எதிரியை கொல்ல முத்த டெக்னிக் – கெட் ஸ்மார்ட் (Get Smart)

Get Smart poster

ஜஸ்ட் வாட்ச் – கெட் ஸ்மார்ட்:

எதிரியை கொல்வதற்கும் வெல்வதற்கும் வாள் தேவையில்லை வாய் மட்டுமே போதும் என்பதை சொல்லும் நகைச்சுவை படம் கெட் ஸ்மார்ட். வாய் என்றதும் பக்கம் பக்கமாக வசனம் பேசி எதிரியை திருத்தும் படம் என்று நினைத்துவிட வேண்டாம். வாயோடு வாய் வைத்து பச்சக் என்று முத்தம் கொடுத்து எதிரியை கொல்லும் புது டெக்னிக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

get smart 1அமெரிக்காவின் டாப் சீக்ரெட் அமைப்பில் டெக்னிக்கல் அனலிஸ்ட் பணியில் இருக்கிறான் மாக்ஸ்வெல் வேடத்தில் நடித்திருக்கும் ஸ்டீவ் கேரல்.  ஏஜென்ட் 23 ஆக இருக்கும் ட்வைன் ஜான்சன் (ராக்) போன்று அதிரடியாக துப்பறியும் வேலையில் இறங்கி, நாட்டுக்கு சேவை ஆற்றவேண்டும், அனைவரும் தன்னை போற்றிப் புகழவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறான். ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அசட்டுத்தனமாக செயல்படுவதால், மேக்ஸை  அனலிஸ்ட் வேலையிலேயே உட்கார வைக்கிறார்கள்.

get smart 2இந்த நேரத்தில் ஒரு தீவிரவாத கும்பல், சீக்ரெட் அமைப்பின் மீது திடீர் தாக்குதல் நடத்தி பெரும் சேதம் ஏற்படுத்துகிறது. அதோடு ஃபீல்ட் பணியில் இருக்கும் ஏஜென்ட்கள் பற்றிய விபரங்களையும் கையோடு எடுத்துப்போகிறார்கள். அதனால் இதுவரை ஃபீல்டு பணியில் இல்லாத புதிய நபர்களை அனுப்பி தீவிரவாத கும்பலை அடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேறு வழியே இல்லாமல் மாக்ஸ்க்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவனை வழிநடத்தும் பொறுப்பு சமீபத்தில் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட சாகசக்காரியான ஏஜென்ட் 99 ஆன் ஹாத்வே வசம் ஒப்படைக்கப்படுகிறது.

get smart 7தான் மாபெரும் அறிவாளி, புத்திசாலி, தைரியசாலி என்று எண்ணிக்கொள்ளும் மாக்ஸ்க்கும் ஆன்க்கும் விமானப்பயணத்திலேயே மோதல் ஆரம்பமாகிறது. தன்னைவிட ஆன் வயதானவள் என்பதை அறிந்துகொண்டு கிண்டல் செய்கிறான் மாக்ஸ். தொடர்ந்து மாக்ஸ் செய்யும் அசட்டுத்தனத்தால் சிப்பந்திகளால் கைது செய்யப்படுகிறான். கையைக் கட்டியிருக்கும் சின்ன பிளாஸ்டிக் கயிறை அவிழ்ப்பதற்கு, ஜேம்ஸ்பான்ட் உபயோகிக்கும் நவீன கருவியை பயன்படுத்தத் தெரியாமல் உபயோகித்து… ஏரோப்ளேனில் இருந்து பாராசூட் இல்லாமல்  கீழே விழுகிறான். மாக்ஸை காப்பாற்றுவதற்காக, பாராசூட் எடுத்துக்கொண்டு ஆன் கீழே குதிக்கிறாள். பாராசூட் இல்லாமல் குதிக்கும் மாக்ஸை பிடித்துக்கொண்டு கீழே போகிறாள்.

get smart 4இதே நேரம் வில்லனின் கையாளாக வரும் கிரேட் காளி (நம்ம இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர்) ஏரோபிளேனில் இருந்து குதித்து இருவரையும் கொல்வதற்கு முயற்சி செய்கிறார். மாக்ஸ், ஆன் இருவரையும் காளி கொல்வதற்கு முயற்சிக்கும் நேரத்தில், அவன் எதிர்பாராத நேரத்தில் திடீரென முத்தம் கொடுக்கிறாள் ஆன். அழகுப் பதுமையிடம் இருந்து அப்படியொரு முத்தத்தை எதிர்பார்க்காத காளி, அப்படியே அசந்துபோய் வானத்தில் இருந்து கீழே விழ, இருவரும் தப்பிக்கிறார்கள்.

get smart 6தீவிரவாத கும்பலையும், அவர்கள் திருடிப்போன நியூக்ளியர் கருவிகளையும் எலியும் பூனையுமாக இருக்கும் துப்பறியும் புலிகள் தேடிப் போகிறார்கள். அவற்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாக்ஸ் அடிக்கும் கூத்துக்களும், நடனப்போட்டியும் வாய்விட்டு சிரிக்கவைக்கும் ரகம். ஒருவழியாக நியூக்ளியர் கருவி இருக்கும் இடத்தை மாக்ஸ் கண்டுபிடித்து மேலிடத்துக்கு அறிவிக்கிறான். உடனே மேலிடத்தில் இருந்து ஏஜென்ட் ட்வைனை அனுப்பி, அந்த இடத்தை அழிக்கச் சொல்கிறார்கள். அப்போது, அந்த இடம் ஒரு சாதாரண பேக்கரி என்பதும் அங்கு உண்மையிலேயே நியூக்ளியர் கருவி இல்லை என்பதும் தெரியவருகிறது.

get smart 5நியூக்ளியர் கருவியை கண்டுபிடித்ததாக பொய் சொன்ன மாக்ஸை, டபுள் ஏஜென்ட் என்று சந்தேகப்பட்டு கைது செய்கிறார்கள். சிறையில் இருக்கும் மாக்ஸ், நடந்ததை எல்லாம் யோசித்துப் பார்க்கிறான். எங்கே தவறு நடந்தது என்பதை யோசித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறான். தவறை சரிசெய்வதற்காக சிறையில் இருந்து தப்பிக்கிறான். மாக்ஸ் செய்த சாகச செயல்கள், குறும்புகள் அனைத்தையும் நினைத்துப் பார்க்கும் ஆன், மாக்ஸ் குற்றமற்றவன் என்று நம்புகிறாள். தப்பித்துவரும் மாக்ஸ் – ஆன் இருவரும் சேர்ந்து உண்மையான டபுள் ஏஜென்ட் யார் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.

get smart 8இந்த நேரத்தில், நியூக்ளியர் கருவியை பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்வதற்கு தீவிரவாதிகள் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியை மாக்ஸ், அன் இருவரும் சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.

மகாபலசாலியான ட்வைன் ஜான்சன், கிரேட் காளி போன்றவர்களை, அனுபவம் இல்லாத கத்துக்குட்டி மாக்ஸ் சமாளிக்கும் விதம் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும். அழகுப் புயல் ஆனை மயக்குவதற்காக மாக்ஸ் செய்யும் லீலைகளும், சிந்தனைகளும் புதுமையானவை. பொதுவாக நகைச்சுவையை மையமாக வைத்து படம் எடுப்பதில் நிறையவே ரிஸ்க் இருக்கிறது. எத்தனை சிறப்பாக படத்தை எடுத்தாலும் சிரித்துவிட்டு போவார்களே தவிர, பாராட்டவோ பரிசு கொடுக்கவோ மாட்டார்கள். ஆனாலும் இந்தப் படத்தில் முடிந்தவரை நேர்த்தியாக சிரிக்க வைத்திருக்கிறார்கள். பொழுது போகாத நேரத்தில் சந்தோஷமாக படம் பார்க்க விரும்புபவர்கள் கெட் ஸ்மார்ட் பார்த்து ரசிக்கலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* 1960களில் தொலைக்காட்சி தொடராக வெளிவந்து சக்கைபோடு போட்ட கதையே கெட் ஸ்மார்ட்.

* நட்டி புரபஸர், 50 ஃபர்ஸ்ட் டேட் போன்ற படங்களை இயக்கிய பீட்டர் சீகல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

* கெட் ஸ்மார்ட் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன, ஆனால் படம் எடுக்கப்படவில்லை.

Get Smart is a 2008 American action comedy film which was produced by Leonard B. Stern, who is also the original series’ producer. The film is based on Mel Brooks and Buck Henry‘s 1960s spy parody television series of the same name. The film stars Steve Carell, Anne Hathaway, Dwayne Johnson and Alan Arkin, and co-stars Terence Stamp, Terry Crews, David Koechner and James Caan. Bernie Kopell, who played Siegfried in the original series, also appeared in the film. The film centers on an analyst named Maxwell “Max” Smart (Carell) who dreams of becoming a real field agent and a better spy. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 218 times, 25 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>