முட்டாள் பேய் – கோத்திகா (Gothika)

Gothika Poster

பாக்கவே பாக்காதீங்க – கோத்திகா:

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, அவர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியரிடம் போவார் என்ற விசுவின் குழப்பமான வசனத்தை திரைக்கதையாக நீட்டினால்… அதுதான் கோத்திகா.

ராபர்ட் டவ்னி ஜூனியர், ஹாலி பெர்ரி போன்ற சூப்பர் கலைஞர்கள் நடித்தால், அந்தப் படம் உருப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்கு உருவான கதையாக, திக்கு திசை தெரியாமல் பயணிக்கும் ஒரு  சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை திரைப்படம் கோத்திகா.

Gothika 6நம்பிக்கை தரும் விதமாகத்தான் கோத்திகா ஆரம்பமாகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பராமரிக்கும் மனநல மருத்துவர் டாக்டர் மிரண்டாவாக வருகிறார் ஹாலி பெர்ரி. அங்கே இருக்கும் நோயாளி குளோயி (Chloe), பூட்டிய அறைக்குள் என்னை ஒருவன் தினமும் கற்பழிக்கிறான் என்று சொல்வதை நம்பமுடியாமல் கணவன் டக்ளஸிடம் சொல்கிறாள். டாக்டர் டக்ளஸாக வரும் சார்லஸ் டட்டனும் ஒரு மனநல மருத்துவர் என்பதால், இந்த கேஸை உன்னால் நிச்சயம் நல்லமுறையில் குணப்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொடுக்கிறான்.

Gothika 7வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, மழையினால் வேறு பாதையில் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாருமற்ற பாதையில் வேகமாக காரில் செல்லும்போது நடுரோட்டில் அறைகுறை ஆடையுடன் ஒரு பெண் நிற்பதைப் பார்த்து அதிர்கிறாள். அவளை ஏற்றிவிடாமல் காரை ஒடித்துத்திருப்பி நிறுத்துகிறாள். ரோட்டில் நிற்கும் பெண் காத்லீனுடன் பேசும்போது  மிரண்டாவுக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

Gothika 8மூன்று நாட்கள் கழித்து கண் விழித்துப் பார்க்கிறாள் மிரண்டா. தான் ஒரு பைத்தியக்காரப் பெண்ணாக கம்பிகளுக்குப் பின்னே இருப்பதைப் பார்க்கிறாள். தன் மீது தீராத ஆசையுடன் பின் தொடரும் மற்றொரு மருத்துவர் டாக்டர் பீட் கிரகாம் (ராபர்ட் டவ்னி ஜூனியர்) தனக்கு சிகிச்சை அளிப்பதைப் பார்த்து அதிர்கிறாள். என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறாள்.

gothika 9போலீஸ் விசாரணைக்கு வருகிறது. என்ன காரணத்தினால் உன் கணவனை கொலை செய்தாய் என்று கேட்கிறான் செரிப் ரயன்னாக வரும் ஜான் கேரோல் லின்ச். இவன் கணவன் டக்ளஸுக்கு தோழன் என்பதால், கொலை செய்த ஆதாரத்துடன் சிக்கியிருக்கும் மிரண்டாவை கடுமையாக விசாரணை செய்கிறான். இதற்கு எல்லாம் காரணம் ராபர்ட் டவ்னி ஜூனியர் என்று நினைக்கிறாள் மிரண்டா. தன் மீதுள்ள காதல் காரணத்தால், கணவனை கொலை செய்துவிட்டு தன்னை சிக்க வைத்திருக்கலாம் என்று நினைக்கிறாள்.

Gothika 4பேய், பிசாசு மீது எந்த நம்பிக்கையும் இல்லாத மிரண்டாவிற்கு திடீரென வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. அறைக்குள் யாரோ இருப்பது தெரிகிறது. ரோட்டில் பார்த்த பெண், தன்னை எங்கேயோ அழைப்பது புரிகிறது. சிறையில் இருந்து தப்புவதற்கு பேய் உதவி செய்கிறது. சிறையில் இருந்து தப்பித்து வீட்டுக்குச் செல்கிறாள். அங்கே போனதும், கணவனை எப்படி கொலை செய்தாள் எனும் காட்சி, அவள் கண்களுக்குள் விரிகிறது.

Gothika  3அங்கேயிருந்து அவர்கள் முன்பு தங்கியிருந்த பழைய வீட்டுக்குச் செல்வதற்கான க்ளூ கிடைக்கிறது. கைவிடப்பட்ட அந்த வீட்டில், யாருக்கும் தெரியாமல்  பாதாள அறை இருப்பது தெரிகிறது. அங்கே நுழைந்து பார்க்க… அது வித்தியாசமான சித்ரவதைக் கூடம் என்பது தெரிகிறது. ரோட்டில் பார்த்த பெண்ணை, இங்கே வைத்து டக்ளஸ் பாலியல் கொடுமை செய்து கொலை செய்திருப்பது வீடியோ ஆதாரமாக இருக்கிறது. கணவன் ஒரு காமக்கொடூரன் என்பது தெரிந்ததும் அதிர்கிறாள். இது தெரியாமல் அவனுடன் இத்தனை நாள் கல்யாணமாகி குடும்பம் நடித்தி குப்பை கொட்டியிருக்கிறேன் என்று அழுகிறாள். பேய் தன்னுடைய உடம்பை பயன்படுத்தி கணவனை கொலை செய்திருப்பது புரிகிறது.

gothika 1ஆனால் சிக்கல் இன்னமும் முடியவில்லை என்பதுபோல், ‘நாட் அலோன்’ என்று சில இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறாள் ஹாலே பெர்ரி. மீண்டும் மீண்டும் யோசிக்கும்போதுதான், அந்த பாலியல் குற்றங்களை கணவன் மட்டுமே செய்திருக்க வாய்ப்பு இல்லை, இன்னொருவன் இருக்கிறான் என்பதற்கான குறிப்பு என்பது புரிகிறது. அந்த இன்னொருவன் முதுகில் நெருப்பில் எரியும் பெண்ணின் படம் டாட்டூவாக வரையப்பட்டிருக்கும் என்பதும் தெரியவருகிறது.

Gothika 5இதுகுறித்து கணவனின் தோழனும் போலீஸ் துறையில் இருப்பவனுமான செரிப் ரியானிடம் தகவல் சொல்கிறாள் ஹாலி பெர்ரி. அவன் யாராக இருக்கும் என்று கேட்கிறான் செரிப். கணவனுக்குத் தெரிந்தவனாக இருக்க வேண்டும், இருவருக்கும் சின்னப்பிள்ளையில் இருந்து நட்பு இருந்திருக்க வேண்டும், அவன் பெற்றோர் இல்லாமல் வளர்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போதுதான், அது செரிப் ரியானாகவே இருக்கலாம் என்று நினைத்து அதிர்கிறாள். உடனே அவன் ஹாலி பெர்ரியை கொலை செய்ய முயற்சிக்க… அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

பாலியல் கொடுமை செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு செத்துப்போன பெண் பிள்ளைகள், பேயாக மாறியதும் குற்றவாளிகளை எதுவும் செய்யாமல் ஊரில் மற்றவர்களை எல்லாம் மிரட்டுகிறது. இந்தப் படத்தில் காட்டப்படுவது போல் கேணத்தனமான, முட்டாள்தனமான பேயை எந்தப் படத்திலும் பார்த்திருக்கமுடியாது என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆக மொத்தம், பயமே வராத பேய் படம் என்பதை பயமே இல்லாமல் சொல்லலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* மற்றவர்களால் உணரமுடியாத, பார்க்கமுடியாத அனுபவமே கோத்திகா என்பதன் அர்த்தமாம்.

* ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஹாலி பெர்ரியை நம்பி எடுக்கப்பட்ட கோத்திகா, விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. வசூலிலும் சுமார் ரகம்தான்.

* பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகர், எழுத்தாளர், இயக்குனராக மாத்யு காஸோவிட்ஸ் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோத்திகா. ஏராளமான குறும்படங்களை இயக்கியிருக்கும் மாத்யு, நிறைய விருதுகளும் வாங்கியிருக்கிறார்.

* ஐயர்ன் மேன், ஷெர்லாக் ஹோம்ஸ், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றிருக்கும் ராபர்ட் டவ்னி ஜூனியர் ஐந்து வயதிலேயே சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gothika is a 2003 supernatural horror film directed by Mathieu Kassovitz and written by Sebastian Gutierrez.Halle Berry plays a psychiatrist in a women’s mental hospital who wakes up one day to find herself on the other side of the bars, accused of having murdered her husband. It also stars Robert Downey, Jr. as Dr. Pete Graham, Charles S. Dutton as Dr. Douglas Grey, John Carroll Lynch as Sheriff Ryan and Penélope Cruz among others. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Dont Watch, At Your Risk, Tamil Hollywood.

(Visited 317 times, 33 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>