சேட்டைக்கார பாட்டி – பிரத்யேக அதிர்ச்சிப் படம் உள்ளே

sharon-stone-photoshoot-harpers-bazaar1

57 வயதில் எசகுபிசகு போஸ் தரும் ஷரான் ஸ்டோன்: 

ஐம்பதிலும் ஆசை வரும்னு நம்மாளுங்க பாட்டுப் பாடுறது நிஜம் என்பதை அவ்வப்போது ஹாலிவுட் ஆட்கள்தான் நிரூபித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த ஷரோன் ஸ்டோன்,  மீண்டும் இப்போது பத்திரிகைகளின் லைம்லைட்டிற்கு வந்திருக்கிறார். இப்போது அவர் வயது 57 என்பதும், இந்த வயதில் என்ன சேட்டை செய்திருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவில்லை என்றால் சினிமா உலகம் மன்னிக்காது.

அர்னால்டு நடித்த டோட்டல் ரிகால் படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகி இருந்தாலும், பேஸிக் இன்ஸ்டிண்ட் படம்தான் ஷரானை உலகப்புகழ் பெறச்செய்தது. அகில உலக ஆண்களையும் தட்டியெழுப்பும் கவர்ச்சிக்கன்னியான ஷரான் ஸ்டோனை சாதாரண கவர்ச்சிக் கன்னி என்று புறம் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் அவ்வப்போது விவகாரமான கவர்ச்சிப் படங்களை பத்திரிகைகளில் வெளிவரச் செய்து எந்த நேரமும் பரபரப்புக்கு இடையிலேயே இருப்பவர். இப்போது வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் டி.வி. பக்கம் ஒதுங்கியிருக்கிறார் என்றாலும் அந்தக் கால கவர்ச்சி சேட்டை மட்டும் குறையவே இல்லை.

sharon-stone-photoshoot-harpers-bazaarஅந்தக் காலத்தில் எப்படியெல்லாம் கவர்ச்சி காட்டினாரோ, அப்படியே இந்த வயதிலும் அதாவது தன்னுடைய 57 வயதிலும் தன் உடம்பை முழு நிர்வாணமாக காட்டியிருக்கிறார். அதை விதவிதமாக படம் எடுத்து அட்டையிலும் போட்டு பெருமைப்படுத்தி(?) இருக்கிறது இந்த பத்திரிகைக.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டால், ‘இது என் தன்னம்பிக்கையின் அடையாளம். நான் மூளையில் பிரச்னை ஏற்பட்டு பேசவே முடியாமல் போகுமோ என்றெல்லாம் பயந்தேன். எல்லா சிக்கல்களையும் தீர்ப்பதற்கு இந்த உடலும் முகமும்தான் எனக்கு கை கொடுத்திருக்கிறது. அதனால் என் அழகை காட்டுவதற்கு வயது தடையில்லை’ என்கிறார்.

பாட்டியானாலும் அழகிதான்.

Sharon Stone, Harpers Bazaar Magazine, Sharon Stone: ‘I have brain damage – deal with it’, Sharon Stone recalls effects of 2001 stroke, Sharon Stone Poses Nude at Age 57 in Harper’s Bazaar,  subarachnoid hemorrhage, Brain Hemorrhage, Tamil Hollywood

(Visited 361 times, 8 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>