லொள்ளுத் தாத்தாவுடன் ஜிலுஜிலு மயில்

up poster

பாக்காம விட்றாதீங்க – அப்:

தாத்தா, பாட்டிகளிடம் இருக்கும் பெரிய பிரச்னையே, நடக்கும் எல்லாவற்றையும் எதிர்மறை சிந்தனையுடன் பார்ப்பது. குட்டிப் பையன்களிடம் இருக்கும் மிகப்பெரிய சக்தி, எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பார்ப்பது. இந்த இரண்டும் ஒன்றுசேர்ந்தால் என்ன நடக்கும் என்பதுதான், ‘அப்’ அனிமேஷன் படத்தின் திரைக்கதை. குழந்தைகளைக் கவர்வதற்காக எடுக்கப்படும் அனிமேஷன் படங்களில், வயதான தாத்தாவை பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து வெற்றியும் கண்ட ’அப்’ படத்தை இனி படிக்கலாம்.

up 4ஒரு ராட்சஷ பறவையை கண்டுபிடித்திருக்கிறேன் என்கிறார் விஞ்ஞானி சார்லஸ் முண்ட்ஸ். ஆனால் அவரது கண்டுபிடிப்பு பொய் என்று நிரூபணமாகிறது. நிஜமாகவே அந்தப் பறவை பாரடைஸ் பால்ஸ் எனப்படும் பகுதியில் வசிக்கிறது, உயிருடன் கொண்டுவருகிறேன் என்று கிளம்புகிறார் சார்லஸ். அவரது தீவிர ரசிகையாக இருப்பவள் யெல்லி எனும் சிறுமி. அவளை 8 வயதான கார்ல் பிரிடெரிக் சந்திக்கிறான்.

up 3சார்லஸ் போலவே காட்டுக்குள் நுழைந்து பல்வேறு சாகசங்கள் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவளது கனவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறான் பிரடெரிக். இருவரும் வளர்ந்து திருமணம் முடிக்கிறார்கள். குழந்தை பெறமுடியாத யெல்லி மரணம் அடைந்துவிடுகிறாள். அவளுக்குப் பிறகு வாழ்க்கையை வெறுப்புடன் வாழ்கிறார் பிரடெரிக்.

up 9வயதாகி, தனிமையில் வாழும் பலூன் வியாபாரியான பிரடெரிக்கிற்கு 78 வயதாகும்போதுதான் கதை ஆரம்பமாகிறது. அக்கம்பக்கத்தினரை சகித்துக்கொள்ளும் மனநிலை இல்லாமல் சலிப்புடன் வாழ்ந்துவருகிறார். ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போய், முதியோர் இல்லத்திற்கு செல்லவேண்டிய சூழல் வருகிறது. அதனை விரும்பாத பிரடெரிக், இதுவரை யாரும் செய்யாத அற்புத காரியம் ஒன்றை செய்கிறார்.

up 10ஆயிரக்கணக்கான கேஸ் பலூன்களால் தன்னுடைய வீட்டை கட்டி, அதனை
அப்படியே தரையோடு பெயர்த்தெடுத்து, வானில் பறந்து செல்கிறார். தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பாரடைஸ் பால்ஸ் செல்ல விரும்புகிறார். பறந்துகொண்டிருக்கும் அந்தப் பயணத்தில் எதிர்பாராதவிதமாக ரஸ்ஸல் எனும் சிறுவனும் அவருடன் சேர்ந்துகொள்கிறான். பள்ளியில் நிறைய பேட்ஜ் வாங்கியிருக்கும் ரஸ்ஸலுக்கு, முதியோருக்கு உதவி செய்தவன் என்ற பேட்ஜ் தேவைப்படுவதால், பிரடெரிக்கை பார்க்கவந்து வீட்டுக்குள் மாட்டிக்கொண்டவன்.

up 7திடீரென இயற்கை சீற்றம் அதிகமாகி, சிக்கல் ஏற்பட்டு வீடு மாபெரும் அருவியின் பக்கத்தில் வீடு மாட்டிக்கொள்கிறது. ஒருவழியாக அதுதான் பாரடைஸ் பால்ஸ் என்பதை உணர்ந்து சந்தோஷமாகிறார் பிரடெரிக். அங்கே விசித்திரமான 13 அடிக்கும் உயரமான மயில் போன்ற ஒரு ஜிலுஜிலு பறவையைப் பார்க்கிறார்கள். ரஸ்ஸல் கொடுக்கும் சாக்லேட்டை விரும்பி சாப்பிட்டு இவர்களுடன் நட்பாகும் பறவைக்கு கெவின் என்று பெயர் சூட்டுகிறான் ரஸ்ஸல். அந்தப் பறவையைப் பிடிப்பதற்காக பல நாய்கள் ஒன்றிணைந்து செயல்புரிகின்றன. அந்த நாய்கள் கழுத்தில் இருக்கும் பட்டையின் உதவியுடன் பேசவும் செய்கின்றன.

up 2அந்த இயற்கைத் தீவில் பிரடெரிக் – ரஸ்ஸலுக்கு இடையே உறவு பலப்படுகிறது. இந்த நேரத்தில் ரஸ்ஸை கைதியாக பிடித்துக்கொள்கிறான் முண்ட்ஸ். வெகு காலத்திற்கு முன்பு பறவையைப் பிடிப்பதற்காக இங்கே வந்து காத்திருக்கும் விஞ்ஞானி முண்ட்ஸ்தான், சில நாய்களை உருவாக்கி, பறவையைப்  பிடிக்கும் முயற்சியில் இருப்பது தெரியவருகிறது.. கெவின் பறவையை அழைத்துவந்தால், சிறுவனை ஒப்படைப்பதாக பேரம் பேசுகிறான் முண்ட்ஸ். கொஞ்சமும் யோசிக்காமல் அந்த பேரத்துக்கு சம்மதம் சொல்கிறார் பிரடெரிக். ஆனால் ரஸ்ஸல் மிகவும் கோபமாகிறான். குஞ்சுகளூடன் வாழும் கெவினை பிடித்துச்செல்லக் கூடாது என்று கெஞ்சுகிறான்.

up 6இந்த நேரத்தில், யெல்லியின் பழைய புகைப்படத்தைப் பார்க்கும்போது, பின்னே ஒரு குறிப்பை பார்க்கிறார் பிரடெரிக். அந்தக் குறிப்பு அவரது சிந்தனையை, செயலை மாற்றியமைக்கிறது. அப்படி என்ன எழுதியிருந்தது, கெவின் பறவை காப்பாற்றப்பட்டதா, பிரடெரிக்கும் சிறுவனும் மீண்டும் ஊருக்கு எப்படித் திரும்பினார்களா என்பதை படம் பார்த்து கண்டுகளியுங்கள்.

இந்தப் படத்தின் இயக்குனர் பீட் டாக்டர் பார்வையில், ‘சாகஸம் என்பது வாழ்க்கையில் யாரும் செய்யாத கடினமான சாதனைகள் செய்வது அல்ல, உறவுகளுடன் இணைந்து ஆனந்தமாக வாழ்வதுதான்’ என்பதுதான் படத்தை ஒற்றை வரிக்கதை.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

குழந்தைகள் பார்த்து ரசிக்கும் அனிமேஷன் படத்தில் தாத்தாவைக் கொண்டுவந்தால் உருப்படாது என்று சொல்லப்பட்ட கணிப்புகளை மீறி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டுமின்றி, பல அவார்டுகளையும் தட்டிச்சென்ற படம்.

முழு படத்தையும் பார்க்க:

Up, 3-D, computer animated, comedy, drama, adventure film, Pixar, Animation, Walt Disney Pictures, Pete Docter, Edward Asner, Jordan Nagai, Christopher Plummer, South America, Bob Peterson, Michael Giacchino, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 191 times, 10 visits today)

Related posts

One thought on “லொள்ளுத் தாத்தாவுடன் ஜிலுஜிலு மயில்

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>