்த்து கலங்கிப் போகிறார். Premamஒரு கட்டத்தில் காதலை சொல்லிவிடுவது என்று முடிவெடுக்கும்போது, அனுபமா வேறு ஒரு பையனை கூட்டிக்கொண்டு வருகிறார். தங்கள் காதலுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். முதல் காதல் படக் என்று ஒடிகிறது.

காலம் மாறுகிறது. முறுக்கிய மீசையும் உயர்த்திக் கட்டிய வேஷ்டியும், கோபக்கார இளைஞனுக்குரிய தாடியுமாக கல்லூரியில் Premam  5படிக்கிறார் நிவின். கல்லூரிக்கு வரும் முதல் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்யும்போது, ஆசிரியையாக சேலை கட்டிக்கொண்டு அழகு சூறாவளியாக நுழைகிறார் சாய் பல்லவி. முகமெல்லாம் சிரிப்பும், கொஞ்சம் பருக்களும், கொஞ்சும் தமிழும் பேசும் பல்லவியைக் கண்டதும் காதலில் விழுகிறார் நிவின். சிரித்து சிரித்து என்னை சிறையெடுத்தாய் என்று ரசிகர்களையும் பாடத்தூண்டும் அளவுக்கு உள்ளத்தை Premam 8கொள்ளையடிக்கிறார் சாய் பல்லவி. ஒருவழியாக இருவரும் அன்னியோன்யமாக பழகத் தொடங்குகிறார்கள். ஊருக்குச் செல்லும் சாய்
பல்லவிக்கு விபத்து ஒன்றில் தலையில் அடிபடுகிறது. அதன்பிறகு சினிமா நாயகிகளுக்கு மட்டுமே வரும் பிரச்னை பல்லவிக்கும் வருகிறது. நிவினைப் பார்த்து நீ யார் என்று கேட்கிறார். அம்புட்டுத்தான், அடுத்த காதலும் புட்டுக்கொள்கிறது.

premam 11அடர்த்தியான மீசை, அளவான முடி, கண்ணியமான உடை என பேக்கரி தொழிலதிபராகிறார் நிவின். அங்கே ஒரு தென்றல் காற்றைப் போல் வருகிறாள் மடோனா செபஸ்டின். காதல் சந்தியாவைப் போல் சிரிக்கும் மடோனாவின் அழகில் மீண்டும் மயங்கிப் போகிறார் நிவின். அவரிடம் தன்னுடைய காதலை சொல்லமுயல, இந்த வாரம் எனக்கு நிச்சயம் என்று
குண்டு போட்டுவிட்டுப் போகிறார். அதன்பிறகு என்ன நடந்தது, யாருடன் Premam 9நிவினுக்கு திருமணம் நடந்தது என்பதை டிவிடி வாங்கிப் பாருங்கள். காத்திருக்க முடியும் என்றால், இந்தப் படம் தமிழில் வரும் வரையிலும் பொறுத்திருங்கள்.

நீளமான காட்சிகள், நகராத திரைக்கதை என்றாலும் பெண்கள் வந்ததும் திரையில் வசந்தம் வந்துவிடுகிறது. சேலையில் அடக்கமான பெண்ணாக வரும் சாய் பல்லவி, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார் பாருங்கள், அடேங்கப்பா… அத்தனை ரகளை. இவர் பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டி நிகழ்ச்சியில் கடைசி கட்டம் வரையிலும் வந்தவர் என்பதை தமிழகம் அறியும்.

பொழுதே போகவில்லை என்று ஈயடிப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்.

கொஞ்சம் ரசிக்க :

பின்குறிப்பு :

* நேரம் படத்தை இயக்கி வெற்றி அடைந்த அல்போன்ஸ் புத்ரன், நிவின் பாலி துணைகொண்டு பிரேமத்தை இயக்கி வெற்றி அடைந்திருக்கிறார்.

* பாடல்கள் நிறையவே இருந்தாலும், காட்சியமைப்பில் அசத்தியிருக்கிறார் அல்போன்ஸ். கேரளாவில் இத்தனை இயற்கை கொட்டிக் கிடக்கிறதா, இத்தனை அழகான பெண்கள் இருக்கிறார்களா என்று வாயைப் பிளந்தபடி பார்க்கவைப்பதில் வெற்றி அடைந்திருக்கிறார்.

* படம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆகியிருந்தாலும், திருப்தியடையாத விமர்சகர்கள் அல்போன்ஸை வாட்டி வதைக்கிறார்கள். அழகான பெண்களைக் காட்டி ரசிகர்களை ஏமாற்றுவதாக சொல்கிறார்கள். இது தப்பு  என்றாலும் சந்தோஷம் தரும் அழகான நிஜம்.

Premam (English: Love) is a 2015 Indian Malayalam coming-of-age musicalromantic comedy drama film written, edited, and directed by Alphonse Putharen. It is a three-part portrait of the lead finding his true love. Produced byAnwar Rasheed under Anwar Rasheed Entertainment. The film stars Nivin Pauly, Madonna Sebastian, Sai Pallavi, and Anupama Parameshwaran in the lead roles along with a supporting cast of Shabareesh Varma, Krishna Shankar, Vinay Forrt and Soubin Sahir. The film features 17 debutant actors. Rajesh Murugesancomposed the music and background score. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just See, Just Watch, Tamil Hollywood

(Visited 642 times, 38 visits today)

Related posts

2 thoughts on “மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

  1. […] George) டிசைன் செய்திருக்கிறார். ஜில்லா, பிரேமம், மங்காத்தா, மெட்ராஸ், ரஜினி […]

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>