செத்துசெத்து விளையாடுறாங்க – Edge Of Tomorrow

edge of tomorrow

பாக்கவே பாக்காதீங்க – எட்ஜ் ஆஃப் டுமாரோ:

கம்ப்யூட்டர் கேம் ஆடுபவர்களுக்கு கண்டிப்பாக இந்த அனுபவம் இருக்கும். முதல் முறை விளையாடும்போது, எந்த  இடத்தில் எதிரி வருவான், என்ன ஆபத்து இருக்கும் என்று தெரியாமல் மாட்டிக்கொள்வார்கள். அடுத்த முறை விளையாடும்போது, குறிப்பிட்ட இடத்தில் என்ன நடக்கும் என்பது தெரியும் என்பதால் அதுவரையிலும் வேகமாகவும் சரியாகவும் முன்னேறிச் செல்வார்கள். அடுத்து மேற்கொண்டு தாண்டிச் செல்லும்போது மீண்டும் அடிபடுவார்கள். அடுத்த முறை அந்த இடத்தையும் எளிதாக கடந்து செல்வார்கள். அதன்பிறகு மீண்டும் வேறு ஒரு இடத்தில் அடிபடுவார்கள். அடுத்து விளையாடும்போது…. போதும் நிறுத்து என்று கத்தத் தோன்றுகிறதா…? அப்படித்தான் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் எட்ஜ் ஆஃப் டுமாரோ பார்க்கும்போதும் கத்தத் தோன்றுகிறது. ஆனால் இந்தப் படத்தை சூப்பரான சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று சிலர் கொண்டாடுவதுதான் வேடிக்கை. வாருங்கள் மொக்கை கதையைப் பார்க்கலாம்.

edge-of-tomorrow7வேற்று கிரகத்தில் இருந்து உயிரினங்கள் படையெடுத்துவந்து மனித குலத்தை அழிக்கிறது. ஒருவழியாக அத்தனை நாட்டு ராணுவங்களும் ஒன்றுசேர்ந்து, அந்த படையெடுப்பை தடுத்து நிறுத்துகின்றன. ரத்தம், துப்பாக்கி என்றாலே ராணுவ அதிகாரியாக இருக்கும் டாம் குரூஸ்க்கு (இந்தப் படத்தில் மேஜர் வில்லியம் கேஜ்) அலர்ஜி. அதனால் தொலைக்காட்சிகளில் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி பேசும் அதிகாரியாக இருக்கிறார். எந்தப் போரிலும் பங்கேற்காமல் தப்பித்து வருகிறார். (இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி புஸ்வானமாக இருப்பவர்கள் ஆக்ரோஷ அணுகுண்டாக மாறுவதை பார்த்துத் தொலைக்க வேண்டுமோ?) தற்செயலாக லண்டன் வரும் டாம் க்ரூஸை போரில் இறங்கச் சொல்கிறார்கள். தப்பிக்க முடியாமல் போரில் இறங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.

edge-of-tomorrow3துப்பாக்கியால் எப்படி சுடவேண்டும் என்பதுகூட தெரிந்துகொள்ளாமல் ஏலியன்களை அழிப்பதற்கான ஆடைகளை அணிந்துகொண்டு பயணம் செய்கிறார். ஏலியன்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்துகின்றன. அந்த நேரத்தில்தான் ராணுவ அதிகாரியாக இருக்கும் எமிலி பிளன்ட் (படத்தில் ரிடா) அதிரடியாக சண்டைபோட்டு ஏலியன்களை வீழ்த்துவதைப் பார்த்து ரசிக்கிறான். திடீரென அவளுக்குப் பின்னே ஒரு ஏலியன் வந்து அவளை கொன்றுவிட்டு டாம் க்ரூஸை நோக்கி வருகிறது. என்ன செய்வது என்று தெரியாத டாம், எதையோ பிடித்து இழுக்க… வெடிகுண்டு வெடித்து அந்த ஏலியன் செத்துவிடுகிறது.

edge-of-tomorrow2செத்துப்போன ஏலியனின் ரத்தம் டாம் க்ரூஸ் முகத்தில் தெறித்து, அவன் ரத்தத்தில் கலந்துவிட…. திடீரென காலம் பின்னோக்கி சென்று… போருக்கு முந்தைய தினத்தில் விழித்து எழுகிறான்.  அதாவது செத்துப்போன ஏலியன் ஆல்பா வகையைச் சார்ந்தது. அது மரணம் அடையும் நேரத்தில் காலத்தை நிறுத்தி பின்னோக்கி சென்றுவிடுகின்றன. அதனால் அந்த ஏலியன்கள் மரணத்தில் இருந்து தப்பிவிட முடியும்.

Edge of Tomorrow

ஆல்பா ஏலியன் போலவே டாம் க்ரூஸும் ரத்தம் பட்டதால் தப்பிவிடுகிறான். மீண்டும் போருக்குச் செல்கிறான். இந்த முறை மீண்டும் அதேபோன்று போர் நடக்கும்போது எமிலியை காப்பாற்றிவிடுகிறான். ஆனால் இருவரும் பார்த்துப்பேசும்போது ஏலியனால் கொல்லப்பட்டு மீண்டும் பழைய காலத்தில் விழிக்கிறான். விழித்து எழுந்தால் போர் புரிவதற்கு முந்தைய நாளில் இருக்கிறான். ஏன் இப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் போர் நடந்து எமிலியை முழுமையாக காப்பாறும்போது, மீண்டும் செத்துப்போனால் என்னை பயிற்சிக் கூடத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்கிறாள்.

edge-of-tomorrow5அப்போதுதான் இதேபோன்று எமிலியும் முன்பு இருந்திருக்கிறாள் என்பது தெரியவருகிறது. அவளை சந்திக்கச் செல்கிறான். அவள் இப்போது நடப்பதை முழுமையாக அவனுக்கு விவரிக்கிறாள். நாம் இந்த ஆல்பாக்களை எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்பெற்று வந்துவிடும். இதற்கு தலைவன் போன்று இருக்கும் ஒமேகாவை அழிக்கவேண்டும் என்கிறாள். அத்துடன் ஒமேகாவின் கொடூரமான திட்டத்தையும் விவரிக்கிறாள்.

edge-of-tomorrow1அதாவது வேண்டுமென்றே தோற்பதுபோல் ஆல்பாக்கள் செத்துவிழுகின்றன, பின்வாங்குகின்றன. ஒரு கட்டத்தில் அத்தனை நாட்டு போர் வீரர்களும் ஒன்றுசேர்ந்து போருக்கு செல்லும்போது, ஒரே மூச்சில் அத்தனை மனிதர்களையும் அழிக்கும் எண்ணத்தில் ஒமேகா இருக்கிறது. அப்படியொரு சூழல் ஏற்படும்முன்னர் அந்த  ஒமேகாவை அழித்துவிட வேண்டும் என்று சொல்கிறாள். ஒமேகாவை அழிக்கவேண்டும் என்றால் கருவிகளை மிகவும் அற்புதமாக கையாளவேண்டும் என்றும் சொல்கிறாள்.

edge-of-tomorrow9சண்டை போடத் தெரியாது என்று தயங்கும் டாம் க்ரூஸ்க்கு அவளே சண்டை பயிற்சி அளிக்கிறாள். பயிற்சியின்போது கடுமையாக பலமுறை அடிபடுகிறான். அடிபட்டால் அவனால் தொடர்ந்து பயிற்சி எடுக்கமுடியாது என்பதால் சுட்டுக் கொல்கிறாள். டாம் மீண்டும் உயிர்பெற்று பயிற்சிக்கு வருகிறான். அப்புறமென்ன நடக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

கோழையாக இருக்கும் டாம் க்ரூஸ் வெகுசீக்கிரத்தில் பயிற்சிகளை எல்லாம் கற்றுக்கொண்டு ஒமேகாவுடன் மோதுவதற்கு கிளம்புகிறார். அந்தப் போராட்டத்தில் எத்தனை முறை சாகிறார், எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார் என்பதை திருட்டு டி.வி.டி. கிடைத்தால் பார்த்து கடுப்பாகலாம்.

edge-of-tomorrow6இப்போது கம்ப்யூட்டர் கேம்ஸ் விறுவிறுப்பாக விற்பனையாகிறது, பிரபலமடைந்துள்ளது என்பதற்காக அதையே சினிமாவாக பார்க்க முடியுமா? காலவோட்டத்தை நிறுத்துவது, பின்னோக்கி பயணிப்பது, ஆல்பா, ஒமேகா போன்ற காட்சி அமைப்புகளும் உப்புச்சப்பின்றி நகர்வதால் அதிரடி நாயகன் டாம் க்ரூஸ் படம்தான் பார்க்கிறோமா என்ற சந்தேகமும் எழுகிறது. வேற்றுகிரக உயிரினத்தையாவது சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கலாம். இரும்பு ஆக்டோபஸ் போன்று சுற்றிச்சுழல்வதைப் பாரக்கவே முடியவில்லை. போர் அடிக்குதுப்பா.

உங்களை எச்சரிப்பதற்காக இங்கே டிரைலர்

கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்

பின்குறிப்பு :

* ஜப்பான் எழுத்தாளர் ஹிரோஷி எழுத்தில் வெளியான ‘All You Need Is Kill’ என்ற நாவலின் உரிமையை, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மூன்று மில்லியன் டாலர்களுக்கு வாங்கி, புதிய திரைக்கதை அமைத்து உருவாக்கியதுதான் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ படம்.

* ஹீரோவாக நடிப்பதற்கு முதலில் ஒப்புக்கொண்ட பிராட் பிட், திடீரென தன்னுடைய எண்ணத்தை மாற்றிகொண்டு வெளியேறிவிட்டார். அதனால் சிக்கியவர்தான் டாம் க்ரூஸ்.

*  இந்தப் படத்தின் இயக்குனர் டாக் லிமென், ஸ்விங்கர்ஸ், மிஸ்டர் அன்ட் மிசஸ் ஸ்மித், ஜம்பர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்

Edge of Tomorrow  (Live. Die. Repeat.) is a 2014 American science fiction film directed by Doug Liman. It stars Tom Cruise, Emily BluntBill Paxton and Brendan Gleeson. The screenplay by Christopher McQuarrie, Jez Butterworth and John-Henry Butterworth is based on the 2004 Japanese novel All You Need Is Kill by Hiroshi Sakurazaka. Time Loop, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Watch at your risk, See at your risk, Tamil Hollywood

(Visited 560 times, 120 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>