ஜெனிஃபரைக் கட்டிக்கிட்டா 350 கோடி..?

Jennifer Lawrance money TH

Jennifer-Lawநயன்தாரா, தமன்னா, அனுஷ்கா போன்ற திறமைசாலி நடிகைகள் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதையே பெரிய விஷயமாக வாய் கிழியப் பேசுகிறோம். இப்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் தகவல்படி இந்த ஆண்டு அதிக வருமானம் பெறும் நடிகை அழகுப்புயல், ‘த ஹங்கர் கேம்ஸ்’ நாயகியான ஜெனிஃபர் லாரன்ஸ். அவரது இந்த ஆண்டு வருமானம் 52 மில்லியன் டாலராம். இதுதவிர படங்களின் வருமானத்தில் பங்கும் உண்டு.

sandraஇந்த அளவுக்கு சம்பளம் ஒரு நடிகை வாங்குவது முதல் முறையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் நம்ம அழகு தேவதை ஜெனிஃபர் லாரன்ஸ், அடுத்த வருடம் இந்த சாதனையையும் முறியடிப்பார் என்கிறார்கள். கடந்த வருடம் 51 மில்லியன் வாங்கி முதலிடத்தில் இருந்த ’பாட்டி’ சாண்ட்ரா புல்லக் இப்போது வெறுமனே 8 மில்லியன் மட்டுமே வாங்குகிறார்.

kristen-stewart2இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ‘அயர்ன் மேன்’ பட நாயகி ஸ்ஹார்லெட் ஜோகன்சன். இவரது சம்பளம் 35.5 மில்லியன். நமக்குத் தெரிந்த இன்னொரு கவர்ச்சி நாயகி டுவைலட் புகழ் கிறிஸ்டன் ஸ்டூவர்ட் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

25 வயதே ஆகும் ஜெனிஃபர் லாரன்ஸை நம்ம ஆட்கள் யாராவது காதலித்து கல்யாணம் முடித்து இந்தியாவுக்கு கூட்டிவந்தால், இந்திய நாட்டின் கடன் தொகையை இவரே தனித்து நின்று அடைத்துவிடுவார்.

தாய்நாட்டு பற்றுடன் டிரை பண்ணுங்கப்பா…

Jennifer Lawrance, Forbes, The World’s Highest-Paid Actresses 2015, Sandra Bullock, Scarlett Johansson, Kristen Stewart, Tamil Hollywood

(Visited 179 times, 9 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>