டயனோசர் சர்க்கஸ் பார்க்கலாம் வாங்க…

circusraptors

Jurassic World-Raptors1

விதவிதமான டயனோசர்களை வரிசையாக மூன்று படங்களில் ரசிகர்கள் பார்த்து சலித்திருப்பார்கள். அந்த தொழில்நுட்பங்களை குப்பையில் போட்டுவிடாமல், எதிர்காலத்தில் நடப்பதுபோல், ‘ஜுராசிக் வேல்டு’ (Jurassic  World) படத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்.

முதல் ஜுராசிக்பார்க் படத்தில் கைவிடப்பட்ட தீவை, இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் தீம்பார்க் உருவாக்கி நடத்துகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உலகெங்கும் இருந்து மக்கள் வந்து பார்த்து டயனோசர் செய்யும் சர்க்கஸ்களை கண்டு ரசிக்கிறார்கள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையத் தொடங்குகிறது. மீண்டும் எப்படி ரசிகர்களை கவர்வது என்று ஆராய்ச்சியாளர்கள் மூளையைக் கசக்குகிறார்கள்.

அதாவது கசக்குவதுபோல் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அனைத்து வில்லன்களும் செய்வதுபோல் நாலைந்து டயனோசர்களின் சக்திகளை ஒன்றிணைத்து ஒரே டயனோசர் உருவாக்குகிறார்கள். அப்புறமென்ன… அது மனிதர்களை வேட்டையாட…மனிதர்கள் அதனை வேட்டையாட… ஒரே களேபரம்.

குட்டி சைஸில் இருக்கும் மூன்று புத்திசாலியான டயனோசர்களை வைத்து ரசிகர்களுக்கு வித்தை காட்டும் நாயகன், அந்த குட்டிகளை வைத்து ராட்சஸ டயனோசரை  எப்படி அடக்குகிறான் என்பதை ஜூன் 15 அன்று திரையில் பார்க்கலாம்.

(Visited 74 times, 5 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>