நீங்கள் எக்ஸ்மேன் ஆவதற்கு அரிய வாய்ப்பு…!

xmen-wolverine

எக்ஸ்மேன் என்றாலே, வோல்வரின் கதாபாத்திரம்தான் நினைவுக்கு வரும். வோல்வரினாக  நடிக்கும்  ஹுயூ ஜேக்மேன்  கைமுட்டியை ஆக்ரோஷமாக மடக்கியதும் விரல்களில் இருந்து கத்திகள் முளைத்து எதிரிகளை விதம்விதமாக பதம்பார்ப்பார். அவர் இப்போது, ’இனிமேலும் என் கைகளுக்குள் கத்திகளை மறைத்துவைக்க முடியாது. வோல்வரின் கதாபாத்திரத்தில் இருந்து விடைபெறுகிறேன்’ என்று டாட்டா காட்டியிருக்கிறார். இப்போது தயாரிப்பில் இருக்கும் எக்ஸ்மேன்: அபாகலிப்ஸ், வொல்வரின் 3 படங்களுக்கான ஒப்பந்தம் முடிந்ததும் விடைபெறுகிறாராம். இந்த இரண்டு படங்களும் 2016, 2017 ஆண்டுகளில் வெளியாகின்றன. இந்தப் படங்களையும் சேர்த்து ஏழு படங்களில் வோல்வரின் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் ஜேக்மேன்.

wolverine-xmen

இந்த திடீர்(?) முடிவுக்குக்  காரணமாக அவரது மனைவியைத்தான்  கைகாட்டுகிறார்.  தினமும்  உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பதும், ஏகப்பட்ட நான் வெஜ் ஐட்டங்களைத் தின்று தீர்ப்பதையும்  மிகவும் இடைஞ்சலாக கருதுகிறாராம் அவர்  மனைவி டெபொரா-லீ ஃபர்னீஸ்.  இத்தனை வருடங்களாக மனைவி சொல்லைக் கேட்காத ஜேக்மேன்,  திடீரென நல்லவராக மாறி, ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று ரிடயர்மெண்ட் அறிவித்திருக்கிறார்.

இனிமேல் மிகவும் ரிலாக்ஸ் மூடில் பணம் சம்பாதிக்க இருப்பதாகச் சொல்லும் ஜேக்மேன் அதற்கான வாய்ப்புகளைத் தேடிவருகிறாராம். (நம்ம அண்ணாச்சி சரவணபவனில் காய்கறி வெட்டுவதற்கு இப்படி கைநிறைய கத்திகள் வைத்திருக்கும் ஒருத்தரைத்தான் தேடுகிறார்கள் – யாராவது அறிமுகம் செய்துவைத்தால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கலாம்) நம்மூர் தொலைக்காட்சித் தொடர் என்றால், ‘இவருக்குப் பதில் இனி இவர் தோன்றுவார்’ என்று ஒரு போட்டோவைக் காட்டி நாடகத்தை எந்தத் தடங்கலும் இன்றி தொடர்வார்கள். ஃபாக்ஸ் நிறுவனமும்  நம்மவர்களைக் காப்பியடித்து ஜேக்மேன் கேரக்டருக்கு வேறு ஒருவரை பயன்படுத்தும் முடிவில்தான்  இருக்கிறதாம்.

உங்கள் யாருக்கேனும் ஜேக்மேன் மாதிரி உடற்கட்டும்,  வலிமையும், மனைவி சொல்லைக் கேட்காத தைரியமும் இருந்தால் உடனே ஃபாக்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள். அடுத்த  வோல்வரின் நீங்களாக இருக்கலாம்.

(Visited 220 times, 15 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>