ஏமாத்திட்டாரே நிவின் பாலி

ovs poster

பாக்கவே பாக்காதீங்க – ஒரு வடக்கன் செல்பி

இந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்திருக்கும் ஒரு வடக்கன் செல்பி படத்தை ஆஹா..ஓஹோ என்று கொண்டாடுகிறது மலையாளத் திரையுலகம். ஐந்து மொழிகளில் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்படவும் இருக்கிறதாம். மலையாளத்தின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துவரும் நிவின்பாலி நடித்தபடம் என்று ஆர்வமாக உட்கார்ந்தால், உப்பும் உறைப்பும் இல்லாத ஊறுகாய் போலஇருக்கிறது. செல்பி எடுப்பதன் விபரீதம், ஃபேஸ்புக் சிக்கல் போன்றவற்றை எல்லாம் கடுமையான விமர்சனம் செய்வதாக கதையளக்கிறார்கள்..

oru vadakkan selfie Tamil Hollywoodவங்கிக்கடனில் இன்ஜினியரிங் மாணவராக இருக்கும் நிவின்பாலி, படிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் சந்தோஷமாக செய்கிறார். அதனால் படிப்பு முடியும்போது மொத்தமே 42 அரியர்ஸ் இருக்கிறது. ஆனாலும் அதைப்பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பெண்களை சைட் அடிப்பதை சைட்ஜாப்பாக செய்து வருகிறார். தாய், தந்தையுடன் பேசும்போதும் பெண்களை ஓரமாகப் பார்த்து ஜொள்ளுவிடுகிறார்.

oru vadakkan selfie Tamil Hollywoodபடித்து எந்த சாதனையும் புரியமுடியாது என்பது உறுதியாக தெரிந்துவிடவே, சினிமா கனவை கையில் எடுத்துக் கொள்கிறார். ஒரே ஒரு குறும்படம் எடுத்துவிட்டால், யு டியூப்பில் ஏற்றி  லட்சம்லட்சமாக பணம் சம்பாதிக்கலாம். கௌதம் வாசுதேமேனன் உடனே கூப்பிட்டு உதவிஇயக்குனராக சேர்த்துக் கொள்வார். அஜித் பழக்கம் கிடைத்ததும் ஒரு படம் செய்து வாழ்க்கையில் செட்டில்ஆகலாம் என்று கனவு கண்டு செயலில் இறங்குகிறார்கள். அதுவும் வழக்கம்போல் ஊற்றிக்கொள்கிறது. இதுவரை நடந்தது எல்லாம் காமெடியாம். அதாவது இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று கிண்டல் செய்வதாக நினைத்து மொக்கை போடுகிறார்கள். ஒரு வழியாக பாதி படம் முடிந்துவிடுகிறது.

oru vadakkan selfie Tamil Hollywoodஇந்த நேரத்தில் சினிமா இலக்கணம் போன்று பக்கத்து வீட்டுக்கு அழகுப்பெண் மஞ்சிமா மோகன் (இவர்தான் சிம்புவின் அடுத்த படத்துக்கு ஜோடியாம். படம் வெளிவரும்போது வயதாகி விடக்கூடாது என்று இறைவனை பிரார்த்தனை செய்வோம்) வருகிறார். நண்பர்கள் வட்டாரத்தில் தனக்கும் மஞ்சுக்கும் காதல் என்று கதை கட்டுகிறார். அரியர்ஸ் ரிசல்ட் வருகிறது. அதிலும் மொத்தமாக ஃபெயில்.

oru vadakkan selfie Tamil Hollywood

அதனால் அப்பாவுக்குப் பயந்து(?) சென்னைக்கு கிளம்புகிறார். அவர் ஏறும் அதே வண்டியில் மஞ்சுவும் இருக்கிறார். உடனே மஞ்சுக்குத் தெரியாமல் ஒரு செல்பி எடுத்து, இருவரும் ஒன்றாக சென்னைக்குப் போகிறோம் என்று நண்பர்களுக்கு அனுப்புகிறார். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்குத் திரும்பிய பிறகுதான், அந்த செல்பி பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பது புரிகிறது. அதாவது மஞ்சுவும் நிவினும் சேர்ந்து ஊரைவிட்டு ஓடியதாக அனைவரும் நினைக்கிறார்கள். தன் மீது விழுந்த கறையைப் போக்குவதற்காக தோழனுடன் (இல்லைன்னா எப்படிங்க காமெடி வரும்) சென்னைக்கு கிளம்புகிறார். அங்கே தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்திவரும் வினித்சீனிவாஸுடன் சேர்ந்து மஞ்சுவைத் தேடுகிறார்கள்.

oru vadakkan selfie Tamil Hollywoodஒரு வழியாக அவரை கண்டுபிடிக்கிறார்கள். அத்துடன் கதை முடிந்துவிட்டது என்றுபார்த்தால், அவர் ஃபேஸ்புக்கில் ஒருவரை காதலித்து இரண்டு லட்சம் வரை பணம் கொடுத்திருப்பதாகவும், திருமணத்துக்கு காத்திருப்பதாகவும் சொல்கிறார். உடனே யார் என்றே தெரியாத அந்த நபரைத் தேடி நால்வரும் பயணம் செய்கிறார்கள். ஃபேஸ்புக் மூலம் பெண்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை சொல்கிறார்கள். ஒரு வழியாக மஞ்சு காதலித்த வீட்டுக்குப் போகும்போது, அவளை காதலித்த நபர் செத்து ஒரு வருடமாகிவிட்டது என்கிறார்கள். அப்படியென்றால் அந்தப் பெயரில் மஞ்சுவை காதலித்து பணம் கறந்தவன் யார் என்று மீண்டும் பயணம் செய்கிறார்கள். அடப்போங்கப்பா என்று கடுப்பைக் கிளப்பும் வகையில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து அவன் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திரும்புகிறார்கள்.

oru vadakkan selfie Tamil Hollywoodநம்மூர் பாபிசிம்ஹா படத்தில் என்ன கேரக்டரில் வருகிறார், நிவினும் மஞ்சுவும் காதல் செய்தார்களா என்பதை எல்லாம் படம் பார்த்த வேறுயாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

மலையாளத்தில் நல்ல படங்கள் மட்டும்தான் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை இந்தப் படம் உடைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அதனால் உங்களிடம் நேரமும் பணமும் இருந்தால் பானிபூரி சாப்பிட்டு நண்பர்களுடன் பேசுங்கள், இதைவிட சுவையாக இருக்கும்.

உங்களை எச்சரிப்பதற்காக இங்கே டிரைலர்

Oru Vadakkan Selfie, A Northern Selfie, Malayalam, comedy, thriller, road movie, G.Prajith, Vineeth Sreenivasan, Nivin Pauly, Manjima Mohan, Aju Varghese, Neeraj Madhav, Shaan Rahman, selfie,facebook, youtube, social network, Gautam Vasudev Menon, Gautham Menon, Ajith, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Watch at your risk, Tamil Hollywood

(Visited 490 times, 24 visits today)

Related posts

One thought on “ஏமாத்திட்டாரே நிவின் பாலி

  1. […] *ஒரு வடக்கன் செல்பி, ஜேக்கப்பின்டே சொர்க்கராஜ்யம் ஆகிய படங்களும் சீனிவாசன் கைவண்ணத்தில் உருவானதே. […]

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>